Thursday, January 29, 2009

"தன்யவாத்"


இன்று காலை எனக்கு ஒரு போன். இந்தியா நம்பர், அதுவும் டெல்லி கோட். எனக்கு யார்ரா டெல்லிலேர்ந்து கால் பண்றாங்க, ராங்க் நம்பராத்தான் இருக்கும்னு நெனச்சு பட்டன அமுத்தினா, "க்யா மே அறிவிலி ஜி சே பாத் கர் ரஹா ஹூன்?" அப்படின்னுது ஒரு கரகர குரல். நானும் எனக்கு தெரிஞ்ச "கோன் பனேகா க்ரோர்பதி" ஹிந்தில "ஹாங்க் ஜி" அப்படின்னேன்.

இதுக்கு மேல நமக்கு "கம்ப்யூட்டர் ஜி தாலா லகாவ்" மட்டும்தான் தெரியும் அப்படிங்கற்தால "Can you please speak in English, I am not that fluent in Hindhi" அப்படின்னு அவசர அவசரமா சொன்னேன்.

இதுக்கு மேல ஒரே ஒரு வாக்கியம் மட்டுந்தான் என் காதுல விழுந்துது.

நாந்தான் அதுக்கப்புறம் மயக்கம் போட்டு விழுந்துட்டனே.

அந்த வாக்கியம் " “You have been conferred with Padmashree award for your valuable contribution in tamil blogs”

ஒன்றறை மணி நேரம் கழித்து மயக்கம் தெளிஞ்சு, என்னடா இது ஒரே ஒரு Blog தான். அதிலயும் மூணே மூணு போஸ்ட் தான் போட்றுக்கோம். பின்னூட்டம் கூட நாலஞ்சு தான் எழுதிருக்கோம். அதுக்குள்ள் நம்ம திறமைக்கு இவ்வள்வு மரியாதையா?. அப்படின்னு ஒரு மாதிரி (ஒரு ஜக் பீரை ஒரே கல்ப்ல அடிச்சாப்புல) ஜிவ்வுன்னு இருந்துது.

எனக்கு வந்த நம்பருக்கு திரும்ப கால் பண்ணா, யாரோ செகரெட்டரி தான் ராஷ்டிரபாஷால பேசறா. ஒன்னும் புரியல.

இப்ப அவசரமா டிவி நியூஸ் பாக்க போய்ட்டிருக்கேன். மீதியெல்லாம் மீடியால பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

பின் குறிப்பு 1 – உங்கள் வாழ்த்துக்கள் எல்லாவற்றையும் மின்னஞ்சலில் மட்டும் அனுப்பவும். தொலைபேசி, அரசு அதிகாரிகள் எந்த நேரமும் கூப்பிடலாம் என்பதால் ஃப்ரீயாக வைத்திருக்க வேண்டும்.

பின் குறிப்பு 2 – என் ஊர் ஜம்மு காஷ்மீரோ பெயர் ஹஷ்மத் உல்லா கானோ கிடையாது.

பின் குறிப்பு 3 - இந்த Blog க்கு ஏன் இந்த டைட்டில் அப்படிங்கறீங்களா. எனக்கு தெரிஞ்ச இன்னொரு ஹிந்தி வார்த்தைய கூட சொல்லாம மயக்கம் போட்டுட்டனா, அதான் டைட்டில்லயாவுது சொல்லலாம்னு வெச்சேன்.

8 comments:

இராகவன் நைஜிரியா said...

नमस्कार किरुक्की थाल्लू. अच्छा है. बहुत अच्छा है.

நன்றி கூகுள் டிரான்ஸிலேட்டர்.

தங்களுக்கு பதம் விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.

இந்த word verificiation எடுத்துருங்க. கமெண்ட் போடும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு.

அறிவிலி said...

ராகவன் - தன்யவாத்...
என்னமோ எழுதியிருக்காரே..ஆனா படிக்க தெரியலியே (படிக்கறெத்துக்கெல்லாம் "கோன் பனேகா க்ரோர்பதி" பத்தாதே!!)அப்படின்னு, ரொம்ப கஷ்டப்பட்டு ஹிந்தி பண்டிட்டான என் மாமியார் மூலமாக தெரிந்து கொண்டேன்.

word verification எடுத்து விட்டேன்.
மீண்டும் நன்றி...

butterfly Surya said...

நல்லாயிருக்கு..

வாழ்த்துகள்.

உலக சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும்.

நிறை/ குறை சொல்லவும்.

நன்றி

அறிவிலி said...

வண்ணத்துப்பூச்சியாரே... நன்றி. அவசியம் பார்க்கிறேன்.

அசோசியேட் said...

இயல்பான சிரிப்புங்க !!!!!!.

அறிவிலி said...

//அசோசியேட் said...
இயல்பான சிரிப்புங்க !!!!!!.//

ஒரு புன்முறுவல் பூத்தேன்னு சொன்னாலே, திருப்தியடைஞ்சுருவேன்.

மிக்க நன்றி....

Anonymous said...

ஒன்னும் உணர்ச்சிவசப் படாதீங்க.எனக்கு பாரதரத்னா கொடுக்கறேன்னு டெல்லியிலேந்து ஃபோன் வந்த போதும் இதே மாதிரி ஃபீலிங்தான் இருந்தது.ஆனா இலங்கைப் பிரச்சினை தீராம இந்த விருதை ஏத்துக்க இயலாதுன்னு மறுத்துட்டேன்.இந்திய இறையான்மைய என்னைவிட யாரும் தீவிரமா மதிக்கறதில்லைன்னு சொல்லிட்டு அலயிற புதுப்புலித் தோழர் சீமானுக்கு வேணா கொடுங்கன்னு ரெகமென்ட் பண்ணிருக்கேன்.

அறிவிலி said...

//புதுப்புலித் தோழர் சீமானுக்கு //
ஹா..ஹா.. பாரத ரத்னாவை விட இந்த பட்டம் நலலா இருக்கே..

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.