Thursday, January 29, 2009

"தன்யவாத்"


இன்று காலை எனக்கு ஒரு போன். இந்தியா நம்பர், அதுவும் டெல்லி கோட். எனக்கு யார்ரா டெல்லிலேர்ந்து கால் பண்றாங்க, ராங்க் நம்பராத்தான் இருக்கும்னு நெனச்சு பட்டன அமுத்தினா, "க்யா மே அறிவிலி ஜி சே பாத் கர் ரஹா ஹூன்?" அப்படின்னுது ஒரு கரகர குரல். நானும் எனக்கு தெரிஞ்ச "கோன் பனேகா க்ரோர்பதி" ஹிந்தில "ஹாங்க் ஜி" அப்படின்னேன்.

இதுக்கு மேல நமக்கு "கம்ப்யூட்டர் ஜி தாலா லகாவ்" மட்டும்தான் தெரியும் அப்படிங்கற்தால "Can you please speak in English, I am not that fluent in Hindhi" அப்படின்னு அவசர அவசரமா சொன்னேன்.

இதுக்கு மேல ஒரே ஒரு வாக்கியம் மட்டுந்தான் என் காதுல விழுந்துது.

நாந்தான் அதுக்கப்புறம் மயக்கம் போட்டு விழுந்துட்டனே.

அந்த வாக்கியம் " “You have been conferred with Padmashree award for your valuable contribution in tamil blogs”

ஒன்றறை மணி நேரம் கழித்து மயக்கம் தெளிஞ்சு, என்னடா இது ஒரே ஒரு Blog தான். அதிலயும் மூணே மூணு போஸ்ட் தான் போட்றுக்கோம். பின்னூட்டம் கூட நாலஞ்சு தான் எழுதிருக்கோம். அதுக்குள்ள் நம்ம திறமைக்கு இவ்வள்வு மரியாதையா?. அப்படின்னு ஒரு மாதிரி (ஒரு ஜக் பீரை ஒரே கல்ப்ல அடிச்சாப்புல) ஜிவ்வுன்னு இருந்துது.

எனக்கு வந்த நம்பருக்கு திரும்ப கால் பண்ணா, யாரோ செகரெட்டரி தான் ராஷ்டிரபாஷால பேசறா. ஒன்னும் புரியல.

இப்ப அவசரமா டிவி நியூஸ் பாக்க போய்ட்டிருக்கேன். மீதியெல்லாம் மீடியால பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

பின் குறிப்பு 1 – உங்கள் வாழ்த்துக்கள் எல்லாவற்றையும் மின்னஞ்சலில் மட்டும் அனுப்பவும். தொலைபேசி, அரசு அதிகாரிகள் எந்த நேரமும் கூப்பிடலாம் என்பதால் ஃப்ரீயாக வைத்திருக்க வேண்டும்.

பின் குறிப்பு 2 – என் ஊர் ஜம்மு காஷ்மீரோ பெயர் ஹஷ்மத் உல்லா கானோ கிடையாது.

பின் குறிப்பு 3 - இந்த Blog க்கு ஏன் இந்த டைட்டில் அப்படிங்கறீங்களா. எனக்கு தெரிஞ்ச இன்னொரு ஹிந்தி வார்த்தைய கூட சொல்லாம மயக்கம் போட்டுட்டனா, அதான் டைட்டில்லயாவுது சொல்லலாம்னு வெச்சேன்.

Wednesday, January 28, 2009

டக்குன்னு சிரிச்சேன்


ப்ளாஸ்டிக் பையிலே அடைச்ச கருங் குரங்கை பார்த்திருக்கியா?

இல்லியே...

இந்தா உன் ஐடி கார்ட்.


நன்றி-"அசத்த போவது யாரு" விளம்பரம்.