Wednesday, November 4, 2009

சும்மா இருக்க முடியுமா? சவால்


வடிவேலு ஒரு படத்துல "சும்மா இருக்கறதுன்னா அவ்வளவு ஈசியா?" அப்படின்னு சவால் விடுவாரு.

அது மாதிரி சும்மா கைய வெச்சுகிட்டு நின்னா 26 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரு குடுக்கறாங்க.

எங்க.. எங்க.. எங்க... அப்படின்னு அலை பாயறீங்களா?

சிங்கப்பூர்ல வருஷத்துக்கு ஒரு தடவ இந்த மாதிரி ஒரு போட்டி நடக்குது. சிட்டி செண்டர்ல ஒரு இடத்துல நாலு அஞ்சு கார நிறுத்தி வெச்சிருப்பாங்க. போட்டியில கலந்துக்கறவங்க எல்லாரும் தங்களோட ஒரு கைய கார் மேல வெச்சுகிட்டு நிப்பாங்க.மழை பெஞ்சாலும் சரி வெய்யில் அடிச்சாலும் சரி கைய எடுக்க கூடாது. கைய எடுத்தா போச்.. போட்டியிலேர்ந்து அவுட்.இப்படியே ஒவ்வொருத்தரா அவுட் ஆயி யாரு கடைசி வரைக்கும் கைய எடுக்காம நிக்கறாங்களோ அவருக்கு அந்த கார்ல ஒண்ணு பரிசு.


ஹையா... ரொம்ப சிம்பிளா இருக்கே அப்படிங்கறீங்களா??? இந்த வருடத்துக்கான போட்டி கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி ஆரம்பித்தது.சீனா, மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், இந்தொனேஷியா முதலான நாடுகளிலிருந்து வந்த எழுபது பேருடன் உள்ளூர் போட்டியாளர்களையும் சேர்த்து மொத்தம் 398 பேர் கலந்து கொண்டனர். ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை 5 நிமிட ஒய்வு இடைவேளை (சும்மா நிக்கறதுல என்ன ஓய்வு இடைவேளை?) மட்டும் உண்டு. மற்றபடி உள்ளங்கை முழுவதும் காரில் பட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.

ஏகப்பட்ட ஏனைய விதிமுறைகளும் உண்டு. போட்டி முடியும் வரை சொந்தம் பந்தம் கொடுக்கும் அன்ன ஆகாரம் எதுவும் சாப்புட கூடாது, பக்கத்துல இருக்கற மத்த போட்டியாளர்களை கிண்டலோ, வெறுப்பூட்டும் விதமாக பேசவோ, சைகைகளோ செய்யக்கூடாது, போட்டி முடியற வரைக்கும் குளிக்க கூடாது, பவுடர் போடக் கூடாது (??? - நெசமாவே இப்பிடி ஒரு கண்டிஷன் இருக்குங்க) இப்படின்னு எக்கச்சக்கம். மேலும் சட்ட திட்டங்கள் அறிந்து கொள்ள. போட்டியை கை கோர்த்து நடத்துவது சிங்கப்பூர் மீடியாகார்ப் வானொலியும் சுபாரு கார் நிறுவனமும்.


இப்படியாக கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த போட்டியில் ஒவ்வொருவராக "நம்மளால இனி சும்மா இருக்க முடியாதுடா சாமீ" அப்படின்னு கழண்டு கொள்ள, கடைசியில் விடாக் கண்டன் கொடாக் கண்டனாக செவ்வாய் அன்று மாலை வெற்றி பெற்றவர் முகம்மது அன்வர் என்னும் 40 வயது சிங்கப்பூரர்.பாவம் கடைசியில் இவருடன் போராடி தோற்றவர் சந்தோஷ் குமார் பூஞ்சோலை என்னும் 23 வயது இளைஞர்.மொத்தம் போட்டி நடை பெற்ற நேரம் 77 மணி 43 நிமிடங்கள்.



பரிசு வாங்குன கார ஓட்டுவாரா, இல்ல சும்மாவே வெச்சிருப்பாரா????

8 comments:

அப்பாவி முரு said...

//பரிசு வாங்குன கார ஓட்டுவாரா, இல்ல சும்மாவே வெச்சிருப்பாரா???? //

சும்மா கிடைச்சதுதானே, சும்மா பிரிச்சு மேயவேண்டியது தான்.

கோவி.கண்ணன் said...

"விடா" கண்டன்கள் இவங்க தானா ?
:)

Prabhu said...

மூக்கு அரிக்காதா? எப்ப்டி இப்படி எல்லாம்?

அறிவிலி said...

@அப்பாவி முரு

கார்லயே மேய்வாரு.நன்றி

@ கோவி.கண்ணன்

அப்ப்டித்தான் தோணுது. நன்றி கோவியார்.

பாலகுமார் said...

இப்படியும் ஒரு போட்டி இருக்கா..

உங்கள் தோழி கிருத்திகா said...

namma oorula intha potti vecha maasakkanakkagume :)

அறிவிலி said...

//பாலகுமார் said...
இப்படியும் ஒரு போட்டி இருக்கா..//

அட ஆமாங்க, ஒவ்வொரு வருஷமும் நடக்குதுங்க.

அறிவிலி said...

//உங்கள் தோழி கிருத்திகா said...
namma oorula intha potti vecha maasakkanakkagume :)//

ஆமாங்க.. போட்டி அதிகமா இருக்கும்.

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.