Tuesday, March 17, 2009

நீங்க 5 ஆம் வகுப்பு மாணவரை விட அறிவாளியா?

"Are you smarter than a 5th grader?"

இது மிக சுவாரசியமான ஒர் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி.ஆஸ்திரேலியாவின் ஃபாக்ஸ் ப்ராட்காஸ்டிங்க் கம்பெனியால் தயாரிக்கப்பட்டு பல நாடுகளிலும் சக்கை போடு போடும் ஒரு நிகழ்ச்சி.

ஆசிரியர்கள், விஞ்ஞானிகள்,பொறியியல் வல்லுநர்கள் என்று பலரையும் கூப்பிட்டு வைத்து ஐந்தாம் வகுப்பும் அதற்கு கீழேயும் இருக்கும் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்பார்கள். கூடவே துறு துறுவென்று அறிவுக்களை சொட்டும் சில பொடிசுகளையும் நிற்க வைத்திருப்பார்கள். பெரியவர்கள் பதில் தெரியாமல் ஞே..வென்று முழித்துக்கொண்டோ, அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டோ, தலையை சொறிந்து கொண்டோ இருக்கும்போது இந்த சிறிசுகள் பஸ்ஸரை அமுத்திவிட்டு நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு நிற்கும்.விடை தெரியாவிட்டால் அவர்கள் தெரிவு செய்திருக்கும் சுள்ளானிடம் உதவி கேட்கலாம்.

கடைசியில் தோற்று வெளியேற வேண்டியிருந்தால், " நான் ஐந்தாம் வகுப்பு மாணவனைவிட புத்திசாலி இல்லை" என்று வாக்குமூலம் கொடுத்துவிட்டு வெளியேறவேண்டும்.

இப்பத்தான் விஷயத்துக்கே வரேன்.

என் பையனுக்கு சென்ற வருடம் (4ம் வகுப்பு) வீட்டு பாடமாக கொடுக்கப்பட்ட ஒரு கணக்கும், ஒரு ஆங்கில கேள்வியும் கீழே.

கணக்கு - ஒரு பண்ணையில் சில ஆடுகளும், கோழிகளும் ஒரிடத்தில் நின்று கொண்டிருந்தன.மொத்தம் 40 தலைகளும் 100 கால்களும் இருந்தன. எத்தனை ஆடு, எத்தனை கோழி இருந்தது?

ஆங்கிலம் - She is very lucky to have such obedient sons and daughter-in-laws
இந்த வாக்கியத்தில் உள்ள தவறு என்ன?

இந்த கேள்விகளுக்கு பின்னூட்டத்தில் பதில் சொன்னால் யுனிவர்சிட்டி ஆஃப் டுபாக்கூரின் அஞ்சாம்ப்பு சான்றிதழ் வி.பி.பி யில் அனுப்பி வைக்கப்படும்.

28 comments:

Anonymous said...

30 koli 10 aadu

இராகவன் நைஜிரியா said...

// கணக்கு - ஒரு பண்ணையில் சில ஆடுகளும், கோழிகளும் ஒரிடத்தில் நின்று கொண்டிருந்தன.மொத்தம் 40 தலைகளும் 100 கால்களும் இருந்தன. எத்தனை ஆடு, எத்தனை கோழி இருந்தது? //

10 ஆடுகளும் 30 கோழிகளும் இருந்தன.

//She is very lucky to have such obedient sons and daughter-in-laws//

தமிழே அரைகுறை இதுல இங்லிபீசு மிஸ்டேக்கு வேற கண்டு பிடிக்கணமா..

அதுக்கு வேற ஆள பாருங்கப்பு..

We The People said...

30 ஆடுகள் + 10 கோழிகள்

ஆங்கிலம் ரெம்ப கன்பூஷனா இருக்குபா :(

பி.கு: உம்ம பதிவு பக்க தெரியாமா வந்துட்டேன், எச்சரிக்கை படித்து பயந்து போய் தான் இந்த பின்னூட்டம், தவறு இருந்தால் மன்னிக்கைவும் ;)

:)))))))))

அறிவிலி said...

We The People ,இராகவன் நைஜிரியா மற்றும் ஒரு அனானி ஆகியோர் கணக்கு பாடத்தில் பாஸ்.


ஆங்கிலம் அரியர்ஸ் க்ளியர் செய்தால்தான் சான்றிதழ்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஆடு- 10
கோழி - 30

doughters in law

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஆடு- 10
கோழி - 30

doughters in law

அறிவிலி said...

அறிவிலி said...
யோகன் பாரிஸ்(Johan-Paris) அவர்கள் இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லியிருக்கும் முதல் நபர். பாராட்டுக்கள் யோகன்.

உங்கள் வருகைக்கு நன்றி

புருனோ Bruno said...

10 ஆடு - 10 தலை + 40 கால்
30 கோழி - 30 தலை + 60 கால்

புருனோ Bruno said...

She is very lucky to have such obedient sons and daughters-in-law என்பது சரி

அறிவிலி said...

Dr. புருனோ Bruno - இரண்டும் சரியாக சொல்லிவிட்டார்.

வருகைக்கு நன்றி, புருனோ அவர்களே...

Anonymous said...

he is very lucky to have such obedient sons and daughterS-in-law

அறிவிலி said...

மேலும் ஒரு அனானி, ஆங்கிலம் மட்டும் சரியாக சொல்லி, கணக்கை சாய்ஸில் விட்டு விட்டார்.

Hari said...

20 and 20
An obedient

Hari said...

sorry i think i gave wrong ans..
The correct ans is 10 and 30...

