Thursday, October 8, 2009

சாலட் - 08/அக்/2009


ஆப்பிள்:இந்த வருடம் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் வருடமாக அமைந்து விட்டது. ரஹ்மானின் ஆஸ்காரை தொடர்ந்து இப்போது தமிழகத்தில் சிதம்பரத்தில் பிறந்து பரோடாவில் இயற்பியல் பட்டப் படிப்பு படித்து பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துவிட்ட திரு.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணண் அவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. நிச்சயம் பெருமைப்பட வேண்டிய விஷயம்தான்.

அவர் இயற்பியல் பட்டதாரியாக இருந்தாலும் பின்னர் உயிரியலுக்கு மாறிவிட்டாராம்.இந்த வருடத்துக்கான வேதியியல்!!! பிரிவு நோபல் பரிசை மேலும் இரு விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பெற்றிருக்கிறார்.உயிர் வேதியியல் துறையில் ரிபோசோம்கள் எப்படி இருக்கும் என்று காட்டியதற்காகவும் அவை அணு அளவில் எவ்வாறு செயல்படுகின்றன என்று விளக்கியதற்காகவும் அவருக்கு இந்தப் பரிசை வழங்கியிருக்கிறார்கள்.

இவருடைய கண்டுபிடிப்பு, நோய் எதிர்ப்பு மருந்துகள் தயாரிப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கிறதாம்.

நம்ம வெங்கி(அப்படித்தான் அவர் நண்பர்கள் கூப்பிடுவாங்களாம்) என்னமோ ரிபோசோம் பத்தி ஆராய்ச்சி பண்ணிருக்காரே அது என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு விக்கிபீடியாவுல போய் பாத்தா....
ரிபொசோம் - என் பதிவோட லோகோ மாதிரியே இல்ல?
molecule consisting of two subunits that fit together and work as one to build proteins according to the genetic sequence held within the messenger RNA (mRNA). Using the mRNA as a template, the ribosome traverses each codon, pairing it with the appropriate amino acid. This is done through interacting with transfer RNA (tRNA) containing a complementary anticodon on one end and the appropriate amino acid on the other.

ம்ஹூம்ம்ம் ஒண்ணும் புரியல.. பின்நவீனத்துவமே பரவாயில்ல போலருக்கு.

விடுங்க.. நம்மளுக்கு எல்லாம் இருக்கவே இருக்கு சட்டைக்குள்ள, பேருல, பேசறதுலன்னு எல்லாத்துலயும் என்னென்ன அடையாளம் இருக்குன்னு தேடற ஆராய்ச்சிகள்.
----------------------------------------------------------------------------------

அன்னாசி: சன் டிவியில் பல்லாண்டு காலமாக ப்ரைம் ஸ்லாட்டை ஆக்கிரமித்திருக்கிறார் ராதிகா. சித்தி, அண்ணாமலை,செல்வி,அரசி என்று இப்போது செல்லமே ஆரம்பித்திருக்கிறது.


இந்த தொடரில் ராதிகாவின் வீட்டில் யாராவது தவறு செய்து விட்டால் அவர்கள் ஒரு விளக்குக்கு பக்கத்தில் போய் நிற்க வேண்டுமாம். அதுதான் அவர்களுக்கு தண்டனை.இப்போது நான் போய் எங்கள் வீட்டு விளக்குக்கு பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.

இந்த நாடகத்தை கொஞ்ச நேரம் பார்த்ததற்கு தண்டனையாக :((((
----------------------------------------------------------------------------------

ஆரஞ்சு: இந்த FEEDJIT ரொம்ப அருமையான விட்ஜெட். எங்கெங்கேர்ந்தெல்லாம் நம்ம பதிவ பாக்க (படிக்கலன்னாலும்) வராங்கன்னு பெருமையா பாத்துகிட்டு இருக்கலாம்.அதுவும் என்னோடது மாதிரி ஏழரை பேர் (கவனிக்கவும் - ஒரு வார்த்தை மிஸ்ஸிங்)வாசகர்கள் படிக்கும் பதிவுகளில் FEEDJIT ஐ வைத்து ஆராய்ச்சியே நடத்தலாம். தமிழ்மணத்திற்கும் FEEDJIT ற்கும் பூர்வ ஜென்ம அல்லது இந்த ஜென்ம பகை போலும். அங்கிருந்து வரும் எல்லோரையும் FEEDJIT உதாசீனப்படுத்தி விடுகிறது.

