Sunday, March 8, 2009

ஆம்பளைங்க தினம் - ஒரு அவசியத் தேவை

மகளிர் தின நிகழ்ச்சிகளுக்கான தொலைக்காட்சி விளம்பரங்களை பார்த்துவிட்டு என் பையனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல்.

(அ- அப்பா, பை - பையன்)

பை:- அப்பா " இன்னிக்கு என்னப்பா மகளிர் தினம், மகளிர் தினம்கறாங்களே, அப்படின்னா என்னப்பா?"

அ:- அது வந்துப்பா பொம்பளைங்க எல்லாரும் ஆம்பளைங்களுக்கு ஈக்வலா எல்லாத்துலயும் ரைட்ஸ் வேணும்னு கேக்கறதுக்காக இப்படி ஒரு நாள கொண்டாடுறாங்கப்பா.

பை:-எங்க இருக்கற பொம்பளைங்க,யாருகிட்ட, எதுல ரைட்ஸ் வேணும்னு கேக்கறாங்க?

அ:-வீட்ல, நாட்ல, படிப்புல எல்லாத்துலயும்தாம்ப்பா.

பை:-என்னப்பா சொல்ற?,நம்ப வீட்ல அம்மாதான் தினமும் என்ன சாப்பாடுன்னு முடிவு செஞ்சு செய்யறாங்க.அதத்தான் நாம சாப்புடறோம்.பேங்க் ATM கார்ட் அம்மாட்டதான் இருக்கு. உனக்கு காசு வேணும்னா அம்மாட்ட வாங்கிட்டு போற.எனக்கு ஸ்கூல் கேண்டீன்ல சாப்பிட அம்மாதான் காசு கொடுக்கறாங்க.

அ:-டேய், நம்ம வீடு மாதிரியே எல்லார் வீட்லயும் இருக்காதுடா. அது மட்டும் இல்லாம வெளி உலகத்தையும் பார்க்கணும்டா.

பை:-இல்லப்பா, நான் பாத்து எல்லா ஃப்ரெண்ட்ஸ், க்ளாஸ் மேட்ஸ் எல்லாருமே இப்பிடித்தான்.ஏன் நம்ம ஊர்ல கூட பாட்டி தான் எல்லாம் வாங்கித்தருவாங்க.

அ:-நெறைய பேர் வீட்ல கேர்ள்ஸ்லாம் படிக்க வைக்கவே மாட்டாங்கப்பா.வளர்ந்தவுடன கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டு வேலயெல்லாம் செஞ்சுகிட்டே இருந்துருவாங்க.

பை:-இல்லப்பா, என் க்ளாஸ்ல 30 ஸ்டூடண்ட்ஸ்ல 18 கேர்ள்ஸ்.என் க்ளாஸ் டீச்சர் ஒரு லேடி. என் ஸ்கூல் ப்ரின்சிப்பால் ஒரு லேடிதான். அவங்க சொல்றததான் எங்க பிஸிகல் எஜுகேஷன் டீச்சர் மாதிரி ஆம்பள டீச்சர்ஸ்லாம் கூட கேப்பாங்க.

அ:-சிங்கப்பூர் ஒரு வளர்ந்த நாடுப்பா. இங்கல்லாம் எல்லாருக்கும் ஈக்வலா சான்ஸ் கெடைக்கும்.ஆனா இந்தியா மாதிரி ஒரு வளர்ற நாட்ல இதெல்லாம் தேவைப்படும்ப்பா.

பை:-நானும் இந்தியாவுல ஒண்ணாவது படிக்கும்போது என் கூட நெறைய கேர்ள்ஸ் படிச்சாங்களே?

அ:-நீ படிச்சது சிட்டில. வில்லேஜஸ்ல எல்லாம் வேற மாதிரி இருக்கும்.

பை:-அவுங்க ஊர்லயெல்லாம் கேர்ள்ஸ டிவி பார்க்க உடுவாங்களா?

அ:-ஏன் கேக்கற?

பை:-இல்லாட்டி அவுங்களுக்கெல்லாம் மகளிர் தினம்னு எப்படி தெரியும்?

அ:-இல்லடா இந்த நிகழ்ச்சியெல்லாம் பாக்கற எல்லார்க்கும் ஒரு அவேர்னஸ் வந்து மாறணும்ணுதான்.

பை:-எல்லாரும் மாறிட்டா என்ன ஆகும்?

அ:-லேடிஸ்லாம் நல்லா படிச்சு பெரிய பதவிக்கெல்லாம் வருவாங்கப்பா.

