Thursday, February 19, 2009

பரிசல் போட்ட பதிவுக்கு எசப்பதிவு

(தாமிராவுக்கும்,ரமேஷ் வைத்யாவுக்கும் அப்றமா...)

என் பையன் கிட்ட ஒரே ஒரு வார்த்தை தான் கேட்டேன், கொட்டி தீத்துட்டான். ஹ்ம்ம்... பிஞ்சு மனசுல இவ்வளவு வேதனையா?

1.நான் கார்ட்டூன் பார்த்தா மட்டும் கண்ணு கெட்ரும்னு சொல்றீங்க. நீங்க மட்டும் கிரிக்கெட் மேட்ச் 10 மணி நேரம் தொடர்ந்து பாக்கறீங்க?

2. எப்பவுமே பொய் சொல்லக் கூடாதுன்னு சொல்றீங்க, ஆனா உங்க பாஸ் கால் பண்ணா, "அப்பா செல் போன மறந்துட்டு ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருக்கார்னு" சொல்ல சொல்றீங்க?

3. அன்றைய வேலையை அன்றைக்கே செய்யணும்னு சொல்றீங்க. ஆனா அம்மா பாத்ரூம் லைட் எரியலேன்னு சொன்னா, சண்டே பார்த்துக்கலாம்னு சொல்றிங்களே?

4. நான் ரப்பர், பென்சில் தேடினா எதையும் ஒழுங்கா இடத்துல வைக்கறதில்லன்னு திட்டற நீங்க, அப்பப்போ சாவி, பர்ஸ் எல்லாம் தேடறீங்களே?

5. நான்லாம் உன் வயசில எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு சொல்றீங்களே, உங்கப்பா அதே வயசுல இன்னும் எவ்ளோ அதிகமா கஷ்டப்பட்டார்னு சொல்வீங்களா?

6. பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கணும்னு சொல்ற நீங்க மட்டும், டிவில வர்ற ஒரு வயசான கறுப்பு கண்ணாடி தாத்தாவ பார்க்கறப்பல்லாம் கன்னா பின்னான்னு திட்டறீங்களே?

7. என் க்ளாஸ்ல ஃப்ர்ஸ்ட் ரேங்க் வாங்கற பையன, அவன் எவ்ளோ நல்லா படிக்கறான்னு சொல்றீங்க. ஆனா, உங்க ஆபிஸ்ல மேனேஜர் ப்ரமோஷன் வாங்கின ராமு அங்கிள, காக்கா புடிச்சே வாங்கிட்டான்னு சொல்றது கரெக்ட்டா?

8. கரெண்ட் வேஸ்டாவுது லைட்ட அணை, ஃபேனை அணைன்னு சொல்ற நீங்க மட்டும் ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் உக்காந்து மொக்க பதிவெல்லாம் படிக்கறீங்களே?

9. நான் தப்பா கணக்கு போட்டா அவ்வளவு திட்டற நீங்க, அம்மா பண்ற சாம்பார் நல்லா இல்லன்னா சத்தம் போடாம சாப்டுட்டு போறது ஏன்?

10. எக்ஸர்சைஸ் பண்ணனும், ஒடியாடி வெளையாடணும்னு சொல்ற உங்களுக்கு மட்டும் தொப்பை பெரிசாயிட்டே போவுதே?

இன்னும் நெறைய சொன்னான், ஆனா அதெல்லாம் போட்டா என் இமேஜ் ஸ்பாயிலாயிடும்னு
எடிட் பண்ணிட்டேன்.

பரிசல், தாமிரா மற்றும் ரமேஷ் வைத்யா பதிவுகளின் தொடர்ச்சி.

38 comments:

ரமேஷ் வைத்யா said...

சற்றும் சளைக்காத பதிவு! கூடுவிட்டுக் கூடு பாய்ந்து பையனாகவே மாறிவிட்டீர்கள்.

முரளிகண்ணன் said...

நல்லா இருக்குங்க

இராகவன் நைஜிரியா said...

ஹா... ஹா... என் பையன் கேட்க வேண்டிய கேள்விகள கேட்டுடீங்க...

