Thursday, September 3, 2009

சாலட் - 03/செப்/2009ஆப்பிள்: கொஞ்ச நாளாவே எனக்கும் அந்த ஆசை வந்திருச்சு. அவியல், கிச்சடி, குவியல்,கலவை, காக்டெயில்,பஞ்சாமிர்தம், கொத்து பரோட்டா, ஊறுகாய் அப்படின்னு ஆளுக்கொன்னா குட்டி குட்டி விஷயமா கலந்து கட்டி அடிக்கறாங்களே, நம்மளும் ஒண்ணும் இப்படி போட்டா நல்லா இருக்குமேன்னு (அட, எனக்குதாங்க) தோணிக்கிட்டே இருந்துது. ஆனா என்ன பேரு வைக்கறதுன்னு யோசிச்சு தலைய சொறிஞ்சு சொறிஞ்சே ஆறு மாசம் ஓடிப் போச்சு.

கொஞ்ச நாள் முன்னாடி கதம்பம்னு வைக்கலாம்னு முடிவே பண்ணிட்டேன்.எதுக்கும் இருக்கட்டும்னு கூகிள்ல போயி "கதம்பம்"னு தேடிப் பாத்ததுலதான் தெரிஞ்சுது, அண்ணாச்சி வடகரை வேலன் ஏற்கெனவே அத காப்பிரைட் வாங்கிட்டாருன்னு.

குப்பை, கசக்கிய காகிதங்கள் அவ்வளவு ஏன்? சாக்கடை, வாந்தி அப்படின்லாம் கூட தோணிச்சு. யாராவது ஒருத்தரை பத்தி எழுதிப்புட்டு, "உங்களை பத்தி இந்த வாரம் குப்பைல எழுதிருக்கேன்" அப்படின்னா சொல்ல முடியும்?

ரெண்டு நாள் முன்னாடி டிவில சமையல் நிகழ்ச்சியில் சாலட் செய்வதை பார்த்ததும் கப்புன்னு புடிச்சிகிட்டேன். நான் இதுவரைக்கும் தேடுனதுல வேற யாரும் இந்த பேர்ல கலப்படம் பண்றதா தெரியல. உங்களுக்கு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க மாத்திருவோம்.
-------------------------------------------------------------------------------------

அன்னாசி: பதிவுலக நண்பர் ஒருவரிடம் முதலில் பின்னூட்டங்கள் மூலமாக, அப்புறம் மின்னஞ்சல் பின்னர் ஃபோன் என்று கொஞ்சம் கொஞ்சமாக நட்பு வளர்ந்து சென்ற வாரக் கடைசியில் நேரிலேயே சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.அந்த பதிவர் யாருன்னு கேக்கறீங்களா?

இவருடைய பதிவின் பெயரிலேயே தமிழில் ஒரு பத்திரிக்கையும் உண்டு. அந்த பத்திரிக்கையின் ஆசிரியருக்கு தலைக்கு வெளியில் ஒன்றும் கிடையாது. அவருடைய பதிவின் லோகோ "ஆந்தை". அவ்வப்போது "கிச்சடி" கிண்டுவார்.

நேரில் பழகுவதற்கும் இனிமையானவர்.ஆனால் சந்தித்த போதுதான் அவர் செய்யும் சேவைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய இந்த சேவை மனப்பான்மையை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுமாறு அவர் துணைவியாரும் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.அவர் செய்த சேவைகள் குறித்த வீடியோஇங்கே
------------------------------------------------------------------------------------
திராட்சை:

20 comments:

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

Mahesh said...

//இவருடைய பதிவின் பெயரிலேயே தமிழில் ஒரு பத்திரிக்கையும் உண்டு. அந்த பத்திரிக்கையின் ஆசிரியருக்கு தலைக்கு வெளியில் ஒன்றும் கிடையாது. அவருடைய பதிவின் லோகோ "ஆந்தை". அவ்வப்போது "கிச்சடி" கிண்டுவார்.//

ம்க்கும்...இதுக்கு பேரையே சொல்லியிருக்கலாம்....

ஆமா... 'அவரு'க்கு தலைக்கு வெளிய ஒண்ணும் இல்லை... 'இவரு'க்கு உள்ளயும் ஒன்ணும் இலலை... அப்பிடித்தானே?

Mahesh said...

திராட்சை சூப்பர் டேஸ்ட்....

Mahesh said...

//சாக்கடை, வாந்தி // எப்பிடிங்க இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க?

வால்பையன் said...

நல்லாயிருக்கு!
தொடர்ந்து சாலட் போடுங்க!

அறிவிலி said...

//உலவு.காம் (ulavu.com) //

நன்றி

இத்தன தடவ இணைக்கணுமா? விடுங்க, பின்னனூட்ட கணக்குக்கு ஆச்சு

அறிவிலி said...