மேலும் சில நாட்கள் கவனித்ததில் துபாயிலிருந்து யாரோ ஒரு புண்ணியவான் கிட்டத்தட்ட தினமும் என் பதிவுக்கு வருகிறார். புது இடுகைகளே போடாத அன்னிக்கு கூட இவருடைய விசிட் உண்டு. இதுல என்ன பெரிய விஷயம், அறிவிலியோட பதிவுககு ஒரு தீவிர விசிறியா இருப்பாருன்னு நினைக்கிறீங்களா? அதுதான் இல்ல. ஸ்க்ரீன் ஷாட்ட பாருங்க.


சைட் பார்ல இருக்கற நான் படிக்கும் பதிவுகள் லிஸ்ட்ல இருக்கற பதிவுகள் எல்லாத்துக்கும் இங்கேர்ந்துதான் அவுரு போவாரு. முக்காவாசி நாளைக்கு ஒரே ஒரு "Dubai arrived" ம் பத்து பதினைந்து "Dubai left via" வும் இருக்கும். ஆகவே பிரபல பதிவர்களே உங்களுக்கு இருக்கும் ஏழரையில் என் அணில் பங்கும் இருக்கிறது என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

----------------------------------------------------------------------------------

திராட்சை: 50 ஒரு முக்கியமான எண்ணாக கருதப்படுகிறது. உலக நாயகன் கூட சினிமாவுக்கு வந்த ஐம்பதாவது வருடத்தை விமரிசையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.50 ஆவது ஆண்டு திருமண நாள், 50 ஆவது பிறந்த நாள் போன்றவற்றை தங்கமாக கொண்டாடுகிறார்கள்.அப்படி இப்படி தட்டுத் தடுமாறி "எங்கப்பனும் கச்சேரிக்கு போகிறான்" என்ற வகையில் நான் கிறுக்கித் தள்ளியவற்றின் எண்ணிக்கை ஐம்பதை தொட்டுவிட்டது. பெருவாரியான அளவில் திரண்டு வந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் "கண்கள் பனித்து இதயம் இனித்த" நன்றிகள். முக்கியமாக மேலே சொன்ன துபாய் அன்பருக்கு இந்த இடுகையை அர்ப்பணிக்கிறேன்.

26 comments:

Mahesh said...

சாலட் ரொம்ப டேஸ்ட்....

நல்லா சுவாரசியமா இருக்கு. ரிபோசோம் படத்தைப் பாத்ததுமே எழுதணும்னு நினைச்சதை நீங்களே எழுதிடீங்க? இந்த மாதிரி பன்ணினா நமக்கு வர கொஞ்ச நஞ்ச பின்னூட்டமும் போயிடும்... ஜாக்ரதை :))))

அப்பிடி இப்பிடி 50 அடிச்சதுக்கு வாழ்த்துகள் !! 50 ஃபாலோயருக்கும் வாழ்த்துகள்.. .அட்வான்சா !!!

Mahesh said...

"வெங்கி" கூட நோபல் பரிசு வாங்கின மத்த ரெண்டு பேரும் கிறித்தவர் மற்றும் யூதராமே?? இதுல இஸ்லாமியர்களுக்கு எதிரான உள்குத்து எதாவது இருக்கா?

அப்பாடா... எதோ நம்மால முடிஞ்சது... (நாராயண... நாராயணன்னு யாரோ தம்பூராவோட போறா மாதிரி இருக்கே)

கார்க்கி said...