ஒரு நல்ல விசயம் 10 கேள்வியோட நிறுத்திவிட்டீங்க... இல்லை என்றால், நிறைய அப்பாக்களின் மானம் கப்பலேறி போயிருக்கும்

சின்னப் பையன் said...

ஹாஹா... அருமையான கேள்விகள்... எதுக்கும் நம்மகிட்டே பதிலே கிடையாது!!!!!

வெட்டிப்பயல் said...

கலக்கல் பதிவு...
எல்லா கேள்விகளுமே அருமை :)

பாலராஜன்கீதா said...

:-)

சீமாச்சு.. said...

இன்ஸ்டெண்டா 10 கேள்விகளுக்கு மேலே பொழிஞ்சிட்டான்னா.. அவனுக்குள்ளே எவ்வளவு கேள்விகள் இருக்கும்? ஹூம்ம்ம்ம்ம்ம்

அறிவிலி said...

//ரமேஷ் வைத்யா said...
சற்றும் சளைக்காத பதிவு! கூடுவிட்டுக் கூடு பாய்ந்து பையனாகவே மாறிவிட்டீர்கள்.//

பையன் சொல்லித்தான் எழுதினேன்னா நம்ப மாட்டீங்களே..(கண்டு புடிச்சுட்டீங்களோ!!!!)

அறிவிலி said...

//முரளிகண்ணன் said...
நல்லா இருக்குங்க//

முரளி கணணண் - வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி..

அத்திரி said...

நகைச்சுவையா இருந்தாலும்...............உண்மை

அறிவிலி said...

//இராகவன் நைஜிரியா said...
ஹா... ஹா... என் பையன் கேட்க வேண்டிய கேள்விகள கேட்டுடீங்க...

ஒரு நல்ல விசயம் 10 கேள்வியோட நிறுத்திவிட்டீங்க... இல்லை என்றால், நிறைய அப்பாக்களின் மானம் கப்பலேறி போயிருக்கும்//

தந்தை குலத்தோட மானத்த காப்பாத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கில்ல..

வால்பையன் said...

//பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கணும்னு சொல்ற நீங்க மட்டும், டிவில வர்ற ஒரு வயசான கறுப்பு கண்ணாடி தாத்தாவ பார்க்கறப்பல்லாம் கன்னா பின்னான்னு திட்டறீங்களே?//

ஜூப்பரு....................

pudugaithendral said...

10 கேள்விகள் இதுவரைக்கும் 4 பேர் போட்டிருக்கீங்க.

வேற யாரும் போட்டிருந்தா எனக்கு ஒருலிங்க் கொடுங்க.

எல்லாத்தையும் தொகுத்து பத்திரமா வெச்சுக்கணும்.

அறிவிலி said...

//ச்சின்னப் பையன் said...
ஹாஹா... அருமையான கேள்விகள்... எதுக்கும் நம்மகிட்டே பதிலே கிடையாது!!!!!//

சின்ன பையனோட கேள்விகளுக்கு ச்சின்னப் பையனே
பதில் சொல்ல முடியலியா.. விடுங்க அவன் வளந்து தானா தெரிஞ்சுக்கட்டும்.

அறிவிலி said...

//வெட்டிப்பயல் said...
கலக்கல் பதிவு...
எல்லா கேள்விகளுமே அருமை :)//

மிக்க நன்றி.எல்லாம் உங்க வழித்தடம் பற்றித்தான்..

அறிவிலி said...

பாலராஜன்கீதா said...
:-)

வருகைக்கு நன்றி. (இது மாதிரி போட்டா ஏதாவது கோட் வேர்டா? பதிவுகளுக்கு நான் புதுசு, அதனால கேக்கறேன்.)

அறிவிலி said...

//Seemachu said...
இன்ஸ்டெண்டா 10 கேள்விகளுக்கு மேலே பொழிஞ்சிட்டான்னா.. அவனுக்குள்ளே எவ்வளவு கேள்விகள் இருக்கும்? ஹூம்ம்ம்ம்ம்ம்//
இனிமே நான் கேக்க மாட்டனே... சனியன தூக்கி பனியன்ல உட்ட கதையாயிடுது.

அறிவிலி said...

