தான் புதிதாக டிசைன் செய்த கைக்கடிகாரத்துக்கு போதுமான முதலீடு கிடைக்காததால் எரிக் மிக்கோவ்ஸ்கி ஏப்ரல் 2012ல் கிக்ஸ்டார்ட்டர் என்ற Crowd Funding இணையதளத்தில் பொதுமக்களிடம் முதலீடு கோரினார்.
அவர் நிர்ணயித்திருந்த இலக்கு 100,000 அமெரிக்க டாலர்கள் மட்டுமே. ஆனால் இந்தத் தொகை இரண்டே மணிநேரத்தில் கிடைத்தது மட்டுமல்லாமல், சில நாட்களுக்குள்ளாகவே கிட்டத்தட்ட 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலானது.
சில வருடங்களுக்கு முன்பு வரை செல்போன்களின் அளவு சிறியதாகிக் கொண்டே வர,எவ்வளவு சிறியதோ அவ்வளவு விலை அதிகமாகவும் இருந்தது. ஸ்மார்ட் போன்களின் வரவு, நிலைமையை தலைகீழாக்கியது. கிட்டத்தட்ட கம்ப்யூட்டரில் செய்யும் அத்தனை தினப்படி வேலைகளையும் போனிலேயே செய்ய இயலுவதால் திரையின் அளவும், அதன் தொடர்ச்சியாக போனின் அளவும் பெரிதாகிக் கொண்டே போக ஆரம்பித்துவிட்டது.
இந்தப் பெரிய போன்களால் பல அனுகூலங்கள் கிடைத்தாலும் சில அசெளகரியங்களும் சேர்ந்தே வந்தன.உதாரணமாக, காதுக்கும் தோளுக்கும் இடையில் கிடத்தி பேசிக்கொண்டே எதிரில் வரும் லாரிக்கும், கூடவே வரும் பஸ்ஸுக்கும் இடையிலான 6 அங்குல சந்தில் புகுந்து செல்லும் வித்தை தெரியாதவர்கள்,போன் அடித்தால் பைக்கை ஓரங்கட்டிவிட்டுத்தான் யார் கூப்பிடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.ஹெட்செட் மாட்டியிருந்தாலும், யார் என்றே தெரியாமல் அட்டெண்ட் செய்து போன வாரம் பணத்தை திருப்பித் தருவதாய் சொல்லியிருந்த கடன் கொடுத்த பாவியிடம் மாட்டிக் கொள்ள வாய்ப்பு அதிகம்.
அலுவலகக் கூட்டங்களில் உட்கார்ந்திருக்கும் போது காலோ, மெஸ்ஸேஜோ வந்தால், முக்கியமானதா? இல்லை சகதர்மினியின் "ஒண்ணுமில்ல, சும்மாத் தான், என்ன பண்றீங்க?"அழைப்பா என்று தெரிந்து கொள்ளவே போனை கையிலெடுத்துப் பார்க்க வேண்டும்.
இதுவே உஙகள் கைக்கடிகாரத்தில் அழைப்பவர் பெயர் தெரிந்தால், நீஙகள் எதிர்பார்த்திருக்கும் முக்கியமான அழைப்பாக இருக்கும் பட்சத்தில் எழுந்து வெளியில் போய் பேசிவிட்டு வரலாம். ஒவ்வொரு முறையும் போனை எடுத்துப் பார்த்தால் உங்களையும் பக்கத்தில் வாட்ஸாப்பில் கடலை போட்டுக்கொண்டிருப்பவரைப் போல நினைக்க வாய்ப்புகளுண்டு. அதே போல் மெஸ்ஸேஜ் வந்தாலும் கடிகாரத் திரையில் பார்த்துவிட்டு, அவசரச் செய்திகளுக்கு மட்டும் பதிலளித்து உங்களை சாகத் தூண்டும் இன்ஷூரன்ஸ் விளம்பரங்களை புறக்கணிக்கலாம்.
