Wednesday, April 21, 2010

சாலட் 22-ஏப்ரல்-2010


எலுமிச்சை:அங்காடித் தெரு படம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.ஒரு சில இடங்களில் மிகைப்படுத்தி காண்பித்திருப்பது போன்ற எண்ணம் தோன்றினாலும் வித்தியாசமான கதைக் களனை தேர்ந்தெடுத்தற்காகவே பாராட்டலாம்.

இந்த படத்தின் பாதிப்பினாலோ என்னவோ ஆதியும் ரங்கநாதன் தெரு : ஒரு எச்சரிக்கை என்று ரங்கனாதன் தெரு கூட்ட நெரிசலும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் பற்றி பதிவிட்டிருந்தார்.

அதே நேரத்தில் சிங்கப்பூரிலும் ஒரு பரபரப்பான விஷயம் நடந்து கொண்டிருந்தது. அனைவருக்கும் தெரிந்த சிங்கப்பூரின் மிகப் பிரபலமும் பெரியதுமான முஸ்தபா செண்டரின் முதல் தளத்தை 40 மணிநேரத்திற்கு மூடி வைக்க சிங்கப்பூர் குடியுரிமை பாதுகாப்பு படை SCDF) உத்தரவு பிறப்பித்தது.

கூட்ட நெரிசலும் அதனால் விளையக்கூடிய ஆபத்துகளையும் காரணம் கூறி இந்த நீதிமன்ற உத்தரவு செயலாக்கப்ப்பட்டது. கிட்டத்தட்ட 75000 சதுர அடி கொண்ட முதல் தளத்தில் ஒரே நேரத்தில் 431 பேருக்கு மேல் இருந்தால் அது கூட்ட நெரிசலாக கருதப்படுகிறது.

இந்த அளவுக்குப் போகாவிட்டாலும் ரங்கனாதன் தெரு மற்றும் அங்குள்ள கடைகளில் போதுமான Fire Exit போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகளை எந்த அரசுத்துறையாவது கவனிக்கிறதா?ஆபத்துக் காலங்களில் தீயணைப்பு வண்டிகள் இந்த தெருவுக்குள் நுழையவாவது முடியுமா???

*************************************************************************************
திராட்சை:சிங்கப்பூர் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் வெளிவந்துள்ளது. அரசு வரிவிலக்கு இல்லாத காரண்த்தாலோ என்னவோ "Kurushetram - 24 Hours of Anger" என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்ட இந்தப் படம் இந்த மாதம் 8 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளிவந்து வெற்றி!!!கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


சிங்கையில் பிரபலமான விஷ்ணு, மதியழகன், குணாளன் போன்ற சின்னத்திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தை இந்த வாரக் கடைசியில் (அது வரை ஓடிக் கொண்டிருந்தால்) திரையரங்கில் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதப் பார்க்கிறேன்.படத்தைப் பற்றிய மேல் விவரங்களும் ட்ரெயிலரும் இங்கே
(மற்ற சிங்கைப் பதிவர்கள் ஆரும் ஒரு வாரத்துக்கு இந்த படத்த பாக்க கூடாது, விமர்சனம் எழுதக் கூடாதுன்னு உத்தரவு போடறேன்.)

*************************************************************************************
அன்னாசி:சன் டிவியில் "சன் குடும்ப விருதுகள்" என்று ஒன்றை ஆரம்பித்து பாடாய் படுத்துகிறார்கள். தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பவர்களுக்கு போட்டியாம்!!! இதில் சிறந்த மாமியார், சிறந்த மருமகள், சிற்ந்த மாப்பிள்ளை என்று கேட்டகரிகள் வேறு. என்ன காரணத்தினாலோ ராதிகாவை இந்த குடும்பத்திலிருந்து விலக்கி வைத்திருக்கிறார்கள். (அ)நியாயமாக பார்த்தால் மனைவி, வைப்பாட்டி,மகள், அம்மா, மருமகள், மாமியார்,பாட்டி, பேத்தி,சித்தி, பெரியம்மா, அக்கா, தங்கை, ஓரகத்தியோட ஷட்டகரோட நாத்தனார் என்று எல்லா கேட்டகரியிலும் அவர் வந்திருக்க வேண்டும்.விஜய் டிவியில் ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சிக்கு ராதிகா நடுவராக வருவதற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? தெரியவில்லை.

(மே-9-2010 பிற்சேர்க்கை: ஆரம்ப நிகழ்ச்சிகளில் ராதிகா இல்லாததால் மேலே இருப்பது போல் எழுதினேன். பின்னர் இறுதியில் விருது நிகழ்ச்சியில் அவருக்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி என் முகத்தில் கரி பூசி விட்டார்கள்.)


*************************************************************************************
ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப் பின் சாலட் தொடரும்.