பை:-ப்ரெசிடென்ட்டுதானே இந்தியாவுல மிகப்பெரிய பதவி?

அ:-ஆமா..

பை:-இந்தியாவோட ப்ரெசிடென்டே லேடிதானே...அடுத்த ப்ரைம்மினிஸ்டர் சோனியாவா, அத்வானியான்னு தானே போட்டின்னு அன்னிக்கு சொன்னிங்களே?
ஆஆங்க்... அப்பற்ம் நெறைய பேரு ஜெயலலிதா கால்ல உழுந்து கும்புடறத டிவில காட்றாங்களே?

என் மனைவி:- என்னா இங்க அப்பாவும் புள்ளையும் வெட்டி அரட்டை, சீக்கிரம் வந்து சாப்பிடுங்க. வேலய முடிக்கணும்.

அ:-டேய், வா சாப்பிட போலாம், இல்லாட்டி அம்மா டென்ஷன் ஆயிருவாங்க. (மனதுக்குள் - அப்பாடி.. இப்போதைக்கு தப்பிச்சேன்..)

பை:- போப்பா... ஆக்சுவலா ஆம்பளைங்க தினம்தான் கொண்டாடி நம்ம ரைட்ஸ்லாம் கேக்கணும் (முனகிக்கொண்டே போகிறான்)

பி.கு - படிப்பவர்கள் எல்லாரும் தயவு செய்து, நல்ல பாய்ண்ட்ஸ் இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க. திருப்பி டாபிக் ஆரம்பிச்சா யூஸ் ஆவும்.

24 comments:

ஆ.ஞானசேகரன் said...

சொல்ல வேண்டியது, ஆணாடிமை பற்றி பேச கலியுக பெரியார் தேவையாகின்றது..

இராகவன் நைஜிரியா said...

ஓ.. உங்க பையன் இப்படி எல்லாம் கேள்வி கேட்பாரா...

நீங்க அதுக்கெல்லாம் பதில் வேற சொல்லுவீங்களா..

உங்கள் தங்ஸ் கட்டுப்பாடா வச்சுக்கிடல அப்படின்னு இப்பத்தான் புரியுது.

நம்ம வீட்ல, பையன் எதாவது கேள்வி கேட்டா, இது மாதிரி கேள்விக்கெல்லாம் அப்பாவுக்கு பதில் தெரியாதுப்பா, அம்மாவைக் கேளு அப்படின்னு சொல்லிடுவேன்.

இராகவன் நைஜிரியா said...

தமிழ்மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டு போட்டாச்சுங்க...

எதோ என்னால முடிஞ்சது.. இதுதாங்க..

இந்த மாதிரி விசயத்துக்கெல்லாம் என்ன தயவு செய்து சப்போர்ட் பண்ணச் சொல்லி கேட்கப்பிடாது.

இ.பி.கோ 498A said...

உங்கள் மகன் நாட்டு நடப்பு தெரிந்து விவரமாக பேசியிருக்கிறார்.

ஆனால் பெண்களின் துயர் துடைக்கிறோம் என்ற போர்வையில் பல கொடுங்கோன்மைச் சட்டங்களைப் போட்டு அவற்றின் மூலம் பல பெண்களையே கொடுமைப்படுத்தும் நிலைமையை அறிய இந்த வலைப்பதிவைப் படியுங்கள்:

http://tamil498a.blogspot.com/2009/03/blog-post.html

அறிவிலி said...

//ஆ.ஞானசேகரன் said...
சொல்ல வேண்டியது, ஆணாடிமை பற்றி பேச கலியுக பெரியார் தேவையாகின்றது..//

ஹ்ம்ம்... ஆமாம் சார்... ஆமாம்

அறிவிலி said...

//இராகவன் நைஜிரியா said...
ஓ.. உங்க பையன் இப்படி எல்லாம் கேள்வி கேட்பாரா...

நீங்க அதுக்கெல்லாம் பதில் வேற சொல்லுவீங்களா..

உங்கள் தங்ஸ் கட்டுப்பாடா வச்சுக்கிடல அப்படின்னு இப்பத்தான் புரியுது.

நம்ம வீட்ல, பையன் எதாவது கேள்வி கேட்டா, இது மாதிரி கேள்விக்கெல்லாம் அப்பாவுக்கு பதில் தெரியாதுப்பா, அம்மாவைக் கேளு அப்படின்னு சொல்லிடுவேன்.//

அட ஏங்க... பதில் சொல்லணும்கறதும் தங்கமணியோட கட்டளைகள்ள ஒண்ணு.