இத்தகைய ஸ்மார்ட் வாட்ச்களை தயாரித்து சந்தைப்படுத்த பல நிறுவனங்கள் முயற்சி செய்தாலும் பெரிய அளவில் வெற்றி கிட்டவில்லை. சோனி ஓரிரண்டு மாடல்களை வெளியிட்டது.ஆனால் பெரிய அளவு மற்றும் எடை, அடிக்கடி போனுடன் தொடர்பு துண்டித்துக் கொள்ளும் பிரச்சினை, 5-6 மணிக்கொரு தடவை வாட்சை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் போன்ற இன்னல்களால் மக்களிடம் பெரிய வரவேற்பு இல்லாமல் போயிற்று. அது மட்டுமின்றி மணி பார்ப்பதற்கே திரையைத் தொடவோ அல்லது பட்டனை அழுத்தவோ வேண்டியிருக்கும். சில போன்களைப் போலவே சூரிய ஒளியில் ஒன்றும் கண்ணுக்கு தெரியாது.
எரிக், தான் டிசைன் செய்த கைக்கடிகாரத்தில் மேற்சொன்ன பிரச்னைகள் எதுவும் இருக்காதென்று துண்டெல்லாம் போடாமல் சத்தியம் செய்ததை நம்பித்தான் அறுபத்தியிரண்டாயிரம் பேர் பணத்தைக் கட்டினார்கள்.
எனக்கு இதைப்பற்றி தெரிய வந்தது ஜனவரி 2013ல் தான்.சோனியின் ஸ்மார்ட் வாட்ச் பற்றித் தேடும்போது அகஸ்மாத்தாக கண்ணில்பட்டது. எங்களுக்கு போதுமான பணம் சேர்ந்துவிட்டது, உங்களுக்கு வாட்ச் வேணும்னா, பணமெல்லாம் இப்ப கட்ட வேணாம், பதிவு மட்டும் செஞ்சுக்கங்க. வரிசைக்கிரமப்படி உங்கள் முறை வரும்போது மின்னஞ்சல் அனுப்புவோம், அப்ப பணம் கட்டினா போதும் என்ற அவங்களோட டீல் பிடித்திருந்ததால் பதிவு செய்து வைத்தேன். எனக்கு கடந்த செப்டெம்பரில் மின்னஞ்சல் வருவதற்குள் பல்லாயிரம் பேர் பல மாதங்களாக உபயோகிக்க ஆரம்பித்து இணையமெங்கும் பாசிடிவ் ரிவ்யூக்கள் விரவியிருந்தன. எனவே தைரியமாக பணத்தைக் கட்டிவிட்டேன்.அக்டோபர் முதல் வாரத்தில் வந்தும் சேர்ந்துவிட்டது. மிகவும் சிம்பிளான பேக்கிங், வாட்சும் ஒரு யு.எஸ்.பி சார்ஜிங்;கேபிளும் மட்டுமே.மற்றபடி ஒரு துண்டு காகிதம் கூட கிடையாது.
சார்ஜிங் கேபிள் செருக வாட்சில் கனெக்டர் எதுவும் கிடையாது.வாட்சின் இடது பக்கத்தில் இருக்கும் இரு காப்பர் புள்ளிகளுக்கு அருகே கேபிளை கொண்டு போனால் பச்சக் என்று காந்த சக்தியில் ஒட்டிக்கொள்கிறது. மறுமுனையை போன் சார்ஜரிலோ,கம்ப்யூட்டர் யு.எஸ்.பி போர்டிலோ கனெக்ட் செய்து சார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஆண்ட்ராய்ட் போனில் Pebble என்ற அப்ளிகேஷனை நிறுவிக்கொண்டு, ப்ளூடூத் பேரிங் செய்தவுடன் caller id யையும், SMS ஐயும் அழகு சொட்ட வாட்சிற்கு அனுப்பி வைத்து விடுகிறது.
