பார்க்கும் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் பார்த்தவர்கள் திரும்பவும் ரசிப்பதற்கும்...
குழலினிது, யாழினிது என்பர் இதனைக் கேளாதோர்.
விஜய் டிவியில் வந்த சூப்பர் சிங்கர்-2008 ஆரம்பித்த வருடத்தில் நன்றாக இருந்தாலும் ஜவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வாக இழுத்து எப்படா முடியும் என்று அலுக்கும் அளவுக்கு ஆக்கிவிட்டார்கள். நான் அவ்வளவாக ரசிக்காத அஜீஷ் வேறு வெற்றி பெற்று என்னை வெறுப்பேத்தினார்.
இப்போது நடக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியரில் பல சுவாரசியமான விஷயங்கள் நடக்கிறது.அதுவும் குழந்தைகளின் பாடல்களைவிட அவர்களின் வெகுளித்தனமான சந்தோஷங்கள், ஆச்சரியங்கள்,கோபங்கள், சோகங்கள் இவற்றையெல்லாமும் ரசிக்க முடிகிறது.
ஜூனியர்களெல்லாம் சீனியர்களாக மாறுவதற்குள்ளாக நிகழ்ச்சியை முடித்துவிடுவார்களா என்று பார்க்க வேண்டும்.
டிஸ்கி 1: விடியோவை முழுதும் பார்த்தால்தான் இடுகையின் தலைப்பு காரணம் புரியும்.
டிஸ்கி 2: இந்த நிகழ்ச்சியை நடத்தும் டிடி அணியும் உடைகளால் பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளுக்கு வேறு ஏதாவது நினைப்பு வந்துவிடக்கூடாதே என்ற பயம் எனக்கு நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே உண்டு. யாராவது அவரிடம் சொன்னால் பரவாயில்லை.
14 comments:
//இந்த நிகழ்ச்சியை நடத்தும் டிடி அணியும் உடைகளால் பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளுக்கு வேறு ஏதாவது நினைப்பு வந்துவிடக்கூடாதே என்ற பயம் எனக்கு//
எனக்கு அப்படி வேறு எந்த நினைப்பும் வரலையே??
ஆஹா... ஸ்ரீகாந்த் நீங்க சொன்னது போல் மிகவும் கவர்கின்றான்.
வருங்காலத்தில் நிச்சயம் பெரிய ஆளாக வருவதற்கான சாத்தியங்கள் தெரிகின்றன.
/அப்பாவி முரு said...
//இந்த நிகழ்ச்சியை நடத்தும் டிடி அணியும் உடைகளால் பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளுக்கு வேறு ஏதாவது நினைப்பு வந்துவிடக்கூடாதே என்ற பயம் எனக்கு//
எனக்கு அப்படி வேறு எந்த நினைப்பும் வரலையே??/
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
@அப்பாவி
சில குழந்தைகள் சீக்கிரமே மறந்துவிடும் அல்லது பிடிக்காமல் போய்விடும். நீங்கள் அந்த ரகமாக இருக்கும்.:)))
வாங்க ராகவன்...நன்றி.
@நிஜமா நல்லவன்
அவரு அப்பாவிங்க...
-:)
நல்ல ரசனை.
இதற்கு அடுத்த ரவுண்டில் இந்தப்பையன் பாடிய போது இவன் முதல் ஆளாக வந்ததால் டிவியை ஆன் செய்வதற்குள் மிஸ் பண்ணிவிட்டேன். அந்த கிளிப்பிங் கிடைத்தால் மறக்காமல் அதையும் பதிவிடவும்.
//ஆதிமூலகிருஷ்ணன் said...
நல்ல ரசனை.
இதற்கு அடுத்த ரவுண்டில் இந்தப்பையன் பாடிய போது இவன் முதல் ஆளாக வந்ததால் டிவியை ஆன் செய்வதற்குள் மிஸ் பண்ணிவிட்டேன். அந்த கிளிப்பிங் கிடைத்தால் மறக்காமல் அதையும் பதிவிடவும்.//
நிச்சயமா ட்ரை பண்றேன் ஆதி.
//
அவங்களோட திங்க்ஸ அவங்களே தொட்டுக்கணும், நம்மளோட திங்க்ஸ நம்மளே தொட்டுக்கணும்
//
இது சொல்லிக்கொடுத்துச் சொன்னது போல் தெரிகிறது.
///வலசு - வேலணை said...
//
அவங்களோட திங்க்ஸ அவங்களே தொட்டுக்கணும், நம்மளோட திங்க்ஸ நம்மளே தொட்டுக்கணும்
//
இது சொல்லிக்கொடுத்துச் சொன்னது போல் தெரிகிறது.///
அவ்வளவு பெரிய பாடலை (சொல்லிக் கொடுத்த) சரியாக பாடும்போது ஏன் இந்த இரண்டு வரிகளை பேசுவதற்கு தடுமாற போகிறான். எனக்கு என்னமோ அந்த குழந்தையின் இன்னோசென்ஸ்தான் தெரிந்தது.
எனக்கும் சூப்பர் சிங்கரில் அஜீஷ் அவ்வளவாக பிடிக்கவில்லை. ஒரிஜினாலிட்டி அவரிடம் இல்லை. சிறுவன் கொள்ளை சுட்டி. வெற்றி பெற வாழ்த்துக்கள்
தல,நேத்து அந்த அரபிக்கடலோரம் பாடினான். பார்த்திஙக்ளா? கலக்கறான்
@கார்க்கி
இஙக ஒரு வாரம் லேட்டாதாங்க வரும். அவன் ட்ரம்ஸ் வாசிக்கறதையே இன்னிக்குதான் பாக்கப் போறோம்.
Post a Comment
எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.
ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.