Tuesday, November 10, 2009

மெகா தொடர்

இந்த தொடர்பதிவை போட வேண்டாமென்றுதான் நினைத்தேன். நர்சிம் மாதிரி பெரியவர்களே போடுவதாலும், வேறு ஒன்றும் எழுதுவதற்கு இல்லாததாலும், முக்கியமாக மணிகண்டன் அவர்களின் அழைப்பை ஏற்பதற்காகவும்....

1. A – Available/Single? : Not Single but... (நெனப்புதான் பொழப்ப கெடுக்குது)

2. B – Best friend? : என் அனைத்து நண்பர்களும்

3. C – Cake or Pie?: நல்லா இருந்தா எல்லா கண்றாவியையும் சாப்புட வேண்டியதுதானே.

4. D – Drink of choice? : உசிலை மணி "பேஷ்.. பேஷ்.."னு சொல்லிண்டே குடிப்பாரே அது

5. E – Essential item you use every day? : அண்டர்வேர்

6. F – Favorite color? : நீலம், மஞ்சள், பச்சை, சிவப்பு (சே...சே.. நீங்க நெனைக்கற மாதிரி இல்லீங்க..)

7. G – Gummy Bears Or Worms?: ? யாரு இத முதல்ல ஆரம்பிச்சாங்களோ தெரியல.. Gummi Bears என்று இருக்க வேண்டும்.
இது என்னமோ மிட்டாயாமே???? (நன்றி - கூகிளாண்டவர்)
இது வரைக்கும் சாப்டதில்ல.

8. H – Hometown? - வயலின் மேதை ஜெயராமன் ஊர்.

9. I – Indulgence? - பெரும்பாலான பதிவர்களுக்கும் இருப்பதே

10. J – January or February? February - அதே கூலிக்கு கம்மி நாளு வேல செஞ்சா போதும்.

11. K – Kids & their names? :ஹரீஷ்

12. L – Life is incomplete without? - Enjoyment

13. M – Marriage date? நான்: "ஏம்பா? நம்ம கல்யாண நாள் எது?"
என் மனைவி :"ம்க்க்கும்ம்... நான் நல்லது நடந்த நாள மட்டுந்தான் நெனப்புல வெச்சுக்கறது"


14. N – Number of siblings? 2

15. O – Oranges or Apples? லோங்கன் (Longan)

16. P – Phobias/Fears? : ஏனைய பொழுதுபோக்குகளை விழுங்கி கொண்டிருக்கும் பதிவுலகம்

17. Q – Quote for today? : 64.85 US $ (எங்க கம்பெனியோட இன்னிக்கு Stock market Quote)

18. R – Reason to smile? : எதிரில் வருபவர்களின் ஸ்மைல்

19. S – Season? இந்த ஊர்ல அப்படி ஒண்ணுமே கெடையாது. ஆனா வின்டர் புடிக்கும்.

20. T – Tag 4 People? ஒபாமா, ராஜபக்ஷே, ராகுல் காந்தி, ஜே.கே.ரித்தீஷ்.
தனித் தனியாக மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன்.

21. U – Unknown fact about me? நான் கிண்டர் கார்டனில் படித்ததே இல்லை. நேரடியாக ஒண்ணாம்புதான். (என்னா ஒரு சாதனை ????)

22. V – Vegetable you don't like? வாழைத் தண்டு (அது போல கால் இருந்தா பார்த்து ரசிப்பேன்)

23. W – Worst habit? வீட்ல இருந்தா டிவி சத்தம் இருக்கணும்

24. X – X-rays you've had? : இருபத்தாறுல இதுதான் ரொம்ப மோசம்.

25. Y – Your favorite food? :) என் மனைவியின் கையால் கிடைக்கும் எல்லா உணவுகளும்
(என்னாது.. சோப்பு வாசனை அடிக்குதா???)

26. Z – Zodiac sign? சிங்கிளா வருமே, அதுதான்

ஆசைக்குரியவர்: என் சீமந்த புத்திரன்

இலவசமாய் கிடைப்பது: காத்து (ஹ்ம்ம் எத்தன நாளைக்கோ?)

ஈதலில் சிறந்தது: அறிவு

உலகத்தில் பயப்படுவது: அதென்ன இங்கிலிபீசுல ஒரு வாட்டி தமிழுல ஒரு வாட்டி

ஊமை கண்ட கனவு: குரலுடன் இருக்கும்

எப்போதும் உடனிருப்பது: SEE 5 ABOVE

ஏன் இந்த பதிவு: மணிகண்டனின் அன்பான மிரட்டல்.

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: நட்பு

ஒரு ரகசியம்: என் உண்மையான பெயர் அறிவிலி அல்ல. என் பெற்றோருக்கு நான்
இப்படி இருப்பேன் என்று தெரியாததால் வேறு பெயர் வைத்துவிட்டார்கள்.

ஓசையில் பிடித்தது: மழலையின் சிரிப்பு

ஔவை மொழி ஒன்று: ஆறுவது சினம்

(அ)ஃறிணையில் பிடித்தது: கணிணி

13 comments:

சுடுதண்ணி said...