மிகவும் ரசித்த வானொலிக்கான விளாம்பரம்
*************************************************************************************
மாம்பழம்:சிங்கப்பூருக்கு வந்த புதிதில் சில இளைஞ, இளைஞிகள் வழிய வழிய போட்டுக் கொண்டிருக்கும் கால் சட்டைகளை பார்த்து பரிதாப்பட்டதுண்டு. "அய்யோ பாவம். என்ன கஷ்டமோ? புள்ளைங்க பேண்ட் வாங்கக் கூட காசில்லாம அப்பா, தாத்தாவோட பேண்டையெல்லாம் போட்டுட்டு திரியுதுங்க என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது அது ஒரு பேஷனாம்.

"Sagging Pants" என்ற இந்த கண்றாவி பேஷனை தடை செய்ததுதான் இப்போது அமெரிக்காவில் பரபரப்பான செய்தி.இந்த தடையைப் பற்றிய விவாதங்களும் விதண்டாவாதங்களும் வழக்கம் போல் இணையம் முழுக்க பரவிக் கிடக்கிறது.

இருந்தாலும் இந்த தடையை அறிவிக்கும் முன் அதில் இருக்கும் சில அனுகூலங்களையும்
கன்ஸிடர் பண்ணியிருக்கலாம்.

ரொம்ப அவசரமா சௌச்சால்யம் போகணும்னா... பெல்ட், ஜிப்புன்னு அவுத்து டயத்த வேஸ்ட் பண்ணாம "அப்படியே" போகலாம்.

ஜாக்கி, ஹில் ஃபிகர்னு காஸ்ட்லியா அண்டர்வேர் வாங்கிட்டு அத பேண்டால மூடி வெச்சு என்ன பிரயோசனம்?
*************************************************************************************
வாழை:அலுவலக ஆணிகளுக்கு இடையே அவ்வப்போது வீட்டுக்கு வரும்போது பையனுடன் சேர்ந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய கடமைதான் பதிவுகள் பக்கம் அடிக்கடி வரமுடியாததற்கு ஒரு காரண்மாக சொல்லிக் கொள்ளலாம்."கற்றுக் கொள்ள" என்ற பிரயோகத்திற்கு காரணம் கீழிருப்பது போன்ற சில உரையாடல்கள்தான்.

ஹரீஷ்: அப்பா, எனக்கு ஒரு சந்தேகம்.

நான்: என்னடா?

ஹரீஷ்: "Ramu bought a Pair of Pants for $10" அப்படின்னா ஒரு பேண்ட் வாங்கினானா, இல்ல ரெண்டு பேண்ட் வாங்கினானா?

நான்: சாதரணமாவே பேண்ட் பற்றி சொல்லும்போது இங்கிலீஷ்ல "Pair of pants" னு Pluralல தாண்டா சொல்ற வழக்கம்.

ஹரீஷ்: ஏன் அப்படி சொல்லணும்?

நான்: தெரியலியே, ஒரு வேளை ரெண்டு கால் இருக்கறதுனாலயோ?

ஹரீஷ்: அப்போ, ரெண்டு கை இருக்கற சட்டைக்கு ஏன் "Pair of Shirts" னு சொல்றதில்ல?

நான்: தெரியலியே... கொஞ்சம் பொறுமையா இரு, கத்துண்டு சொல்றேன். என் ப்ளாக் படிக்கறவங்க, ஃபாலோயர்ஸ் எல்லாம் பயங்கர ஜீனியஸ். நிச்சயமா பதில் சொல்லிருவாங்க பாரேன்.

20 comments:

க ரா said...

சாலட் நல்லாருக்கு

cheena (சீனா) said...

ஆபத்துகளைத் தடுக்க முன் முயற்சி - ரங்கநாதன் தெரு - உண்மை நிலை இது தான் - அரசு ஆவன் செய்ய வேண்டும். சட்டையை Pair எனச் சொல்வதேன் ? விடை கிடைத்ததா இல்லையா ?
சௌச்சால்யம் போக வசதிதான் - பெல்ட் ஸிப் அவுக்க வேணாம் - இந்தியாவிலே இன்னும் வரலையா

நல்லாருக்கு இடுகை - ஆதங்கம் - எல்லாம்
நல்வாழ்த்துகள் அறிவிலி @ ராஜேஷ்
நட்புடன் சீனா

அறிவிலி said...

//இராமசாமி கண்ணண் said...
சாலட் நல்லாருக்கு//

நன்றி.

அறிவிலி said...