Pebble notifier போன்ற அப்ளிகஷன்கள் மூலம் பேஸ்புக் , வாட்ஸாப், ஈமெயில்,ஜிமெயில் என்று எல்லாவிதமான நோட்டிபிகேஷன்களையும் கைக்கடிகாரத்துக்கு அனுப்பும் வகையில் நம் தேவைக்கேற்றபடி செட்டப் செய்ய முடிகிறது. நான் கேலண்டர் மற்றும் அலுவலக மின்னஞ்சல் தவிர வேறெதற்கும் Configure செய்யவில்லை. ஒவ்வொரு நோட்டிபிகேஷனுக்கும் வாட்ச் ஒருமுறை அதிர்ந்து நம் கவனத்தை ஈர்க்கிறது.
போன் திரைகளைப் போலில்லாமல் சூரிய ஒளியில் பளீரென்று தெரிகிறது. இருட்டில் படிக்க பேக்லைட் உண்டு. கையை லேசாக ஆட்டினால் போதும்.உள்ளிருக்கும் ஆக்ஸலரோமீட்டர் பேக்லைட்டை ஒளிரவைத்து விடுகிறது.
நேரம் காட்டும் திரையின் வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கலாம். இதற்காக தமிழ் உட்பட ஆயிரக்கணக்கான watchface டிசைன்கள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. போனில் டவுன்லோட் செய்து மாற்றிக்கொண்டே இருக்கலாம். தினம் ஒரு வாட்ச் கட்டுவது போன்ற ஒரு பிரமையை கொடுக்கிறது.எட்டு watchface வரை வாட்சிலேயே சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
அதிலும் திருப்தியில்லாவிட்டால் canvas for Pebble போன்ற அப்ளிகேஷன் மூலமாக போனிலேயே நீங்களே டிசைன் செய்து கொள்ளலாம்.கூகிள், ஆப்பிள் போலவே Pebble App Storeம் இந்த வாரத்திலிருந்து திறந்து விட்டார்கள்.
ரெகுலரான firmware அப்டேட், பயனார்களின் சந்தேகங்களை நிவர்த்திக்க forum, டெவெலப்பர்களுக்கான களமமைத்து கொடுத்தல் போன்ற விஷயங்கள் மூலம் பிற்காலத்தில் ஒரு நல்ல பிராண்டாக உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகளை காட்டுகிறார்கள்.
கடந்த 3 மாதங்களில், வார இறுதிகளில் மட்டும் ஒரு முறை சார்ஜ் செய்தாலே போதுமானதாக இருக்கிறது.
குறைகள் என்று பார்த்தால், பார்வைக்கு ஒரு சீப் பிளாஸ்டிக் வாட்சாக தோற்றமளிப்பதைக் கூறலாம். சாம்சங்கின் கேலக்சி கியர் அல்லது சோனி ஸ்மார்ட் போலவோ கலர் டிஸ்ப்ளே/டச் ஸ்க்ரீனோ இல்லைதான். ஆனால் அதுவே இதற்கு சாதகமான பேட்டரி லைப் ஐ கொடுக்கிறது.
இப்போது சில நாட்களுக்கு முன் ஸ்டீல் கேசிங்கில் புதிய மாடலையும் வெளியிட்டு விட்டார்கள். ஆனால் விலைதான் US$250.
எந்த பொருளும் நமக்காக வேலை செய்ய வேண்டும். நம்மை வேலை வாங்கக்கூடாது. அந்த விதத்தில், கூழாங்கல் எனக்கு ஒரு உபயோகமான பொருளாகவே இருக்கிறது.
முதலில் அவர்களின் இணையதளம் மூலமாக விற்று வந்தவர்கள் தற்போது அமெர்க்காவின் பிரபலமான Best Buy போன்ற கடைகள் மூலமாகவும் விற்பனை செய்கிறார்கள்.
அந்த கைக்கடிகாரத்தால் என்ன செய்ய இயலும், அதில் என்ன புதுமை போன்றவற்றையெல்லாம் விளக்கி, முதலீடு செய்பவர்களுக்கெல்லாம், தயாரானவுடன் சகாய விலையில் (US$150க்கு பதில் US$99) மட்டுமே கைக்கடிகாரத்தை தருவதாகவும் வாக்குறுதியளித்திருந்தார்.

0 comments:
Post a Comment
எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.
ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.