வாழ்த்துகள் சகா..

யாருப்பா அது? அறிவிலி பதிவ படிக்க சொன்னா அவரு ப்ளாக புக்மார்க்கா யூஸ் பண்றது?????????

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா எழுதியிருக்கீங்க அறிவிலி!

pappu said...

ribosomes are of two types differentiation based on size. 80s and 60 s. they tend to synthesize protein functioning along with endoplasmic reticulum......

நாங்களாம் பயோடெக்னாலஜிஸ்டு!

அப்பாவி முரு said...

//ராதிகாவின் வீட்டில் யாராவது தவறு செய்து விட்டால் அவர்கள் ஒரு விளக்குக்கு பக்கத்தில் போய் நிற்க வேண்டுமாம், இப்போது நான் போய் எங்கள் வீட்டு விளக்குக்கு பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறேன்//


இல்லையே பாத்திரம் விளக்கும் இடத்தில் நிற்பதாக உளவுத்துறை தகவல் வந்ததே

sa said...

ha ha ha ha. i am really read and enjoy from oman not dubai

நர்சிம் said...

50க்கு வாழ்த்துக்கள்.

நல்லா எழுதி இருக்கீங்க பாஸ்.ர(ரு)சிக்கும் நடை.

அறிவிலி said...

//sa said...
ha ha ha ha. i am really read and enjoy from oman not dubai//

அப்பா.. இப்பதான் நிம்மதியா இருக்கு. என் பதிவை படிக்கறீங்களா இல்லியான்னு ஒரு சந்தேகம் இருந்துது. You are always welcome. மிக்க நன்றி.

அறிவிலி said...

@Mahesh

//50 ஃபாலோயருக்கும் வாழ்த்துகள்.. .அட்வான்சா !!!//

இவ்வளவு அட்வான்ஸாவா???? நூறாவது இடுகை போடறதுக்குள்ள வந்துருவாங்கன்னு நினைக்கிறேன்.

//"வெங்கி" கூட நோபல் பரிசு வாங்கின மத்த ரெண்டு பேரும் கிறித்தவர் மற்றும் யூதராமே?? இதுல இஸ்லாமியர்களுக்கு எதிரான உள்குத்து எதாவது இருக்கா?//

ஆமா.. தம்பூராவை ப்ளைட்ல செக் இன் பண்ணீங்களா இல்ல ஹேண்ட் லக்கேஜா?

அறிவிலி said...

@கார்க்கி

நன்றி

///யாருப்பா அது? அறிவிலி பதிவ படிக்க சொன்னா அவரு ப்ளாக புக்மார்க்கா யூஸ் பண்றது?????????///

சும்மா இருங்க... கார்க்கி, இப்பிடியாவது ஒருத்தர் ரெகுலரா வரத கெடுத்துருவீங்க போல இருக்கே.

அறிவிலி said...

///ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நல்லா எழுதியிருக்கீங்க அறிவிலி!///

நன்றி சுந்தர். நீங்கள்ளாம் இப்படி ஏதாவது சொன்னா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

அறிவிலி said...

@pappu

அப்போ அடுத்த வெங்கி நீங்கதான்னு சொல்லுங்க.
:-)))))

அறிவிலி said...

@அப்பாவி

உங்க உள்வுத்துறை ஆளை மாத்துங்க அப்பாவி. எல்லா வேலையும் முடிச்சிட்டுதான் டிவியே பாக்க போனேன். :-)))))

அறிவிலி said...

//நர்சிம் said...
50க்கு வாழ்த்துக்கள்.

நல்லா எழுதி இருக்கீங்க பாஸ்.ர(ரு)சிக்கும் நடை.//

நன்றி நர்சிம். க்ளூக்கோஸ் குடிச்ச எஃபெக்ட் கெடைச்சிருச்சு.

Anonymous said...