அறிவிலி said...

//இராகவன் நைஜிரியா said...
தமிழ்மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டு போட்டாச்சுங்க...

எதோ என்னால முடிஞ்சது.. இதுதாங்க..

இந்த மாதிரி விசயத்துக்கெல்லாம் என்ன தயவு செய்து சப்போர்ட் பண்ணச் சொல்லி கேட்கப்பிடாது.//

உங்கள் ஆதரவுக்கு நன்றி.

அன்புடன் அருணா said...

ஹஹாஹா...பையன் ரொம்ப ப்ரில்லியன்ட் ....சமாளிங்க..சமாளிங்க...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

//பின்னூட்டம் போடாமல் செல்பவர்கள் எல்லோருக்கும் என் பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்//
இதுக்குப் பயந்து பின்னூட்டம் போட்டாச்சு...
அன்புடன் அருணா

இராகவன் நைஜிரியா said...

\\\அறிவிலி said...

//இராகவன் நைஜிரியா said...
ஓ.. உங்க பையன் இப்படி எல்லாம் கேள்வி கேட்பாரா...

நீங்க அதுக்கெல்லாம் பதில் வேற சொல்லுவீங்களா..

உங்கள் தங்ஸ் கட்டுப்பாடா வச்சுக்கிடல அப்படின்னு இப்பத்தான் புரியுது.

நம்ம வீட்ல, பையன் எதாவது கேள்வி கேட்டா, இது மாதிரி கேள்விக்கெல்லாம் அப்பாவுக்கு பதில் தெரியாதுப்பா, அம்மாவைக் கேளு அப்படின்னு சொல்லிடுவேன்.//

அட ஏங்க... பதில் சொல்லணும்கறதும் தங்கமணியோட கட்டளைகள்ள ஒண்ணு. \\\

அப்ப சரிங்க... வேற வழியில்லை..

சேம் ப்ளட்...

நட்புடன் ஜமால் said...

\\டேய், நம்ம வீடு மாதிரியே எல்லார் வீட்லயும் இருக்காதுடா\\

ஹா ஹா ஹா ...

Mahesh said...

இவ்வளவு யோசனை ஒடம்புக்காகாது... அவ்ளோதான் சொல்வேன்...

(வீட்ல அவங்க ஊருக்குப் போயிருக்காங்களோ??

முரளிகண்ணன் said...

\\பின்னூட்டம் போடாமல் செல்பவர்கள் எல்லோருக்கும் என் பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும். ஆபத்து வரும் முன் காத்துக் கொள்ளுங்கள்.
\\
இதனால்தான் பின்னூட்டம் போடாமல் சென்றேன். ஆனால் தொகுப்பு வரவில்லையே? ஏன்?

அருமையான கேள்விகள். கலக்கல்

Anonymous said...

// எச்சரிக்கை: பின்னூட்டம் போடாமல் செல்பவர்கள் எல்லோருக்கும் என் பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும். ஆபத்து வரும் முன் காத்துக் கொள்ளுங்கள். //

ஒன்டிக்கி ஒண்டி பார்த்துடலாமா!

Shankar

nTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

அறிவிலி said...

//இ.பி.கோ 498A said...
உங்கள் மகன் நாட்டு நடப்பு தெரிந்து விவரமாக பேசியிருக்கிறார்.

ஆனால் பெண்களின் துயர் துடைக்கிறோம் என்ற போர்வையில் பல கொடுங்கோன்மைச் சட்டங்களைப் போட்டு அவற்றின் மூலம் பல பெண்களையே கொடுமைப்படுத்தும் நிலைமையை அறிய இந்த வலைப்பதிவைப் படியுங்கள்:

http://tamil498a.blogspot.com/2009/03/blog-post.html//

உங்களோடது கொஞ்சம் சீரயஸான பதிவு. பொறுமையாக படித்து உங்கள் பதிவிலேயே சொல்கிறேன்.

அறிவிலி said...

//அன்புடன் அருணா said...
ஹஹாஹா...பையன் ரொம்ப ப்ரில்லியன்ட் ....சமாளிங்க..சமாளிங்க...
அன்புடன் அருணா//

சமாளிக்க உங்க ஹெல்ப் கேட்டா, தப்பிச்சுக்கறீங்களே
டீச்சர்.

அறிவிலி said...

