Friday, July 16, 2010

"டீலா நோ டீலாவில் கலந்து கொள்ள"

மு.கு. :

ரியாலிட்டி ஷோ என்று சொல்லிவிட்டு "டீலா நோ டீலா" நிகழ்ச்சியில் நடக்கும் செண்டிமென்ட் காட்சிகளால்
க(ல)வரப்பட்டு தோன்றிய கற்பனையே இந்த பதிவு.
*************************************************************************************
போன் மணி அடிக்கிறது..

"ஹலோ, ராமசாமி ஹியர்"

"சன் டிவிலேர்ந்து பேசறோம்,டீலா நோ டீலா நிகழ்ச்சியில கலந்துக்க ஆள் செலக்ட் பண்றோம்"

"அடடே, ரொம்ப சந்தோஷங்க"

"இப்ப கேக்கற கேள்விக்கெல்லாம் நீங்க சொல்ற பதில்லேர்ந்துதான் நாங்க செலக்ட் பண்ணுவோம்."

"கேளுங்க சார்"

"வீட்ல எத்தன பேருங்க இருக்காங்க?"

"இப்போதைக்கு நான் மட்டுந்தாங்க இருக்கேன், மத்தவங்கள்ளாம் வெளியில போயிருக்காங்க."

"அது இல்லைங்க. உங்க குடும்பத்துல மொத்தம் எத்தன பேரு?"

"அஞ்சு பேருங்க, நானு, என் மனைவி, பையன் அப்பறம் எங்க அப்பா, அம்மா."

"அய்யய்யோ, எல்லாருமே இருக்காங்களா...,எல்லாருமே ஒரிஜினல்தானே?"

"என்னங்க கேக்கறீங்க!!!! இதுல கூட டூப்ளிகேட்லாம் இருக்கா என்ன?"

"அதில்லீங்க சொந்த அப்பா, அம்மாவா இல்ல தத்து எடுத்தாங்களா? "

"சேச்சே... அக்மார்க் ஒரிஜினல் அப்பா அம்மாதாங்க."

"உங்க மனைவி? கல்யாணம் ஆயிருச்சா?"

"என்னங்க இது இவ்வளவு அபத்தமா கேக்கறீங்க?"

"இல்லைங்க, லிவிங் டுகெதர் மாதிரி ஏதாவது?"

"அதெல்லாம் இல்லீங்க.முறையா கட்டிகிட்டதுதான்"

"லவ் மேரேஜா? ஓடி கீடி போய் கல்யாணம் பண்ணீங்களா?"

"அதுவும் இல்லீங்க, வீட்ல பாத்து பண்ணி வெச்சதுதாங்க"

"ஹ்ம்ம்... ஒண்ணும் ஒத்து வரலியே.சரி... பையன், உங்க பையன்தானே?"

"யோவ்?"

"அடடே, தப்பா புரிஞ்சுகிட்டீங்களா? ஏழை குழந்தை எதுவும் தத்து எடுத்திருக்கீங்களோன்னு கேட்டேன்."

"சொந்தமா, கல்யாணமாயி எண்ணி ஒம்போது மாசத்துல பெத்த புள்ளதான்."

"ப்ச்... அப்படியா?"

"சம்பாத்தியமெல்லாம் எப்படிங்க? சாப்பாட்டுக்கெல்லாம் எதுவும் கஷ்டமா?"

"கடவுள் புண்ணியத்துல, நாங்க ரெண்டு பேருமே வேலைக்கு போய், போதுமான அளவுக்கு சம்பாதிக்கறோங்க."

"போச்சு, இதுலயும் ஒரு பிரச்னையும் இல்லியா?"

"வீட்ல யாருக்கும், எதுவும் உடம்புல பிரச்னை இருக்கா?"

"நாலு நாளா பையனுக்கு அரை மணிக்கு ஒருவாட்டி கொஞ்சம் தண்ணியா போவுது.
அப்பா கூட நீர் பிரியும்போது கொஞ்சம் எரிச்சலா இருக்குன்னு போன வாரம் சொன்னாரு."

"இதெல்லாம் இல்லீங்க, பெரிசா ஏதாவது? ஹார்ட், கிட்னி , கேன்சர்... இப்படி ஏதாவது?"

"அதெல்லாம் ஒண்ணும் கெடையாதுங்க"

"சரிங்க.. அப்ப நான் வேற ஆளத்தான் பாக்கணும்."

"ஏங்க நான் கலந்துக்க முடியாதா, டிவியில வரலாமேன்னு பாத்தேன்."

"வீட்ல, எதுவும் பெரிசா பிரச்னை வந்தா இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க, வேண்ணா
அப்ப கன்சிடர் பண்ணலாம்."

*********************************************************************************

கடை வீதியில் இரு பெண்கள்

"என்னது, டீலா நோ டீலா நிகழ்ச்சியில கலந்துக்க போறியா?"

"ஆமா,ஏன்?"