//cheena (சீனா) said...
ஆபத்துகளைத் தடுக்க முன் முயற்சி - ரங்கநாதன் தெரு - உண்மை நிலை இது தான் - அரசு ஆவன் செய்ய வேண்டும். சட்டையை Pair எனச் சொல்வதேன் ? விடை கிடைத்ததா இல்லையா ?
சௌச்சால்யம் போக வசதிதான் - பெல்ட் ஸிப் அவுக்க வேணாம் - இந்தியாவிலே இன்னும் வரலையா

நல்லாருக்கு இடுகை - ஆதங்கம் - எல்லாம்
நல்வாழ்த்துகள் அறிவிலி @ ராஜேஷ்//

மிகவும் நன்றி... திரு.சீனா.

Manki said...

நியாயமான கேள்விங்கோ. ஆரம்ப காலத்துல ரெண்டு காலுமே தனித்தனியாத் தைச்சு விப்பாங்களாம். விக்கி ஆன்ஸர்ஸ்-ல சொல்றாங்க.

Thamira said...

பதிவை விட விளம்பரம் மிக அழகு. பையன் என்னை மாதிரின்னு நினைக்கிறேன். அப்பயும் பாருங்களேன். பந்த அடிச்சாலும் அடிக்காட்டியும் திரும்பவும் நடுவால வந்துடணும்னு ட்ரெயினிங் குடுத்துருக்கானுவ. பயபுள்ள ஸ்கேல் வைக்காத குறையா திரும்பவும் ப்ளேஸ்க்கு வருது பாத்திங்களா.?

அறிவிலி said...

@Manki,
மிகவும் நன்றி. இந்த லிங்க் பதிவு போடறதுக்கு முன்னாடியே பார்த்தேங்க,ஆனா பய ஒத்துக்க மாட்டேங்கறான். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?இதே மாதிரி சன் க்ளாஸ்,Panties அப்படின்னு நெறய விஷயத்துக்கு இதே மாதிரி யூஸ் பண்றாங்க.

Manki said...

அப்போ பையனை convince பண்றது கொஞ்சம் கஷ்டம் தான். கொஞ்ச நாள் போனா அவனே புரிஞ்சுப்பான் -- இதுல எல்லாம் ரொம்ப லாஜிக் பாக்க முடியாதுன்னு ;-)

(தமிழ்ல இது மாதிரி வார்த்தைகள் எதுவும் இருக்கான்னு யோசிச்சா எதுவுமே தோன மாட்டேங்குது.)

அறிவிலி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
பதிவை விட விளம்பரம் மிக அழகு. பையன் என்னை மாதிரின்னு நினைக்கிறேன். அப்பயும் பாருங்களேன். பந்த அடிச்சாலும் அடிக்காட்டியும் திரும்பவும் நடுவால வந்துடணும்னு ட்ரெயினிங் குடுத்துருக்கானுவ. பயபுள்ள ஸ்கேல் வைக்காத குறையா திரும்பவும் ப்ளேஸ்க்கு வருது பாத்திங்களா.?//

வாங்க ஆதி. க்வாலிடி கண்ட்ரோல் ஆசாமின்னு ப்ரூவ் பண்ணிக்கிட்டே இருக்கீங்களே... :-))))

Mahesh said...

/அப்போ, ரெண்டு கை இருக்கற சட்டைக்கு ஏன் "Pair of Shirts" னு சொல்றதில்ல?//

ஸ்வாமி... கையில்லாத ஷர்ட் இருக்கலாம்... கால் இல்லாத பேண்ட் இருக்கவே முடியாதே !!! எப்பிடி லாஜிக்கு???? போங்க... போய் புள்ளகுட்டிகளுக்கு விவரமாச் சொல்லி நல்லா படிக்க வைங்க...

அறிவிலி said...

@Mahesh

காலே இல்லாத பேண்டீஸுக்கும் "A pair of panties" னுதான் சொல்வாங்களாமே !!!

Mahesh said...

சிங்கபுரி இளவரசரின் சந்தேகம் தீர்ந்தது !!!

பேண்ட் என்பது கால்களுக்கு - இரண்டு கால்கள் இருப்பதால் "pair ". சட்டை உடம்புக்கு (கைகளுக்கு மட்டும் அல்ல) அதனால் just shirt !!

அறிவிலி said...

@ Mahesh

யாரங்கே? இளவரசரின் ஐயம் தீர்த்த மந்திரியாருக்கு தகுந்த "சன்மானம்" அளியுங்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வெயிலுகேத்த நல்ல சாலட். கலக்குங்க

Ahamed irshad said...

சாலட்.. நல்லாயிருக்குதுங்.....

அறிவிலி said...

@அஹமது இர்ஷாத்,

நன்றிங்...

Unknown said...

nice writing sir

அறிவிலி said...

நன்றி.. திரு பாஸ்கரன்.

சிங்கப்பூர்???

Unknown said...

yes , Sir.

Singapore only ...I am residing at Boonlay

Unknown said...

Sure Sir , i will give you a call .

my number is 90180513 .

Thanks - Bash

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.