Wednesday, April 8, 2009

வார்த்தைகளே இல்லாத கதைகள் - ஏன் இந்த கொலை வெறி?

இப்போது தமிழ் வலைப்பதிவுகளில் எந்த பக்கம் திரும்பினாலும் ரெண்டு வார்த்தைக் கதைகள், ஒரு வரிக் கதைகள். சீசன் போல இருக்கு.

பெரிய விஷயங்களுக்கெல்லாம் அது ஒரு பெரிய ராமாயணம் என்பார்கள். அப்பேர்ப்பட்ட ராமாயணத்துக்கே ஒரே ஒரு வார்த்தைதான் தலைப்பு.

ஆனால் ஒரு சிறுகதை சைசுக்கு தலைப்பு வைத்து விட்டு,தலைப்பாக வைக்க வேண்டிய இரண்டு வார்த்தைகளையோ அல்லது ஒரு வரியையோ கதை என்று எழுதி விடுகிறார்கள். இப்படியே போனால் அடுத்த கட்டம் என்ன என்று யோசித்ததின் விளைவுதான் கீழே இருக்கும் கதைக் கொடுமைகள்.

தலைப்பு 1 : ஆசிரியர் மாணவர்களிடம் கணக்குப் பாடத்தில் கேள்விகள் கேட்டார். நாற்பதில் பத்து போனால் எவ்வளவு?, ஐந்தையும் ஐந்தையும் கூட்டினால் எவ்வளவு? ...என்று பல கேள்விகள் கேட்க எல்லாவற்றுக்கும் தப்பான பதில் சொன்ன சங்கரனின் தலையில் இருப்பது...

கதை :______________________________

தலைப்பு 2: மஹாபாரதப் போரில் கவச குண்டலங்களை கொடுத்து, தனக்கு கிடைத்த புண்ணியங்களையும் தாரை வார்த்து, பின்னர் நண்பனுக்காக உயிரையும் கொடுத்த பிறகு கொடை வள்ளல் கர்ணணிடம் இருந்தது..

கதை :______________________________

தலைப்பு 3: ஒண்ணாம் தேதி. குப்புசாமிக்கு மாத சம்பளம் இருபதாயிரம். வீட்டுக்கடன் 7500 பிடித்து விட்டர்கள். க்ரெடிட் கார்ட் பாக்கி 6000, வீம்புக்கு வாங்கிய கார் கடன் மாத தவணை4500, துரோகியிடம் கை மாத்து பாக்கி 2000. இந்த மாசம் சோத்துக்கு...

கதை :______________________________

தலைப்பு 4. ரோட்டோர ஆயா கடையில பிரியாணி, ஆப் பாயில் துன்னுட்டு பாயா குட்ச அர மணில வகிறு ரெயிலு கணக்கா சத்தம். நாப்பத்தேளு வாட்டி பேதி புடுங்கனுதுக்கு அப்றம் முன்சாமி வவுத்த்ல இருக்கறது...

கதை : ______________________________

விரைவில் எதிர்பாருங்கள் "லோக்கூ" கவுஜைகள்....(ஹைக்கூ மாதிரி எழுதப்படும் சில வார்த்தைகளின் கலவை)

டிஸ்கி: நெஜம்மாவே நல்ல கதைகள் எழுதியவர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம்.வாழ்த்தி பின்னூட்டம் போட்டால் மட்டும் போதும். தாங்கள் எழுதிய கதைகள் மொக்கை என நெனைக்கறவங்க நாலு திட்டு திட்டிட்டு போங்க.

23 comments:

ஜெகதீசன் said...

:))

ஜெகதீசன் said...

singapore?

அறிவிலி said...

//ஜெகதீசன் said...
singapore?//

ஸ்மைலிக்கு நன்றி.
ஆமாங்க, 3 வருடங்களாக...

கார்க்கி said...

நடத்துங்க நடத்துங்க...

/"லோக்கூ" கவுஜைகள்//

எதிர்பார்த்துட்டு இருக்கோம்

கிஷோர் said...

ஜெகு, இங்கே தானே வர சொன்னீங்க?

கிஷோர் said...

//டிஸ்கி: நெஜம்மாவே நல்ல கதைகள் எழுதியவர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம்.//

நன்றிங்கோ

கிஷோர் said...

//எச்சரிக்கை: பின்னூட்டம் போடாமல் செல்பவர்கள் எல்லோருக்கும் என் பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும். ஆபத்து வரும் முன் காத்துக் கொள்ளுங்கள். //


ஏதேது ஆட்டோ அனுப்பிகூட‌ அடிப்பீங்க போல‌

ஜோசப் பால்ராஜ் said...

சிங்கையில 3 வருசமா இருக்கீங்க, தெரியாம போச்சே?
சரி சரி அடுத்தவாரம் சிறப்பு கூட்டம் ஒன்னு போட்ருவோம்.
93372775 என் அலைபேசி எண். தொடர்பு கொள்ளவும்.

கிஷோர் said...

எங்கே நம்ம ஜமாலைக்காணோம்

ஜோசப் பால்ராஜ் said...

பதிவுகள் மிக அருமை சகா.

இப்பத்தான் நண்பர் ஜெகதீசன் மூலமா உங்க பதிவுகள் எனக்கு தெரியவந்துச்சு.
அருமையா எழுதுறீங்க.

அறிவிலி said...