சுவையாக சொல்லிருக்கீங்க. இப்பதிவு மூலம் உங்களைப்பற்றி மேலும் அறிந்து கொண்டேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

உங்களுக்கு ஒரு விஷயம் இருக்கிறது. பதிவுக்கு வரவும்.

அறிவிலி said...

//சுடுதண்ணி said...
சுவையாக சொல்லிருக்கீங்க. இப்பதிவு மூலம் உங்களைப்பற்றி மேலும் அறிந்து கொண்டேன்.//

நன்றி, சுடுதண்ணி (பெயர் காரணம்?????)

அறிவிலி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
உங்களுக்கு ஒரு விஷயம் இருக்கிறது. பதிவுக்கு வரவும்.//

விருதுக்கு நன்றி ஆதி.

இலால்குடி பினாத்தல்கள் said...

ஊமை கண்ட கனவு: குரலுடன் இருக்கும்
நீங்கள் சொன்ன மேற்கண்ட வரி திடுக்கிட வைத்து நிறைய சிந்திக்க வைத்து விட்டது.

Quote for today?
Essential item you use every day? : அண்டர்வேர்
உயர் தரமான நகைச்சுவை.

வலசு - வேலணை said...

//
F – Favorite color? : நீலம், மஞ்சள், பச்சை, சிவப்பு (சே...சே.. நீங்க நெனைக்கற மாதிரி இல்லீங்க..)
//
நல்ல கலர்ரசிகனாக (கவனிக்கவும் “கலா” ரசிகன் அல்ல) இருப்பீங்க போல.
நான் நிறத்தைத்தான் சொன்னேன். :-)

Mahesh said...

ம்ம்ம்.... நீங்களும் மாட்டிக்கிட்டீங்களா? நல்லா வேணும் :) இதுக்குத்தான் பிரபல பதிவர் ஆகாதீங்கன்னு தலதலயா அடிச்சுக்கிட்டேன்... கேட்டாத்தானே.... இப்ப பாருங்க... இப்பிடி கோக்குமாக்கா கேள்வி கேட்டு "பேருதான் அப்பிடின்னு நெனச்சா.. .ஆளே அப்பிடித்தான் போல..."ன்னு கன்ஃபர்ம் பண்ணிட்டாங்க இல்ல?

jokes apart... சூப்பரா இருக்கு... உங்க அண்ணாத்தையே பாராட்டிட்டாரே !!!

விருதுக்கு வாழ்த்துகள் !! "ருசிகரம்"னு குடுத்துருக்காரே... "சாலட்" பதிவுகளுக்காக இருக்குமோ?

அறிவிலி said...

//வலசு - வேலணை said...
//
F – Favorite color? : நீலம், மஞ்சள், பச்சை, சிவப்பு (சே...சே.. நீங்க நெனைக்கற மாதிரி இல்லீங்க..)
//
நல்ல கலர்ரசிகனாக (கவனிக்கவும் “கலா” ரசிகன் அல்ல) இருப்பீங்க போல.
நான் நிறத்தைத்தான் சொன்னேன். :-)//

நன்றி வலசு வேலணை

நான் கலாவுக்கும் ரசிகன்தான். நல்ல டான்ஸ் மாஸ்டர்.

அறிவிலி said...

//Mahesh said...
ம்ம்ம்.... நீங்களும் மாட்டிக்கிட்டீங்களா? நல்லா வேணும் :) இதுக்குத்தான் பிரபல பதிவர் ஆகாதீங்கன்னு தலதலயா அடிச்சுக்கிட்டேன்... கேட்டாத்தானே.... இப்ப பாருங்க... இப்பிடி கோக்குமாக்கா கேள்வி கேட்டு "பேருதான் அப்பிடின்னு நெனச்சா.. .ஆளே அப்பிடித்தான் போல..."ன்னு கன்ஃபர்ம் பண்ணிட்டாங்க இல்ல?

jokes apart... சூப்பரா இருக்கு... உங்க அண்ணாத்தையே பாராட்டிட்டாரே !!!

விருதுக்கு வாழ்த்துகள் !! "ருசிகரம்"னு குடுத்துருக்காரே... "சாலட்" பதிவுகளுக்காக இருக்குமோ?//

"யாரப் பாத்து...,பிரபல பதிவர்னு சொன்னீங்க????"

போனா போவுதுன்னு உங்கள தொடர கூப்புடாம வுட்டா, கிண்டலா பண்றீங்க.. பரிசல் கூப்புட்டது என்னாச்சு? அவருக்கு ரிமைண்டர் அனுப்பவா?

Tamil Home Recipes said...

மிகவும் அருமை

அறிவிலி said...

//Tamil Home Recipes said...
மிகவும் அருமை//
நன்றி

பித்தனின் வாக்கு said...

அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு நன்றி.

அறிவிலி said...

//பித்தனின் வாக்கு said...
அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு நன்றி.//

மணிகண்டன் அழைத்ததற்கு நன்றி கூறியதற்கு நன்றி.:)))))

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.