//அத்திரி said...
நகைச்சுவையா இருந்தாலும்...............உண்மை//

உண்மை. ஆனா ரொமப உறைக்குதே...

அறிவிலி said...

//வால்பையன் said...
//பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கணும்னு சொல்ற நீங்க மட்டும், டிவில வர்ற ஒரு வயசான கறுப்பு கண்ணாடி தாத்தாவ பார்க்கறப்பல்லாம் கன்னா பின்னான்னு திட்டறீங்களே?//

ஜூப்பரு....................//

நான் ரொம்ப ரசிச்சு போட்ட கேள்வி இது. என்னடா, யாருமே கண்டுக்கலியேன்னு நெனச்சேன். நன்றி...

அறிவிலி said...

//புதுகைத் தென்றல் said...
10 கேள்விகள் இதுவரைக்கும் 4 பேர் போட்டிருக்கீங்க.

வேற யாரும் போட்டிருந்தா எனக்கு ஒருலிங்க் கொடுங்க.

எல்லாத்தையும் தொகுத்து பத்திரமா வெச்சுக்கணும்.//

மொத்தம் 4. இன்னும் ஒன்னு இங்க இருக்கு.
வெட்டிப்பயல்: SW இஞ்சினயர்கள் மேனஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

narsim said...

நகைச்சுவைனு நீங்க லேபிள் போட்டாலும் ரொம்ப யோசிக்க வைக்கும் கேள்விகள்.

பரிசல்காரன் said...

narsim said...
நகைச்சுவைனு நீங்க லேபிள் போட்டாலும் ரொம்ப யோசிக்க வைக்கும் கேள்விகள்.//

Repettaey!

Nalla Irunthathunga!!

அறிவிலி said...

//narsim said...
நகைச்சுவைனு நீங்க லேபிள் போட்டாலும் ரொம்ப யோசிக்க வைக்கும் கேள்விகள்.//

ஆனது ஆயிப்போச்சு.. விடுங்க, நம்மளும் திருந்தப்போறதில்ல...அவன்களும் நம்ம பேச்ச கேக்க போறதில்ல.

பரம்பரையா ஒரு டயலாக் இருக்கு. "நாந்தான் இப்படி ஆயிட்டேன், நீயாவது ஒழுங்கா வரனும்னுதான்....." அப்படின்னு சொல்லி தப்பிச்சுக்க வேண்டியதுதான்.

அறிவிலி said...

//பரிசல்காரன் said...
narsim said...
நகைச்சுவைனு நீங்க லேபிள் போட்டாலும் ரொம்ப யோசிக்க வைக்கும் கேள்விகள்.//

Repettaey!

Nalla Irunthathunga!!//

அப்பாடா... ஆரம்பிச்சு வெச்ச ஆள காணமேன்னு கவலையா இருந்தேன். இப்பதான் நிம்மதி. நன்றிகள் பல.

அமுதா said...

:-))

ஷாஜி said...

ஒரு நல்ல விசயம் 10 கேள்வியோட நிறுத்திவிட்டீங்க... இல்லை என்றால், நிறைய அப்பாக்களின் மானம் கப்பலேறி போயிருக்கும்

Cable சங்கர் said...

உட்காந்து யோசிப்பாய்ங்களோ..? இதுவும் நல்லாத்தான்யா இருக்கு.. சபாஷ்

அறிவிலி said...

//அமுதா said...
:-))//

சிரிப்பி(ஸ்மைலி)க்கு நன்றி

அறிவிலி said...

//ஷாஜி said...
ஒரு நல்ல விசயம் 10 கேள்வியோட நிறுத்திவிட்டீங்க... இல்லை என்றால், நிறைய அப்பாக்களின் மானம் கப்பலேறி போயிருக்கும்//

ஆமாங்க, அத நெனச்சித்தான் அவன் சொன்னது எல்லாத்தையும் போடலே.

அறிவிலி said...

//Cable Sankar said...
உட்காந்து யோசிப்பாய்ங்களோ..? இதுவும் நல்லாத்தான்யா இருக்கு.. சபாஷ்//

ரூம் போடற அளவுக்கு இல்லன்னாலும், உக்காந்தாவது யோசிக்கணும் இல்லீங்களா.

Anonymous said...