அறிவிலின்னு பேர் வைச்சுக்கிட்டு இப்படியா எழுதறது. :)

பித்தனின் வாக்கு said...

அண்ணே இன்னைல இருந்து நானும் உங்க பதிவு படிக்கற விசிறி. என்னையும் ஆட்டத்தில் சேர்த்துகுங்க. தகவல்கள் அருமை.

அறிவிலி said...

வாங்க அம்மிணி,

நான் ஒரு முன்ஜாக்கிரதை முத்தண்ணா கேரக்டருங்க, அதனாலதான் அந்த பேரு.

அறிவிலி said...

//பித்தனின் வாக்கு said...
அண்ணே இன்னைல இருந்து நானும் உங்க பதிவு படிக்கற விசிறி. என்னையும் ஆட்டத்தில் சேர்த்துகுங்க. தகவல்கள் அருமை.//

சரிங்க, இனிமே எட்டரை(ஏழரை+1)வாசகர்கள்னு எழுதிர்றேன். மிக்க நன்றி.

azhagan said...

To compare the Nobel with ARR's Oscar is downright degrading the Nobel. Thinking again, when Obama gets a Nobel........

அறிவிலி said...

I have not compared Oscar with Nobel. Just mentioned that both Rahman and Venki have made us feel proud. Thanks for reading and expressing your view.

Jack said...

வணக்கம் அறிவிலியாரே! நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த பிரபல துபாய் விசிட்டர் நாந்தானுங்கோவ். உங்க பிளாக்க வெறும் புக்மார்க்கா மட்டும் உபயோகப் படுத்துகிறேன் என்று தயவு செய்து நினைத்து விட வேண்டாம். உங்கள் பிளாக்குக்கு வந்து புதிய பதிவு ஏதாகிலும் இருந்தால் முதலில் அதை படித்துவிட்டு பின்னர் நீங்கள் படிக்கும் மற்ற பிளாக்குக்களுக்கு சென்று படிப்பேன். அவ்வளவுதான். ofcourse it is bit easy for me to cover my favourite blogs. மத்தவங்களும் போய் படிக்கனும்தானே உங்க இணைய பக்கத்துல அந்த லிங்க் வச்சி இருக்கீங்க?
Anyway ஒரு இடுகையையே எனக்கு அர்ப்பணம் செய்ததற்கு மிக்க நன்றி. இப்படி பிரபல விசிட்டருக்கு( நம்மளே சொல்லிக்கணும் ) இடுகை அர்ப்பணம் செய்யும் கலாசாரத்தை தொடங்கி வைத்ததற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ( மற்ற பதிவர்கள் கவனிக்க. உங்களிடம் இருந்தும் நிறைய எதிர் பார்க்கிறேன்.)

அறிவிலி said...

@jack

வாங்க Jack, தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. யாருன்னு தெரிஞ்சுக்கற ஆர்வத்துலதான் எழுதினேன்.
You are always welcome. :)))))))))

வலசு - வேலணை said...

//
ம்ஹூம்ம்ம் ஒண்ணும் புரியல.. பின்நவீனத்துவமே பரவாயில்ல போலருக்கு.
//

//
அப்படி இப்படி தட்டுத் தடுமாறி "எங்கப்பனும் கச்சேரிக்கு போகிறான்" என்ற வகையில் நான் கிறுக்கித் தள்ளியவற்றின் எண்ணிக்கை ஐம்பதை தொட்டுவிட்டது
//
இரசித்தேன். மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்

பொன்விழா இடுகைக்கு வாழ்த்துக்கள்

அறிவிலி said...

@வலசு - வேலணை

நன்றி.

Jagannathan said...

Inimae yaaravathu ribosome-nu sollattum, neenga potta Youtube definition-i appadiyae oppichu avanga vaayai moodalaam!

Chellamae paarththadhu oru dhandanai, atharku innum oru dhandanaiyaa?

- R. Jagannathan

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.