Monday, March 8, 2010

"காமன் வுமேன்" - காமன் மேனின் பார்வையில்

ஆர்.கே.லக்ஷ்மண் அவர்களால் பிரபலமான காமன் மேன், சமீப காலத்தில் "உன்னைப்போல் ஒருவன்" படத்திற்கு பிறகு பரபரப்பாக பேசப்பட்டார்.முக்கியமாக தமிழ்ப் பதிவுலகில்... எனக்கு ஒரு மன வருத்தம்.அது என்ன இந்த காமன் வுமேனை மட்டும் யாரும் கண்டு கொள்ளவே இல்லையே என்று....

எனவே மகளிர் தினத்தை முன்னிட்டு... "காமன் வுமேனின் குணாதியசங்கள்" - ஒரு காமன் மேன் பார்வையில்.

1. ஆன்லைன் ஷாப்பிங், ஃபோன் ஷாப்பிங் என்று பல வசதிகள் இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை காலையில் மறக்காமல் காபி பொடியோ, சர்க்கரையோ வாங்க கணவனை கடைக்கு அனுப்புபவர்கள்.

2. தன் குழந்தையின் அழகுக்கும் புத்திசாலிதனத்துக்கும் தன் பரம்பரையும், தவறுகளுக்கும் துர்குணங்களுக்கும் தன் கணவனின் ஜீன்களும் காரணம் என்று சர்வ நிச்ச்யமாக நம்புபவர்கள்.

3. நான்கு மணி நேரம் நாப்பது கடை ஏறி இறங்கி துணிகள் வாங்கிய பிறகு எதிரில் வரும் பெண்ணின் உடையோ அல்லது நாப்பத்தி ஒண்ணாவது கடை பொம்மையின் சேலையோ அழகாக இருப்பதாக சொல்பவர்கள்.

4. மும்பை வெடிகுண்டு சம்பவ செய்தியை படிக்கும் பெண்ணின் தோடு டிசைன் நன்றாக இருப்பதாக ரசிப்பவர்கள்.

5. ஒரு கிலோவுக்கு 200 கிராம் எடையில் அடிக்கும் காய்கறிக்காரனிடம் கொசுறாக கிடைக்கும் கறிவேப்பிலை கொத்தமல்லிக்காக சந்தோஷப்படுபவர்கள்.

6. உலகச் செய்திகளை விட லோக்கல் (அக்கம் பக்கத்து வீட்டு) செய்திகளில் அதிக நாட்டம் கொண்டவர்கள்.

7. சொந்த சோகங்களை தொலைக்காட்சித் தொடர் சோகங்களில் மூழ்கி மறப்பவர்கள்.

8. மருமகளாக இருக்கும் போது தானே சிறந்த மருமகள் என்றும் மாமியாராக இருக்கும் போது தானே சிறந்த மாமியார் என்றும் நினைத்துக் கொள்பவர்கள்.

9. சமையல் செய்ததில் எது மீதமானாலும் மறக்காமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு ஒரு வாரம் கழித்து First in First Out (FIFO) அடிப்படையில் குப்பைத் தொட்டியில் கொட்டுபவர்கள்.

10. தமிழின் மிகச் சிறந்த நாவல்களை எழுதியவர் லஷ்மி என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்பவர்கள்.

11. "எங்கியோ பாத்தா மாதிரி இருக்கே", என்று ஏதாவது பெண்ணை விகல்பமில்லாமல் பார்க்கும் கணவன்மார்களை முறைப்பவர்கள்.

12. ஒழுங்காக பாத்திரம் தேய்க்காத வீடு பெருக்காத வேலைக்காரப் பெண் ஒரு நாள் வேலைக்கு வராவிட்டாலும் புலம்புபவர்கள்.

13. கடினமாக உழைத்து நல்ல பெயரும் பதவி உயர்வும் வாங்கும் கணவனை சரியாக ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்துவிடும் பக்கத்து வீட்டுகாரனின் சாமார்த்தியம் வராது என்று இடித்துரைப்பவர்கள்.