"சொல்லவே இல்ல, ஒன் புருஷன் ஒன்னய விட்டு ஓடிப்போனது எனக்கு தெரியாதே"


ஆஸ்பத்திரியில் நோயாளியும் டாக்டரும்

"டாக்டர், இன்னிக்கு மட்டும் என் மாமாவ ஒரு ரெண்டு அவர் வெளியில போயிட்டு வர அனுமதி குடுங்க"

"என்னங்க இது,அவருக்கு கிட்னில பராப்ளம்.இப்பவோ அப்பவோன்னு ஐ.சி.யு ல இருக்காரு.வெளில எதுக்கு போவணும்?

டீலா, நோ டீலா நிகழ்ச்சில கலந்துக்க சன் டிவிலேர்ந்து கூப்டுருக்காங்க டாக்டர்.

வீட்டில் கணவனும் மனைவியும்

"என்னம்மா, போன்ல யாரு? ஏன் பேசாமயே கட் பண்ணிட்ட?

"பின்ன, சன் டிவிலேர்ந்து டீலா நோ டீலா நிகழ்ச்சியில கலந்துக்க கூப்புடறாங்க.நம்ம வீட்ல எல்லாரும் நல்லா இருக்கறது புடிக்கல போல."

26 comments:

Thamira said...

பின்னிட்டீங்க.. இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன். ரொம்ப அநியாயம் பண்றானுங்க இல்ல.?

அறிவிலி said...

@ஆதிமூலகிருஷ்ணன்

ஆமாங்க.. தாங்க முடியல.

Robin said...

:)

Mahesh said...

ஹ்ம்ம்ம்ம்...... சில எபிசோடுகள் ரொம்பவே கேவலமா இருந்தது.... இந்த விளையாட்டோட ஃபார்மட் புரிஞ்சுக்கறதுக்காக ரெண்டு மூணுதான் பாத்தேன். அப்பறம் பாக்கறதையே விட்டுட்டேன்.

goma said...

கிறுக்கித் தள்ளினாலும் நல்லாத்தான் இருக்கு கிறுக்கலலான நக்கல்

goma said...

நல்ல ஆர்ரோக்கியமான நக்கல்

அறிவிலி said...

@Mahesh

நான் ஒரு எபிசோடு கூட விடாம பாப்பேன். இப்ப பாருங்க ஒரு போஸ்டுக்கு ஆச்சு

Anonymous said...

ஹா ஹா. அந்த நிகழ்ச்சியே நல்ல காமெடி.

உங்க பதிவு அதவிடக் காமெடி.

அறிவிலி said...

@Robin

Thanks

அறிவிலி said...

@Goma

நன்றி & நன்றி

அறிவிலி said...

@ வாங்க அண்ணாச்சி

நிகழ்ச்சி ட்ராஜடின்னு இல்ல நெனச்சேன்.

ஜெகதீசன் said...

ஹா ஹா. அந்த நிகழ்ச்சியே நல்ல காமெடி.

உங்க பதிவு அதவிடக் காமெடி.

அறிவிலி said...

//ஜெகதீசன் said...
ஹா ஹா. அந்த நிகழ்ச்சியே நல்ல காமெடி.

உங்க பதிவு அதவிடக் காமெடி.//


அண்ணாச்சி கமெண்ட அப்படியே போட்ருக்கீங்க. தமிழ்ல உங்ககளுக்கு புடிக்காத வார்த்தை ரிப்பீட்டா?
:-)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா... ரெம்ப கொடுமையோ... நான் பாத்ததில்லைங்க... இங்க இங்கிலீஷ்ல பாத்து இருக்கேன்... தமிழ் version பாக்க வாய்ப்பு கெடைக்கல... நீங்க கலாய்க்கரத பாத்தா ஒரு முறை பாக்கலாம்னு தோணுது... லிங்க் கெடைக்குதான்னு பாக்குறேன்...ஹா ஹா ஹா

Ravichandran Somu said...

அறிவிலி அண்ணே,

இப்பத்தான் படித்தேன். கலக்கல்.....

//எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.//

என்ன இப்படி பயமுறுத்திரூங்க! நான் பின்னூட்டம் போட்டதலால் தப்பித்தேன் :)

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

VISA said...

:)

அறிவிலி said...

வாங்க, அ.தங்கமணி,

தேடிப் போய் வாங்கிக்கறேன்னு சொல்றீங்க.நான் தடுக்க விரும்பல.முடிஞ்சா ஒரு க்ளிப்பிங் அனுப்ப ட்ரை பண்றேன்.

@ரவிச்சந்திரன் - நன்றி. :-)

அறிவிலி said...

@VISA

நன்றி

கண்ணகி said...

சிரிப்பு வருது.....சிரிப்பு வருது....சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது....

அறிவிலி said...

@கண்ணகி

நன்றி.

Sweatha Sanjana said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

Unknown said...

சூப்பரப்பு

அறிவிலி said...

@ஹாஜா மொஹைதீன்

நன்றி

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

டீலா நோ டீலா பார்த்தால் இந்த பதிவு நினைவுக்கு வரும்..!
பதிவுலகத்துக்கு புதியவன்..!எனது பக்கங்கள் தங்கள் பார்வைக்கு..!
தங்களை போன்றவர்களின் பின்னூட்டங்கள்..!என் எழுத்து ஆர்வத்துக்கு தூண்டுகோளாக இருக்கும்.
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரொம்ப நல்லா இருக்கு!

nondhavan said...

நல்ல கற்பனை மச்சி ...

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.