நல்லாத்தான் இருக்கு. ஆனா பதில் சொல்ல முடியலியேனு வருத்தமா இருக்கு.

தமிழ் உதயன் said...

நெசமாலுமே சுப்பருஇங்கோவ்

நன்றி

தமிழ் உதயன்

Anonymous said...

கேள்வி பதில்களிலேயே பெஸ்ட் இது தான்.

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்குதுங்க:)!

மேவி... said...

sema padivu pa

இப்படி எல்லாம் எங்க அப்பா கிட்ட கேட்க முடியல.....
உங்க பையன் உங்களிடம் கேட்குறார்.....
ஆமா .... athukku நீங்க என்ன பதில் told

அபி அப்பா said...

//6. பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கணும்னு சொல்ற நீங்க மட்டும், டிவில வர்ற ஒரு வயசான கறுப்பு கண்ணாடி தாத்தாவ பார்க்கறப்பல்லாம் கன்னா பின்னான்னு திட்டறீங்களே?//

அது வியாதிடா கண்ணா வியாதி! நீயாவது இந்த விஷயத்திலே அப்பா பேச்சை கேட்காம இந்த் பெரியப்பா பேச்சை கேட்டு அந்த தாத்தாவுக்கு ரெஸ்பெக்ட் கொடுடா ராஜா!

நீ கேட்ட கேள்வியிலயே இது தான் டாப்பு கண்ணா டாப்பு!:-)))))

எட்வின் said...

விடைகளே இல்லா... கேள்விகளா கேட்டுபுட்டீங்க.(பையன் தான்!)
:)

அறிவிலி said...

//வடகரை வேலன் said...
நல்லாத்தான் இருக்கு. ஆனா பதில் சொல்ல முடியலியேனு வருத்தமா இருக்கு.//

வருத்த்ப்படாதீங்க, நம்மில் பலருக்கு பதில் சொல்ல தகுதி இல்லை.

//February 20, 2009 7:52 AM
தமிழ் உதயன் said...
நெசமாலுமே சுப்பருஇங்கோவ்

நன்றி

தமிழ் உதயன்//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

//February 20, 2009 9:22 AM
pukalini said...
கேள்வி பதில்களிலேயே பெஸ்ட் இது தான்.//

நன்றி... யப்பா எல்லாரும் வந்து ஒருக்கா ரீப்பீட்டு போட்டுட்டு போங்க.

//February 20, 2009 5:24 PM
ராமலக்ஷ்மி said...
நல்லாயிருக்குதுங்க:)!//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

//February 20, 2009 6:33 PM
MayVee said...
sema padivu pa

இப்படி எல்லாம் எங்க அப்பா கிட்ட கேட்க முடியல.....
உங்க பையன் உங்களிடம் கேட்குறார்.....
ஆமா .... athukku நீங்க என்ன பதில் told//


பதிலா... ரெண்டு நாளா அவன் மூஞ்சியவே பார்க்க முடியலே. பதில் எங்க சொல்றது.


//February 20, 2009 8:53 PM
அபி அப்பா said...
//6. பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கணும்னு சொல்ற நீங்க மட்டும், டிவில வர்ற ஒரு வயசான கறுப்பு கண்ணாடி தாத்தாவ பார்க்கறப்பல்லாம் கன்னா பின்னான்னு திட்டறீங்களே?//

அது வியாதிடா கண்ணா வியாதி! நீயாவது இந்த விஷயத்திலே அப்பா பேச்சை கேட்காம இந்த் பெரியப்பா பேச்சை கேட்டு அந்த தாத்தாவுக்கு ரெஸ்பெக்ட் கொடுடா ராஜா!

நீ கேட்ட கேள்வியிலயே இது தான் டாப்பு கண்ணா டாப்பு!:-)))))//

"ஹையா... எனக்கு ஒன் மோர் பெரியப்பா" அப்படிங்குறான்.

//February 20, 2009 8:56 PM
எட்வின் said...
விடைகளே இல்லா... கேள்விகளா கேட்டுபுட்டீங்க.(பையன் தான்!)
:)//

என் பரீட்சையிலயும் இப்படித்தான் கேக்கறாங்கன்னு சொல்றான்.

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.