20. ப்ளக்கை சொருகி லைட்டை போடும் மகனை வருங்கால எடிசனாகவும், கிளியை நினைத்து காகம் வரையும் போது பின்னாள் பிகாஸோவாகவும், ரெண்டக்க ரெண்டக்க பாட்டுக்கு இடுப்பில் கை வத்துக் கொண்டு தலையை ஆட்டும் பெண்ணை "பத்மா சுப்ரமணியத்துகிட்ட சேத்து விட்டா நல்லா வருவா" என்றும், "பாலும் தெளி தேனும்" சொல்லும்போது எஸ்.பி.பி யாகவோ, எம்.எஸ்.சுப்புலஷ்மியாகவோ நினைத்து புளகாங்கிதமடைவார்கள்.

பி.கு: 20 எழுதிரலாம்னு ஒரு வேகத்துல ஆரம்பிச்சேன். 6 மிஸ்ஸிங். பின்னாடி ஏதாவது தோணினாலோ, பின்னூட்டங்களில் வந்தாலோ இடையில் சேர்க்கப்படலாம்.

பிற்சேர்க்கை:
14.உலகத்திலேயே தனக்கு மட்டும் தான் மோசமான கணவன் வாய்த்ததாக புலம்புவார்கள்.(உபயம்: கோவி.கண்ணண்)

45 comments:

நட்புடன் ஜமால் said...

சிரிச்சேங்க - நகைச்சுவையாக பார்த்தால் நல்லாதான் இருக்கு :) :) :)

Unknown said...

நைட்டி போட்டு மரக்கறி வாங்கிறது (காலையில )

சாமியார் நப்ம்பிக்கை

இன்னும் எத்தனையோ இருக்கு

கோவி.கண்ணன் said...

:)
உலகத்திலேயே தனக்கு மட்டும் தான் மோசமான கணவன் வாய்ததாக புலம்புவார்கள்.

அறிவிலி said...

@ சிவசங்கர் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ ஜமால் - நன்றி
@ கோவியார் - அட.. ஆமாங்க மிஸ் பண்ணிட்டேன்.

பத்மா said...

இப்பிடி எத்தனை கிண்டல் பண்ணினாலும் போனா போது ன்னு கண்டுக்காம விடறது :))

அறிவிலி said...

@padma

அவ்வ்வ்வ்.... ப்ளாக்ல நெறய வுமன் ஃபாலொயர்ஸ் சேந்துட்டாங்கப்பா... இனி எச்சரிக்கையாத்தான் இருக்கணும்.

:-))))

அப்பாவி முரு said...

ஏன்ண்ணே வீட்டம்மாவை பகைச்சுக்குறீங்க...

வெற்றி-[க்]-கதிரவன் said...

உங்க வீட்டுல இந்த பதிவுக்கு என்ன ரெஸ்பான்ஸ் இருந்திருக்கும்ன்னு தெரியுது,

ஒரு வார மருத்துவ விடுப்பா ? :)))))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

உங்கள் பதிவுக்கு எனது பதில்கள்... (பேசாம இதை என்னோட ப்ளாக்ல பதிவாவே போட்டு இருக்கலாம்....)

1.100 கிராம் காபித்தூள் ஆன்லைன்ல வாங்கினா டெலிவரி சார்ஜ் நூறு ரூபா. நீங்க குடுக்க சரினா நாங்க ஏன் உங்கள அனுப்பறோம்

2. உண்மைய ஒத்துக்கறது common man க்கு கஷ்டம் போல இருக்கு

3. ரதி மாதிரி தங்கமணி கூட வர்றபவே நீங்க.....(அதுக்கு இது பரவா இல்ல)

4. நம்பும் படி இல்லை. அப்படி இருந்தாலும் தோடு வாங்கி குடுத்தா நாங்க ஏன் பாக்கறோம்...

