(மு.கு. எல்லோரும் இந்த வாரம் பதினொன்னு பதினொன்னா எழுதறாங்க. நான் 11 பத்தி எழுதறேன்.)
11-11-11(1911) தேதியில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வந்த ஒரு பத்தி கீழே.
நம்மில் பெரும்பாலோனார் அடுத்த 11-11-11(2011)இல் பதிவு போடலாம்.
(இந்த வாரம் ஓடிக்கொண்டிருக்கும் 11 பதிவுகளை மீள்பதிவும் இடலாம்.)
11ம் தேதிகளில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்
************************************************************
ஜனவரி 11,1973 - ராகுல் திராவிட் பிறந்த தேதி
ஃபிப்ரவரி 11,1847 - நமக்கெல்லாம் பல்ப் கொடுத்த தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தேதி
மார்ச் 11,1931 - ராபர்ட் முர்டோக் - ஊடக அரசன் பிறந்த நாள்
மார்ச் 11,1985 - கொர்பசேவ் - ரஷ்யாவின் தலைவரான நாள்.
ஏப்ரல் 11,1979 - இடி அமீன் உகாண்டா அதிபர் பதவியை இழந்த நாள்.
ஏப்ரல் 11,1814 - நெப்போலியன் தன் ஃப்ரென்ச் அரசர் பட்டத்தை துறந்தார்.
மே 11,1949 - தாய்லாந்து நாட்டுக்கு அந்த பெயர் வந்த தினம்.
ஜூன் 11, 1964 - நெல்ஸன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
ஜூலை 11 - ஐ.நா. சபை மக்கள் தொகை நாளாக கொண்டாடுகிறது.
ஜூலை 11,1924 - மங்கோலியா சீனாவிடமிருந்து பிரிந்து சுதந்திரம் அறிவித்தது.
ஆகஸ்ட் 11,1943 - பாக் முன்னாள் அதிபர் பெர்வேஷ் முஷரஃப் பிறந்தார்.
ஆகஸ்ட் 11,1968 - ஹி...ஹி.... நான் பொறந்து 8 நாள் ஆயிருந்துது.
செப்டெம்பெர் 11,2001 - அமெரிக்காவின் கறுப்பு நாள். மண்ணில் சரிந்தது இரட்டை கோபுரங்கள் மட்டுமா?
அக்டோபர் 11,1884 - முன்னாள் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் மனைவி பிறந்த நாள்.
நவம்பர் 11, போலந்து, அங்கோலா நாடுகளின் சுதந்திர தினம்.
நவம்பர் 11,1962- நடிகை டெமி மூர் பிறந்த நாள்.
நவம்பர் 11,1974 -டைட்டானிக் புகழ் லியோனார்டோ டிகப்ரியோ அவதரித்த நாள்.
டிசம்பர் 11,1931 - ஓஷோ, பகவான் ரஜனீஷ் பிறந்த நாள்.
Friday, March 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
நல்ல தகவல்கள் தான்!
\\பின்னூட்டம் போடாமல் செல்பவர்கள் எல்லோருக்கும் என் பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும். ஆபத்து வரும் முன் காத்துக் கொள்ளுங்கள்.
\\
யெஸ் பாஸ்
//நட்புடன் ஜமால் said...
நல்ல தகவல்கள் தான்!//
நன்றி திரு.ஜமால் - முதல் ஊட்டத்துக்கும்..
///முரளிகண்ணன் said...
\\பின்னூட்டம் போடாமல் செல்பவர்கள் எல்லோருக்கும் என் பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும். ஆபத்து வரும் முன் காத்துக் கொள்ளுங்கள்.
\\
யெஸ் பாஸ்///
தப்பிச்சுட்டீங்க(இந்த தடவையும்)..
//T.V.Radhakrishnan said...
:-)))
March 13, 2009 10:03 AM
T.V.Radhakrishnan said...
:-))))
March 13, 2009 10:04 AM //
நன்றி திரு.T.V.RK.. ரெண்டு தடவை சிரிச்சதுக்கு
நானும்தான் 11-1-1984 பிறந்து தொலைச்சன். அதுவும் முட்டாள்தனமான இந்திய மக்களோட நானும் வாழவேண்டி கிடக்கே??? இலங்கையில தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டாலும், அதற்கு நாம் ஆயுதம் வழங்கினாலும், அல்லட்டி தமிழன் எண்டதுக்காக எவனோ எல்லாம் தண்ணிதரமறுத்தாலும், அவனிட்ட பிச்சை எடுத்தாலும் என்னமும் புரியாமல் வாழும் முட்டாள், மூட சமூகத்தில் நானும் ஒருவன்
// ஆகஸ்ட் 11,1968 - ஹி...ஹி.... நான் பொறந்து 8 நாள் ஆயிருந்துது. //
எனக்கு ரொம்ப பிடிச்ச தகவல் இதுதாங்க...
நல்ல தகவல்கள்... அடுத்த தென்கச்சி சுவாமிநாதன் ரெடி ஆகிட்டு இருக்காரு.
//rooto said...
நானும்தான் 11-1-1984 பிறந்து தொலைச்சன். அதுவும் முட்டாள்தனமான இந்திய மக்களோட நானும் வாழவேண்டி கிடக்கே??? இலங்கையில தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டாலும், அதற்கு நாம் ஆயுதம் வழங்கினாலும், அல்லட்டி தமிழன் எண்டதுக்காக எவனோ எல்லாம் தண்ணிதரமறுத்தாலும், அவனிட்ட பிச்சை எடுத்தாலும் என்னமும் புரியாமல் வாழும் முட்டாள், மூட சமூகத்தில் நானும் ஒருவன்//
ஹ்ம்ம்ம்... என்னய தான் திட்டறீங்கன்னு தெரியுது..
கையாலாகாத கூட்டத்தில் நமக்கும் ஒரு பங்கு இருக்கிறது.
இராகவன் நைஜிரியா said...
// ஆகஸ்ட் 11,1968 - ஹி...ஹி.... நான் பொறந்து 8 நாள் ஆயிருந்துது. //
எனக்கு ரொம்ப பிடிச்ச தகவல் இதுதாங்க...
நல்ல தகவல்கள்... அடுத்த தென்கச்சி சுவாமிநாதன் ரெடி ஆகிட்டு இருக்காரு.
வாங்க ராகவன், முக்கியான தகவல் பிடிச்சுருக்கறது இயற்கைதானே...அவ்வ்வ்வ்வ்
வோட்டு போட்டுட்டேன்னு சொல்வீங்களே.லாயக்கில்லையோ?
Post a Comment
எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.
ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.