//அன்புடன் அருணா said...
//பின்னூட்டம் போடாமல் செல்பவர்கள் எல்லோருக்கும் என் பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்//
இதுக்குப் பயந்து பின்னூட்டம் போட்டாச்சு...
அன்புடன் அருணா//

அந்த பயம்...

அறிவிலி said...

//நட்புடன் ஜமால் said...
\\டேய், நம்ம வீடு மாதிரியே எல்லார் வீட்லயும் இருக்காதுடா\\

ஹா ஹா ஹா ...//

என்னைய பாத்தா உங்களுக்கெல்லாம் காமெடியா இருக்கு.ஹ்ம்ம்.. இருக்கட்டும்...இருக்கட்டும் (வடிவேலு குரல்)

அறிவிலி said...

//Mahesh said...
இவ்வளவு யோசனை ஒடம்புக்காகாது... அவ்ளோதான் சொல்வேன்...//

உங்க கவிதைய(காற்று) படிச்சுட்டு மல்லாக்க படுத்து
விட்டத்தை பாத்து்கிட்டே இருந்தனா, யோசனை வந்திருச்சி.

//(வீட்ல அவங்க ஊருக்குப் போயிருக்காங்களோ??//

சிவப்பு கலர் லைன்ல அவங்க பேசலன்னா, பதிவே முடிஞ்சுருக்காதே....

நன்றி மகேஷ்...

அறிவிலி said...

//Anonymous said...
// எச்சரிக்கை: பின்னூட்டம் போடாமல் செல்பவர்கள் எல்லோருக்கும் என் பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும். ஆபத்து வரும் முன் காத்துக் கொள்ளுங்கள். //

ஒன்டிக்கி ஒண்டி பார்த்துடலாமா!

Shankar//

ஹையா.. பின்னூட்டம் போட்டுட்டீங்களே...
பதிவைவிட இதுக்குத்தான் ரெஸ்பான்ஸ் அதிகமா இருக்கு. நன்றி...

அறிவிலி said...

///முரளிகண்ணன் said...
\\பின்னூட்டம் போடாமல் செல்பவர்கள் எல்லோருக்கும் என் பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும். ஆபத்து வரும் முன் காத்துக் கொள்ளுங்கள்.
\\
இதனால்தான் பின்னூட்டம் போடாமல் சென்றேன். ஆனால் தொகுப்பு வரவில்லையே? ஏன்?///

பதிவு எல்லாத்தையும் கட்டி, முடிச்சு போட்டுகிட்டே இருந்தேன், அதுக்குள்ள நீங்க கமெண்ட் போட்டுட்டீங்க.

////அருமையான கேள்விகள். கலக்கல்////

நன்றி முரளி கண்ணண்.

Anonymous said...

பெண்கள் ஆண்களுக்கு சமமாக தாங்களும் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புவதால் பின் வரும் யோசனைகளை அவர்கள் சார்பாக முன்மொழிகிறேன்.
1.இனி இன்கம் டேக்ஸ் விஷயத்தில் ஆண்களுக்கு சமமாக எங்களை நடத்த வேண்டும்.
2.பஸ்ஸில் எங்களுக்கு தனி இருக்கைகள் வேண்டாம்.
3.ஆண்களுக்கான உடைகள் பேண்ட்,சட்டை போன்றவற்றை அணிய மாட்டோம்.(அதனாலதான்யா நம்ம உடைகள் விலையேறிப்போச்சு)

அறிவிலி said...

//இலால்குடி பினாத்தல்கள் said...
பெண்கள் ஆண்களுக்கு சமமாக தாங்களும் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புவதால் பின் வரும் யோசனைகளை அவர்கள் சார்பாக முன்மொழிகிறேன்.
1.இனி இன்கம் டேக்ஸ் விஷயத்தில் ஆண்களுக்கு சமமாக எங்களை நடத்த வேண்டும்.
2.பஸ்ஸில் எங்களுக்கு தனி இருக்கைகள் வேண்டாம்.
3.ஆண்களுக்கான உடைகள் பேண்ட்,சட்டை போன்றவற்றை அணிய மாட்டோம்.(அதனாலதான்யா நம்ம உடைகள் விலையேறிப்போச்சு)//

என்னங்க இது, மகளிருக்கு ஆதரவா பாயிண்ட்ஸ் குடுங்கன்னா, எல்லாரும் என் பையனுக்கு சாதகமா சொல்லிகிட்றுக்கீங்க?

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.