//கிஷோர் said...
ஜெகு, இங்கே தானே வர சொன்னீங்க?//

ஜெகதீசன், சிங்கப்பூர் மொத்தத்தையும் கூட்டிட்டு வந்துட்டீங்களே... நன்றி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஹாஹாஹா... ரசித்தேன் :)

ஜெகதீசன் said...

:)))

அறிவிலி said...

//சிங்கையில 3 வருசமா இருக்கீங்க, தெரியாம போச்சே?
சரி சரி அடுத்தவாரம் சிறப்பு கூட்டம் ஒன்னு போட்ருவோம்.
93372775 என் அலைபேசி எண். தொடர்பு கொள்ளவும்.//
ஆணி அழைக்கிறது.... ஈவ்னிங் திரும்பி வரேங்க...

சென்ஷி said...

கலக்கல் :-)))

ரசிச்சேன்

அறிவிலி said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
ஹாஹாஹா... ரசித்தேன் :)//

இந்த இடுகைக்கு இன்ஸ்பிரேஷனே ஒங்களோட சில பின்னூட்டங்கள்தான்.(?)

வருகைக்கும், ரசித்ததற்கும் நன்றி.

அறிவிலி said...

//கார்க்கி said...
நடத்துங்க நடத்துங்க...

/"லோக்கூ" கவுஜைகள்//

எதிர்பார்த்துட்டு இருக்கோம்//

டோண்டு சார் சமீபத்துல அப்படின்னு சொல்லுவாரே, அவ்வளவு விரைவில் எதிர்பாருங்கள்.

நன்றி, கார்க்கி

அறிவிலி said...

//சென்ஷி said...
கலக்கல் :-)))

ரசிச்சேன்//

வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி.. சென்ஷி...

அறிவிலி said...

//ஜோசப் பால்ராஜ் said...
சிங்கையில 3 வருசமா இருக்கீங்க, தெரியாம போச்சே?
சரி சரி அடுத்தவாரம் சிறப்பு கூட்டம் ஒன்னு போட்ருவோம்.
93372775 என் அலைபேசி எண். தொடர்பு கொள்ளவும்.//

பதிவுகளுக்கு சமீபத்திலதாங்க வந்தேன்.

நம்பர் எஸ்.எம்.எஸ் செய்திருக்கிறேன். அவசியம் சந்திப்போம்.

அறிவிலி said...

//கிஷோர் said...
//எச்சரிக்கை: பின்னூட்டம் போடாமல் செல்பவர்கள் எல்லோருக்கும் என் பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும். ஆபத்து வரும் முன் காத்துக் கொள்ளுங்கள். //


ஏதேது ஆட்டோ அனுப்பிகூட‌ அடிப்பீங்க போல‌//

சே..சே... கத்தியின்றி, ரத்தமின்றிதாங்க நம்ம வேலையெல்லாம்.

கே.ரவிஷங்கர் said...

அண்ணே!

//தலைப்பாக வைக்க வேண்டிய இரண்டு வார்த்தைகளையோ அல்லது ஒரு வரியையோ கதை என்று எழுதி விடுகிறார்கள். இப்படியே போனால் அடுத்த கட்டம் என்ன என்று யோசித்ததி//


மாப்பு வச்சுட்டாங்கய்யா ஆப்பு.நா பாட்டுக்கு சித்தம்
போக்கு சிவன் போக்குன்னு இருந்தேனே...

//நெஜம்மாவே நல்ல கதைகள் எழுதியவர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம்.வாழ்த்தி பின்னூட்டம் போட்டால் மட்டும் போதும்//
அப்பா வயத்துல பால வாத்தங்கய்யா!

அண்ணே வாங்க நம்ம வலைக்கு நானு ஒரு
“ஜிலு ஜிலு” கத எழுதியிருக்கேன்.சஸ்பென்ஸ் கத.”கதையின் முடிவு என்ன? சொல்லுங்கள்!”

http://raviaditya.blogspot.com/search/label/சிறுகதை

அறிவிலி said...

///கே.ரவிஷங்கர் said...
அண்ணே!

//தலைப்பாக வைக்க வேண்டிய இரண்டு வார்த்தைகளையோ அல்லது ஒரு வரியையோ கதை என்று எழுதி விடுகிறார்கள். இப்படியே போனால் அடுத்த கட்டம் என்ன என்று யோசித்ததி//


மாப்பு வச்சுட்டாங்கய்யா ஆப்பு.நா பாட்டுக்கு சித்தம்
போக்கு சிவன் போக்குன்னு இருந்தேனே...

//நெஜம்மாவே நல்ல கதைகள் எழுதியவர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம்.வாழ்த்தி பின்னூட்டம் போட்டால் மட்டும் போதும்//
அப்பா வயத்துல பால வாத்தங்கய்யா!///

நீஙக என்னை திட்னீங்களா? வாழ்த்தினீங்களா?


////அண்ணே வாங்க நம்ம வலைக்கு நானு ஒரு
“ஜிலு ஜிலு” கத எழுதியிருக்கேன்.சஸ்பென்ஸ் கத.”கதையின் முடிவு என்ன? சொல்லுங்கள்!”////

வந்தேங்க, ஆனா நெறய ஆப்ஷன்ஸ் இருக்கே, நாங்க எத சொன்னாலும் அதுமுடிவு இல்லைன்னு சொல்ல வாய்ப்பு இருக்கே....

Anonymous said...

யாரையாவது குறி வெச்சுருக்கீங்களோ?

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.