5. இப்படி இருந்தே இப்படி சொல்றீங்க. இப்படி இல்லைனா "எங்க அம்மா எல்லாம் நூறு ரூபாய்ல வீட்டு செலவு முடிச்சுடுவாங்கனு" சொல்வீங்க. எப்படி தான் தப்பிக்கறது நாங்க

6. அந்த லோக்கல் செய்தி எல்லாம் நாங்க தெரிஞ்சி பதவிசா நடந்துகரதால தான் நீங்க லோக்கல்ல கம்பீரமா collar ஐ தூக்கி விட்டுட்டு போறீங்க

7. அப்ப சொந்த சோகம் இருக்குனு ஒதுகறீங்க இல்லையா...அதுக்கு யார் காரணம்ன்னு நான் சொல்லி தான் தெரியனுமா சார்?

8. அப்படி இருகறவங்களும் இருகாங்க ஐயா

9. common man கிட்ட குப்பை கொட்டணும்ன நாங்க இப்படி குப்பை கொட்டி தான் ஆகணும்

10. வேற என்னனு நீங்க சொல்லுங்க பாக்கலாம் ?

11. common man பத்தி தெரிஞ்சதால அப்படி மொறைக்கறோம்

12. நீங்க ஹெல்ப் பண்றதுக்கு ரெடினா நாங்க வேலைகாரிய திட்டல (அது சரி வேலைக்காரி மேல உங்களுக்கு ஏன் இத்தனை கரிசனம்....)

13. இது சும்மா பாயிண்ட் சேத்தரதுக்காக எழுதினது...கரெக்டா?

20. உங்க அம்மாங்கற common women அப்படி இருந்ததால தான் இன்னிக்கி நீங்க ப்ளாக் எழுதறீங்க சார்....(ஹ ஹ ஹா....இது எப்படி இருக்கு...?)

அறிவிலி said...

@அப்பாவி தங்கமணி

அய்யய்யோ... காப்பாத்துங்க.... காப்பாத்துங்க... என்னைய தொரத்தி... தொரத்தி அடிக்கிறாங்க...

(அது என்ன 13க்கு மட்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்.... எங்கள பத்தி கொஞ்சம் நல்லதா சொன்னா ஒத்துக்காதே...)

அறிவிலி said...

@ அப்பாவி முரு

இப்ப இருந்தே தயாராகிக்கிட்ருக்கீங்க... ஆனா ஓண்ணும் ஒதவாது... நீங்க எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையா இருந்தாலும் தாமரைக்கனி ஸ்டைல்ல செல்லமா அப்பப்போ ரெண்டு தட்டு வுழத்தான் செய்யும்.

அறிவிலி said...

//வெற்றி-[க்]-கதிரவன் said...
உங்க வீட்டுல இந்த பதிவுக்கு என்ன ரெஸ்பான்ஸ் இருந்திருக்கும்ன்னு தெரியுது,

ஒரு வார மருத்துவ விடுப்பா ? :)))))//

எல்லாத்தையும் ப்ளான் பண்ணி செய்யணும் அப்படின்னு முன்னாடியே வெகேஷன் லீவ் அப்ரூவல் வாங்கிட்டேன்.

இலால்குடி பினாத்தல்கள் said...

சமீபத்தில் இடப்பட்ட மிக அருமையான பதிவுகளில் ஒன்று.

இருபது மிக ஜோர்.

பதிமூணு,பன்னெண்டு நம்மூட்ல நடக்குதுங்கோ.

இலால்குடி பினாத்தல்கள் said...

போன வாரம் அம்மா வீட்டுக்குப் போய்ட்டு வந்தது மறந்து போய் அம்மா விட்டுக்குப்போயே ரொம்ப நாளாயிடுத்துன்னு பொலம்பறது.

ரண்டு ரூபா பஸ் சார்ஜ்ல போய்ட்டு வந்துட முடியிற அவங்க அம்மா வீட்டுக்கு தினமும் பன்னண்டு ரூபாய்க்கு போன் பண்ணறது.