அறிவிலி said...

வாங்க முத்து...

ரெண்டாவது அட்டெம்ப்ட்ல கணக்கு கரெக்ட்டு.

ஆனா ஆங்கிலம்... இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க...வந்துரும்.

அறிவிலி said...

24 மணி நேரத்துக்கு மேல் என் பதிவுக்கு பெரும்பாலும் யாரும் வருவது அபூர்வம் என்பதால்,
விடைகள் வெளியிட்டுவிட்டேன்.

பதில் சொன்னவர்களுக்கும், சும்மா போனவர்களுக்கும் நன்றி.

Think Why Not said...

நானும் வந்தேன்... but answer சொல்லுறதுக்குள்ள போட்டிட்டீங்க.....

Gnanz said...

கொஞ்சம் லேட்-அ வந்துடேனோ...
பரவலா நெக்ஸ்ட் மீட் பண்றேன்..

அறிவிலி said...

//Thinks Why Not - Wonders How said...
நானும் வந்தேன்... but answer சொல்லுறதுக்குள்ள போட்டிட்டீங்க.....//

சொல்லிருந்தீங்கன்னா, வெயிட் பண்ணிருப்பணே..
பரவால்ல அடிக்கடி வாங்க.

அறிவிலி said...

//ursgnanz said...
கொஞ்சம் லேட்-அ வந்துடேனோ...
பரவலா நெக்ஸ்ட் மீட் பண்றேன்..//

அடிக்கடி வாங்க நன்றி.

தென்னவன். said...

X+Y = 40
2X+4Y=100

2X+2Y = 80
(-)2X(-)4Y=-100
-----------------
-2Y = -20
Y = -20/-2


Y = 10
X = 30

இந்த வழிமுறைகள் எல்லாம் எனக்கு நினைவில் இருக்கும்னு சத்யமா எதிர்பார்க்கல.

நல்ல பயிற்சி
நன்றி

அறிவிலி said...

//Thennavan Ramalingam said...
இந்த வழிமுறைகள் எல்லாம் எனக்கு நினைவில் இருக்கும்னு சத்யமா எதிர்பார்க்கல.//

தென்னவன், இந்த வழிமுறையை 4ம் வகுப்பு மாணவனுக்கு புரிய வைக்க வேண்டும்.உண்மையான சவால் அதில்தான்.

கீழே என் பின்னூட்டத்தில் எளிய முறையை சொல்கிறேன்.

அறிவிலி said...

Algebra தெரியாத குழந்தைகளுக்கு பள்ளியில் சொல்லித்தரும் முறை இது.

முதலில் வரிசைக்கு 10 ஆக 40 தலைகள் வரைந்து கொள்ள வேண்டும்(தலைக்கு பதிலாக சிறு வட்டங்கள்).

ஒவ்வொரு தலைக்கும் இரு கால்கள்(சிறு கோடுகள்) வரைய வேண்டும்.மொத்தம் 80 கால்கள் வரைந்திருப்போம்.

பிறகு முதல் தலையிலிருந்து ஆரம்பித்து(81,82 என்று 100 வரை எண்ணிக்கொண்டே)ஒவ்வொரு தலைக்கும் 2 கால்கள் சேர்த்துக்கொண்டே வரவேண்டும்.

இப்போது இரண்டு கால்கள் இருப்பதை எண்ணிணால் கோழிகளும், நாலு கால்கள் இருப்பதை எண்ணிணால் ஆடுகளும் கிடைக்கும்.

தென்னவன். said...

ஆமாங்க, இது குழந்தைகளுக்கு எளிமையா இருக்கும்.
தெரிஞ்சு வச்சிக்கறேன், கண்டிப்பா பின்னாடி தேவைப்படும். :)
ரொம்ப நன்றி.

அசோசியேட் said...

///பதில் சொன்னவர்களுக்கும், சும்மா போனவர்களுக்கும்(?) நன்றி.----///
escape(d)...........................

அறிவிலி said...

//அசோசியேட் said...
///பதில் சொன்னவர்களுக்கும், சும்மா போனவர்களுக்கும்(?) நன்றி.----///
escape(d)...........................///

வாங்க, அவ்வளவு ஈசியா வுட்ருவோமா.. இன்னும் இதே மாதிரி 100 எபிசோட் வர்ரா மாதிரி சரக்கு வெச்சிருக்கேன்.

தேவன் மாயம் said...

ஆசிரியர்கள், விஞ்ஞானிகள்,பொறியியல் வல்லுநர்கள் என்று பலரையும் கூப்பிட்டு வைத்து ஐந்தாம் வகுப்பும் அதற்கு கீழேயும் இருக்கும் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்பார்கள். கூடவே துறு துறுவென்று அறிவுக்களை சொட்டும் சில பொடிசுகளையும் நிற்க வைத்திருப்பார்கள். பெரியவர்கள் பதில் தெரியாமல் ஞே..வென்று முழித்துக்கொண்டோ, அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டோ, தலையை சொறிந்து கொண்டோ இருக்கும்போது இந்த சிறிசுகள் பஸ்ஸரை அமுத்திவிட்டு நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு நிற்கும்.விடை தெரியாவிட்டால் அவர்கள் தெரிவு செய்திருக்கும் சுள்ளானிடம் உதவி கேட்கலாம்.
///

வகையா மாட்டுவனுங்க போல இருக்கே!

அறிவிலி said...

ஆமாங்க தேவன், அதுவும் பாக்க நல்லா இருக்கும்.

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.