Friday, March 6, 2009

கமல் தோளில் சுலக்ஷணா

சன் டிவியில் இன்று(எங்க ஊர்ல) "தூங்காதே தம்பி தூங்காதே" படம். இரவு பதினோரு மணிக்கு மேல் என்றாலும் வாரக்கடைசிதானே என்று தமிழ்மணம் ஒரு பக்கமும், படம் ஒரு பக்கமுமாக உட்கார்ந்திருந்தேன்.

"சும்மா நிக்காதீங்க" பாட்டு வந்ததும் சுதாரித்து டிவியை மட்டும் பார்க்க ஆரம்பித்தேன்.அந்த காலத்துலயே சுலக்ஷணாவ வாயப்பொளந்துட்டு பார்த்தது கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சுருச்சு.பாவாடை தாவணி அவ்வளவு பாந்தமாக இருக்கும் அவருக்கு.

கிட்டத்தட்ட பாட்டு முழவதும் சுலக்ஷணா கமலின் மேல் தான் உட்கார்ந்திருப்பார்.ஏதோ சின்னக்குழந்தையை போல் கமல் அவரை இடுப்பிலும், தோளிலும், முதுகிலும் தூக்கி விளையாடுவார்.

கமல் இன்னமும் ஹீரோதான். சுலக்ஷணா???. எனக்கு ஒரே ஒரு சின்ன்ன்ன்ன ஆசைதான்.
அடுத்த படத்துல சுலக்ஷணாவை அதே மாதிரி கமல் தூக்கிகிட்டு டான்ஸ் ஆடணும்.(ஏண்டா இந்த கொல வெறி?... தசாவதாரம் வந்து இவ்ளோ நாளாயுமா ஒன் வெறி அடங்கல?)

பத்து நிமிஷத்தில் போனஸாக ராதாவுடன் "அட ராமா எங்கிட்ட டூப்பு விடலாமா??" பாட்டு. சுலக்ஷணா பாட்டு அளவுக்கு இல்லன்னாலும், பக்கத்துல இருந்த தங்கமணி "வழியற வாய தொடைக்க கூடாதான்னு" கேக்கற அளவுக்கு இருந்துச்சு.

ஒரு சீன்ல கமல் ராதாகிட்ட "நான் மாறு வேஷத்துல இருக்கேன்னு எப்படி கண்டு புடிச்ச?"
அப்படின்னு கேப்பாரு. போக்கிரியில் வரும் வடிவேலுவை ஞாபகமூட்டினார்.

குருதிப்புனல், அன்பே சிவம் படமெல்லாம் தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது. அவரா இவுரு?????..

7 comments:

இராகவன் நைஜிரியா said...

// பத்து நிமிஷத்தில் போனஸாக ராதாவுடன் "அட ராமா எங்கிட்ட டூப்பு விடலாமா??" பாட்டு. சுலக்ஷணா பாட்டு அளவுக்கு இல்லன்னாலும், பக்கத்துல இருந்த தங்கமணி "வழியற வாய தொடைக்க கூடாதான்னு" கேக்கற அளவுக்கு இருந்துச்சு.//

தங்ஸ் சொல்ற அளவுக்கா ஜொள்ளு விட்டீங்க... அவ்.. ரொம்ப தப்பு...

இராகவன் நைஜிரியா said...

// குருதிப்புனல், அன்பே சிவம் படமெல்லாம் தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது. அவரா இவுரு?????.. //

தேவை இல்லாத சமயத்தில் தேவையில்லாதது எல்லாம் ஞாபகம் வரப்பிடாது... ரொம்ப தப்பு..

இராகவன் நைஜிரியா said...

தமிழ் மணம், தமிழிஷ் இரண்டுலேயும் ஓட்டு போட்ட்ச்சுங்க..

அறிவிலி said...

ஹையயா.. ராகவன் திரும்பி வந்துடடாரு...

மிகவும் நன்றி ராகவன்.

ஆளவந்தான் said...

//
தங்கமணி "வழியற வாய தொடைக்க கூடாதான்னு" கேக்கற அளவுக்கு இருந்துச்சு.
//
பக்கெட் ஒன்ன எடுத்து வச்சுகிட்டு கண்டினியூ பண்ண வேண்டியது தானே :)

Anonymous said...

pin

அறிவிலி said...

//Anonymous said...
pin//

அனானி, சீக்கிரம் blog ஆரம்பிச்சுருங்க..
மொக்க நல்லா வருது...

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.