பையன் ஹாஸ்டல்ல பாவம் கஷ்டப்படரான்னு தினம் புலம்ப வேண்டியது.ஆனா அவன் லீவுக்கு வந்தததும் ரண்டும் அடிச்சிக்கறது.

ரொம்ப நேரம் நம்மகிட்ட திட்டு வாங்காம இந்த ஆளுக்கு இன்னிக்கு என்னமோ ஆயிடுத்தோன்னு ஒரு மாதிரி ஆயி சுத்தி சுத்தி வந்து வாங்க வேண்டிய கோட்டாவ வாங்கிண்டு போறது.

இந்திய தொல்லைக்காட்சியிலே சொன்னதையே 108வது முறையா சொல்லி மனுஷன நோகடிக்கறது.

நம்ம என்னமோ ஆபிஸ்ல தினம் தூங்கிட்டு வர மாதிரி மத்யானம் சித்த அரை மணி படுக்கறத்துக்குள்ள அயன்காரன் வந்து கழுத்தருத்துட்டாங்கறது.

குறுக்கெழுத்து போட்டியில விடை தெரியாம முத எழுத்து நே கடைசி எழுத்து ரு நடுவுல வேற எழுத்து இல்ல.அது யார்?ங்கற கேள்விக்கு மண்டையை உடைச்சுண்டு அப்புறம் நம்மகிட்ட நேரு-ன்னு கேட்டு தெரிஞ்சுண்டு இதுக்குதாண்டா முதல்லயே உங்கப்பாவ கேக்கணும்கிறதுனு ஆத்துக்காரர் அறிவை மெச்சிக்கறது.

கஞ்சப்பிசினாரினு நம்மளை கரிச்சு கொட்டிட்டு ஹோட்டலுக்கு போனா அம்மாவும் பையனும் ஒரு கட்டுகட்டிட்டு நடக்க தெனரிண்டு ஆட்டோல போலமாங்கங்கறது.

இது என்ன கண்றாவி புக்.ஒன்னும் புரியலைங்கறது நம்மகிட்ட.யாராவது வீட்டுக்கு வரவங்க பாத்துட்டு கேட்டா அவர்தான் விடிய விடிய பரிச்சைக்கு படிக்கறது மாதிரி படிப்பார்ங்கறது.

தோழன் said...

இதெல்லாம் சீரியஸ் இல்லதானே? சும்மா ஒரு ஜோக்குக்குத்தானே எழுதியிருக்கீங்க. பாரவாயில்ல. ஜஸ்ட் சிரிச்சுட்டுப் போயிரலாம். ஆனா, என்னோட நண்பர் ஒருவரோட அப்பா வயதான காலத்தில் இறந்து போயிருந்தார். நான் துக்க விசாரிப்புக்காக போயிருந்தபோது அவர் என்னிடம் இது எங்க அப்பா உபயோகப்படுத்திய கண்ணாடி, இது அவர் பயன்படுத்திய ஈசிச் சேர், இது அவரோட புத்தகங்கள், இதி அவரோட வாட்ச், இது அவரோட செருப்பு என்று சொல்லி அழுதார். நானும் ஆறுதல் படுத்த முயன்றேன். சிறிது சமாதானம் ஆனவுடன் கேட்டேன்; ’டேய் போனவருஷம் உங்கம்மா காலமானாங்களே அவங்களோட ஞாபாகார்த்தாமா என்ன எடுத்து வெச்சிறுக்கே’ அவனுக்கு அவங்க அம்மா மேலேயும் கொள்ளை ப்ரியம். ஆனா அவனாலே பதில் சொல்லமுடியாம அழுதான். ஆமாங்க இது அம்மாவோட கொழம்பு கரண்டி, இது அம்மாவோட விளக்குமாறு. இது அம்மாவோட மாத்திரை டப்பா அப்படின்னா சொல்லமுடியும்...? உங்கள் ப்ளாக்கிற்கு முதன் முதலா வருகைதரும் நாகநாதன் கே.