////Mahesh said...
திராட்சை சூப்பர் டேஸ்ட்....//

நான் சாப்பிடும்போது அன்னாசியைத் தான் ருசிச்சு சாப்பிட்டேன்.

அறிவிலி said...

//ம்க்கும்...இதுக்கு பேரையே சொல்லியிருக்கலாம்....//

கடைக்கு வர்ர ரெண்டு பேரையும் ரொம்ப தொந்தரவு பண்ணக்கூடாதுன்னுதான்.

அறிவிலி said...

//வால்பையன் said...
நல்லாயிருக்கு!
தொடர்ந்து சாலட் போடுங்க!//

நன்றி வால்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

அழகான தலைப்பை பிடிச்சிருக்கீங்க.. வாத்துகள்.! டேஸ்டா குடுங்க, புளிச்சிப்போயிறாம.

அப்புறம் மகேஷ் எனக்கும் நெருங்கிய நண்பர்தான். ஆனால் அவர் பண்ணிய சேவை குறித்து நான் இதுவரை அறிந்திராமல் இருந்ததுதான் வேதனை. ஹிஹி..

Mahesh said...

//ஆமா... 'அவரு'க்கு தலைக்கு வெளிய ஒண்ணும் இல்லை... 'இவரு'க்கு உள்ளயும் ஒன்ணும் இலலை... அப்பிடித்தானே?//

இதுக்கு சாமர்த்தியமா பதில் சொல்லாம போயிட்டிங்க...ஹ்ம்ம்ம்... மௌனம் சர்வார்த்த சாதகம் !!

அறிவிலி said...

//Mahesh said...
//ஆமா... 'அவரு'க்கு தலைக்கு வெளிய ஒண்ணும் இல்லை... 'இவரு'க்கு உள்ளயும் ஒன்ணும் இலலை... அப்பிடித்தானே?//

இதுக்கு சாமர்த்தியமா பதில் சொல்லாம போயிட்டிங்க...ஹ்ம்ம்ம்... மௌனம் சர்வார்த்த சாதகம் !!//

சேச்சே.. உங்களுக்குத்தான் அகம் புறம் இரண்டுமே வளம்னு உலகுக்கே தெரியுமே. ஏதோ கொஞ்சம் கவனக் குறைவா இருந்ததுக்கு இப்படியெல்லாமா மைதிலி மொழியில திட்டறது.

அறிவிலி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
அழகான தலைப்பை பிடிச்சிருக்கீங்க.. வாத்துகள்.! டேஸ்டா குடுங்க, புளிச்சிப்போயிறாம.

அப்புறம் மகேஷ் எனக்கும் நெருங்கிய நண்பர்தான். ஆனால் அவர் பண்ணிய சேவை குறித்து நான் இதுவரை அறிந்திராமல் இருந்ததுதான் வேதனை. ஹிஹி..
//

நன்றி ஆதி...
வெளி உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறி விட்டது.

நட்புடன் ஜமால் said...

சாலட் சுவையுடன்.

அறிவிலி said...

@நட்புடன் ஜமால்

நன்றி ஜமால்.

கனககோபி said...

அந்தப் புகைப்படம் அருமை...
இப்பிடியெல்லாம் கவலைப் படுவாங்களோ...
ஆனா இது நடக்கும். இப்ப தானே கலைப்புலி தானு கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்.

ஜோசப் பால்ராஜ் said...

அடுத்து என் கையில சிக்காமயா போயிருவீங்க?
மகேஷ் அண்ணா உண்மையிலயே பல சேவைகள செய்றவரு, அதுல என்ன விடியோ இது, அப்டியெல்லாம் அண்ணி அத வெளில சொல்ல மாட்டாங்களேன்னு யோசிச்சுக்கிட்டு, அந்த விடியோவ பார்த்து பல்ப்பு வாங்கிட்டு வர்றேன்.
டொன்லீ கிட்ட சொல்லி சீக்கிரமா ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்.

அறிவிலி said...

//ஜோசப் பால்ராஜ் said...
அடுத்து என் கையில சிக்காமயா போயிருவீங்க?
மகேஷ் அண்ணா உண்மையிலயே பல சேவைகள செய்றவரு, அதுல என்ன விடியோ இது, அப்டியெல்லாம் அண்ணி அத வெளில சொல்ல மாட்டாங்களேன்னு யோசிச்சுக்கிட்டு, அந்த விடியோவ பார்த்து பல்ப்பு வாங்கிட்டு வர்றேன்.
டொன்லீ கிட்ட சொல்லி சீக்கிரமா ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்.//

வாங்க ஜோஸப் - சந்திப்பு எதுக்கு, மகேஷோட சேவைகளை பாராட்டி விருது வழங்கத்தானே?
:))))

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.