Friday, February 20, 2009

காஞ்சித் தலைவனுக்கு 10 பதில்கள்

ஒரிஜினல் கேள்விகள் இங்கே....


1. உங்க கேள்விகளெல்லாம் 10க்குள்ளயே முடிச்சுக்கிறீங்களே அதுக்கு மேல இல்லையா?

பத்துக்கே காதுல புகை வர்ர அளவுக்கு யோசிக்க வேண்டி இருக்கு.


2. அப்படி இருக்குதுன்னு சொன்னா அதை ஏன் டிஸ்கில போட மாட்டேன்றீங்க?

மேல் இருக்கும் பதிலே இதுக்கும்.


3. ஏன் மனுஷங்களையே கேள்வி கேக்கறீங்க. ஆடு மாடு, மெஷின் ரயில் பஸ்னு நெறய இருக்கே இவங்களப்பாத்து கேக்க மாட்டீங்களா?

எப்படியும் இவங்களும் பதில் சொல்லப்போறதில்ல அதனால...


4. பதில் சொல்றவங்களுக்கு ஏன் பரிசு குடுக்க மாட்டேன்றீங்க? உங்களுக்கு பதில் வேணாமா?

என்னோட கேள்விகளுக்கு(முந்தைய பதிவுல) பதில் சொன்னா, எனக்கு நைஜீரியா லாடடரி பரிசு வந்த உடன பாதி உண்டு.


5. எப்படி யோசிச்சு யோசிச்சு கேள்வி கேக்கறீங்க?

தலைய சொறிஞ்சு சொறிஞ்சுதான்


6. ஒரே கேள்வியே மாத்தி மாத்தி கேக்கறா மாதிரியிருக்கே ஏன்?

அப்படியாவது பதில் கிடைக்குதான்னு பார்க்கத்தான்.


7. கேள்வியெல்லாம் மொக்கையாவே இருக்கே ஏன்?

பதிவுலக வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா..


8. எனக்கு கேள்வி கேக்குற உரிமையிருக்கா?

இத முதல் கேள்வியா இல்ல கேட்ருக்கனும்


9. நான் ஜோதியில ஐக்கியமாகிட்டேனா?

இல்ல. பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்டாத்தான்.


10. இந்த பதிவு போட்டதுனால இந்த கேள்விய நான் என்னையே கேட்டுக்கிட்டதா ஆகுமா?

நீங்களும் இதே மாதிரி ஒரு பத்து பதில் எழுதிருங்க.

பின்னூட்டத்துலதான் மொதல்ல பதில் சொன்னேன்.
கஷ்டப்பட்டு பதில் எழுதிட்டு அத நம்ம பதிவுல போடலேன்னா எப்படி?

6 comments:

Anonymous said...

//என்னோட கேள்விகளுக்கு பதில் சொன்னா, எனக்கு நைஜீரியா லாடடரி பரிசு வந்த உடன பாதி உண்டு.

பதில் சொல்லீட்டு, கேள்விக்கு பதில் சொன்ன பரிசுன்னு சொன்ன எப்படி??

அறிவிலி said...

//Bhuvanesh said...
//என்னோட கேள்விகளுக்கு பதில் சொன்னா, எனக்கு நைஜீரியா லாடடரி பரிசு வந்த உடன பாதி உண்டு.

பதில் சொல்லீட்டு, கேள்விக்கு பதில் சொன்ன பரிசுன்னு சொன்ன எப்படி??//

என் தப்புதான்... கேள்விகள் என்னோட முந்தைய பதிவுல...

CA Venkatesh Krishnan said...

ஆஹா,

பின்னூட்டத்திலயும் பதில் போட்டு, அதயே பதிவாப்போட்டு, ஒரு புதுமை செஞ்சு மெய் சிலிர்க்க வச்சுட்டீங்க.

இப்படித்தான் தூங்கிக்கிட்டிருக்குற தமிழ்மணத்தைத் தட்டி எழுப்பணும்.

வாழ்க வளர்க உங்கள் தொண்டு.

பகுத்தறிவு? said...

மனுஷன் அறிவாளியாகனும் கேள்விகள்தான் அதற்கு துணை நிற்கும்.

RAMYA said...

//
ஏன் மனுஷங்களையே கேள்வி கேக்கறீங்க. ஆடு மாடு, மெஷின் ரயில் பஸ்னு நெறய இருக்கே இவங்களப்பாத்து கேக்க மாட்டீங்களா?


எப்படியும் இவங்களும் பதில் சொல்லப்போறதில்ல அதனால...
//

சூப்பர் பதில்கள் எல்லாமே நன்றாக ரசித்தேன்!!!

RAMYA said...

சூப்பர் பதில்கள் எல்லாமே நன்றாக ரசித்தேன்!!

கேவிகளும் அருமை, பதில்களும் அருமையோ அருமை

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.