Prakash G said...

ஜோக் சொன்னா , முடித்தபின் அப்புறம் என்று கேட்ட்பார்கள்

முத்துகிருஷ்ணன் said...

எவ்வளவு நல்ல பை வீட்டுல இருந்தாலும்...கிடைக்கிற பாலித்தீன் பை எல்லாத்தயும் சேத்து சேத்து வைச்சிருப்பாங்க்க...
மிகவும் நல்ல பதிவு...

Anonymous said...

இன்னும் எவ்வளவு நேரம்தான் வலிக்காமாதிரியே இருக்கப்போறே?...

நல்ல நகைச்சுவையான பதிவு.. ரசித்தேன்..

ஹுஸைனம்மா said...

//ஒரு காமன் மேன் பார்வையில்//

சந்தேகமே இல்லை, பார்வையிலதான் கோளாறு!! முதல்ல கண்டாக்டரைப் போய்ப் பாருங்க! (கண்டக்டர் இல்லை)

அறிவிலி said...

இந்த இடுகையை தன்னுடைய தளத்தில் பரிந்துரை செய்து கருத்து தெரிவித்த எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
http://www.jeyamohan.in/?p=6731

அறிவிலி said...

@ இலால்குடியார்

கருத்துகளுக்கு நன்றி. :-)))

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு பரிந்துரை செய்த்தது நீங்களாகத்தான் இருக்கும் என ஊகிக்கிறேன். நன்றி.

அறிவிலி said...

@ தோழன் நாகநாதன் - நன்றி. நம்ம ஊர்க்காரரின்(திருச்சி) வருகை மகிழ்ச்சி தருகிறது.

@Prakash Gomathinayagam - நன்றி
@முத்துகிருஷ்ணன் - நன்றி
@surendran -நன்றி
@ஹுஸைனம்மா- வாங்குன அடியிலியே கொஞ்சம் பார்வை மாறித்தாங்க போயிருச்சு. just for joke.
:-)))

இலால்குடி பினாத்தல்கள் said...

ராஜி 20க்கு உன் 20 அருமை.100க்கு100 சரி.

Giri said...

இதை என் மனைவியிடம் சொன்னால் அப்படியே இதை உட்டாலக்கடி செய்து என்னைப் புகழ்ந்து (!!!!) என் 140 குணாதிசயங்களைச் சொல்லுவாள்!

அறிவிலி said...

@Giri
நெஜந்தாங்க... நல்ல வேளை அவுங்க பதிவு எழுதறதில்ல..

விநாயக முருகன் said...

இத புடிச்சுக்குங்க தல

வீட்டுக்கு பக்கத்திலேயே கடை இருந்தாலும் ஆட்டோ பிடித்தாவது சரவணாஸ்டோர்ஸில் ஹேர்பின் வாங்குபவர்கள்

காய்கறிக்கடையில் தரப்படும் கேரிபேக்குகளை கிழிந்துப்போனா‌‌‌லும் வீட்டில் சேகரித்து வைப்பவர்கள்

Srimathi said...

நல்லா இருக்கு அண்ணா... :))

//எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.//

இதுக்காக போடல... ;)))

Anonymous said...

இதையும் சேத்துக்கோங்கோ...
டிவியில வர எல்லா சமையல் புரொகிராமையும் விடாம பார்ப்பாங்க. ராத்திரி என்ன சமையல் என்று கேட்டால் “ வழக்கம் போல தயிர் சாதம்” என்பார்கள்.
-- கடுகு

அஞ்சா நஞ்சன் said...

super பதிவுண்ணா...

Uma said...

//4. மும்பை வெடிகுண்டு சம்பவ செய்தியை படிக்கும் பெண்ணின் தோடு டிசைன் நன்றாக இருப்பதாக ரசிப்பவர்கள்.// Jokes apart, this comment is in a very bad taste and it is hurting.

அறிவிலி said...

@என்.விநாயகமுருகன்- நன்றி
@Srimathi- நன்றி
@அஞ்சா நஞ்சன் - நன்றி
@Uma - மன்னிக்கவும். வருகைக்கு நன்றி

கடுகு அவர்களுக்கு - வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.

Dubukku said...

இன்னமுமா ஆஸ்பத்திரிக இல்லாம வீட்ல இருக்கீங்க :P

அறிவிலி said...

@Dubukku

அதுல ஒரு ரகசியம் என்னன்னா......???????

Thamira said...

காமெடியாக இல்லாமல் நிஜமாகவே தாக்குவதைப்போலவே ஒரு தொனியில் உள்ளது. அதனால் இது நம்ப ஏரியான்னாலும் ஒண்ணும் சொல்லாமலே போறேன். :-)

அறிவிலி said...

@ ஆதி

நன்றி.(லாஸ்ட்ல இருக்கற ஸ்மைலி மட்டும் போதும்).நகைச்சுவை,படிப்பவர்களின் மனநிலையையும் பொருத்தே இருக்கிறது.மற்ற சிலரின் பின்னூட்டங்களைப் போலவே உங்களின் வருத்தத்தையும் புரிந்து கொண்டேன்.

Anonymous said...

nice one! why not

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அடுத்தது எப்போ? உங்களுக்கு ஒரு தொடர் பதிவுக்கு அழைப்பு வெச்சு இருக்கேன். போய் படிச்சுட்டு சட்டு புட்டுன்னு பதிவ போடுங்க

Ananya Mahadevan said...

ஐயோ, சிரிச்சு சிரிச்சு முடியல! எப்படி இப்படி எல்லாம்?.. தப்பு தப்பா கணிச்சு எழுத முடியறது?

அறிவிலி said...

@அநன்யா.
நகைச்சுவை என்பதே பெரும்பாலும் அடுத்தவர்களின் தவறுகளை பார்த்து சிரிப்பதுதானே.

நீங்க சிரிச்சதே போதும்.

அறிவிலி said...

//அப்பாவி தங்கமணி said...
அடுத்தது எப்போ? உங்களுக்கு ஒரு தொடர் பதிவுக்கு அழைப்பு வெச்சு இருக்கேன். போய் படிச்சுட்டு சட்டு புட்டுன்னு பதிவ போடுங்க//

எழுதலாம் ஆனா..... முயற்சிக்கிறேன்.ஓரள்வுக்கு நல்லா வந்தா போடறேன்.

vinthaimanithan said...

பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்கவும். நான் சென்னையில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். எனக்கு சிங்கப்பூரில் என் தொழில் சம்பந்தமான் தொடர்புகளையும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்தித் தர முடியுமா? என் நிறுவனம் இந்திய அரசு அனுமதி பெற்ற நிறுவனம்.

Cable சங்கர் said...

தலைவரே.. அட்டகாசம் போங்கள்.

ஒரு விஷய்ம் பாருங்க.. ரஜினியாவே இருந்தாலும் லதாவுக்கு அவ்ரு புருஷன் தான்..:)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

100 ஒன்று வீதம் நான்கு சட்டை கணவருக்கு எடுத்து விட்டு,10000 ரூபாய்க்கு ஒரு புடவை தனக்கு எடுத்துக் கொண்டு,உங்களுக்கு நாநாநாநாநாலு சட்டையும் எனக்கு ஒரே புடவையும்தான் எடுத்தேன் என்று சொல்பவர்கள்!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

{பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்கவும். நான் சென்னையில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். எனக்கு சிங்கப்பூரில் என் தொழில் சம்பந்தமான் தொடர்புகளையும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்தித் தர முடியுமா? என் நிறுவனம் இந்திய அரசு அனுமதி பெற்ற நிறுவனம்.}

ராஜாராமன்,என்ன விதமான தொடர்புகளை எதிர்பார்க்கிறீர்கள்?

Unknown said...

miga miga arumaiyaga ullathu.en nanpargalukkum pagirnthukonden drbaskar

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.