Friday, April 24, 2009

செருப்பை தூக்கி எறியாதீங்க...

உலகம் முழுவதும் செருப்பை தூக்கி வீசுவது என்பது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது.

இப்படியே தொடர்ந்தால் எல்லா கூட்டங்களுக்கும் செருப்பை வெளியே விட்டுதான் வரவேண்டும் என்று கூறி விடக்கூடும் நாள் தொலைவிலில்லை.

எனக்கு என்னமோ எவ்வளவுதான் பிடிக்காதவர்களாக இருந்தாலும் இப்படி செருப்புகளை வீசுவதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.

பாதுகாபிஷேகம் நடத்தப்பட்ட தலைவர்களையெல்லாம் நல்லவர்கள் வல்லவர்கள் என்று கூறினால் நான் கோயில்களுக்குள்ளயே பதுங்கியிருக்க வேண்டிய நிலை வந்துவிடக்கூடும் (அங்கதானே எல்லார் காலும் காலியா இருக்கும்)

இதையே வேறு கோணத்தில் முயற்சிக்கலாம் என்று பார்க்கிறேன்.

ராமபிரான் வனவாசம் செல்வதற்கு முன்னால் பரதனை அரியணை ஏற சொன்னார். ஆனால் பரதன் அதற்கு ஒப்பாமல் ராமனுடைய பாதுகைகளை அரியணையில் வைத்து ஒரு பராமரிப்பு அரசாங்கம்தான் நடத்தினார்.இப்படியாக 14 வருடங்கள் அரசாட்சியே செய்திருக்கிறது செருப்பு.

சரி.. சரி.. இந்த புராண இதிகாச கதையெல்லாம் உடாதேங்கறீங்களா....

இந்த செருப்புகளுக்குன்னு ஒரு பெரிய சரித்திரமே இருக்கு.

மனிதர்கள் முதன் முதலில் செருப்பு உபயோகிக்க ஆரம்பிச்சது 40,000 வருடங்களுக்கு முன்புன்னு ஆதாரபூர்வமா நிரூபிச்சிருக்காங்க. சீனாவில் தியான்யுவான் குகையில் கிடைச்ச மனித கால் எலும்புகளை ஆரய்ச்சி செய்து இதை கண்டுபிடித்திருக்கிறர்கள். ஆனாலும் இப்ப உலகத்துல இருக்கறதுலயே ஆகப் பழைய செருப்புன்னு பாத்தா தென்மேற்கு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கீழே இருக்கும் 8300 ஆண்டுகளுக்கு முந்தைய செருப்புதான்.


11 ஆம் நூற்றாண்டில் ஒரு சீன மஹாராஜாவுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு கால்கள் நார்மலாக இல்லாமல் சிறியதாக இருந்ததாம். அந்த மஹாரஜா உடனே சின்ன பாதங்கள்தான் பெண்மைக்கு அழகு என்று கிளப்பிவிட எல்லா பெண்களும் அவர்களுடைய கால்களை இறுக்க கட்டி கொள்ளும் செருப்புகளை அணிந்து தங்கள் பாதங்களையும் சிறிதாக்கி கொண்டார்களாம்.


ஹை ஹீல்ஸ் ஷூக்கள் என்று பார்த்தால் கிறுஸ்துவின் பிறப்புக்கு 3500 ஆண்டுகள் முன்பே எகிப்து மக்கள் ஆண் பெண் பேதமின்றி ஸ்டேட்டஸ் சிம்பலாக அணிந்திருக்கிறார்கள். எவ்வளவு உயரமான செருப்போ அவ்வளவு அதிகமான ஸ்டேட்டஸாம்!!!

ஆனால் அந்த கால ரோம் நகரில் நேரெதிர். விபச்சாரம் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக அங்கு இருந்த காலகட்டத்தில் ஹை ஹீல்ஸ் செருப்பு விபச்சாரிகளுக்கான அடையாளமாக கருதப்பட்டது.

1400 களில் துருக்கி மற்றும் ஐரோப்பா கண்டம் முழுவதும் ஒரு கலக்கு கலக்கிய ஹை ஹீல்ஸ் செருப்புதான் கீழே இருக்கும் "சாபைன்"

1519 முதல் 1589 வரை வாழ்ந்த கேத்தரின் டி மெடிசி என்ற ஃப்ரெஞ்ச் மஹாராணிதான் இப்பொதைய ஹை ஹீல்ஸ் ஃபேஷனுக்கு முன்னோடியாக கருதப்படுகிறார்.மிகவும் சிறிய உருவமாக இருந்த இவர் மன்னரின் வைப்பாட்டியாக இருந்தவரை விட உயரமாக காட்டி கொள்வதற்காக அணிந்த செருப்பு, நெருப்பு போல் பற்றி கொண்டு உலகம் முழுவதும் ஃபேஷனாக பரவியதாக கூறுகிறார்கள்.

(எவ்வளவு அழகான செருப்புகள்?)

1324 ஆம் ஆண்டு எட்வர்ட் மன்னர் கிட்ட செருப்பு தயாரிக்கிறவர்கள் எல்லோரும் போய் செருப்பு அளவுகளுக்கு ஒரு ஸ்டேண்டர்ட் உருவாக்க சொல்லி கேட்டாங்களாம். அவரும் 39 பார்லிகார்ன் விதை நீளம் ஒரு சாதாரண மனிதனின் கால் அளவுக்கு சமம் என்று அளவிட்டு அதற்கு 13 (3 பார்லிகார்ன் விதைகளின் நீளம் ஒரு இன்ச் என்பதால்) என்று நிர்ணயம் செய்தாராம். ஒவ்வொரு பார்லிகார்ன் விதைக்கும் ஒரு சைஸ் கூடவோ குறையவோ செய்யும். என் காலுக்கு 34 பார்லிகார்ன் விதைகள் (சைஸ் 8) போதும்.பார்லிகார்ன்(Barleycorn)

செருப்புகளுக்கு எவ்வளவு பெரிய சரித்திரமும் முக்கியத்துவமும் இருக்கு பாருங்க.

ஆகவே மஹாஜனங்களே, யார் மேலயாவது வெறுப்பை காட்டணும்னா தயவு செஞ்சு செருப்பை தூக்கி எறிஞ்சு அதுக்கு அவமரியாதையை உண்டாக்காதீங்க.

17 comments:

Anonymous said...

செருப்பா சிறப்பா

anu said...

செருப்பு பற்றிய நல்லதொரு ஆய்வு

பகிர்வுக்கு நன்றி

anu said...

செருப்பு பற்றி நல்லதொரு ஆய்வு

பகிர்வுக்கு நன்றி

அப்பாவி முரு said...

சிறப்பான பதிவுதான்.

சந்தேகமே இல்லை.

Mahesh said...

செருப்பைத்தான் தூக்கி எறியக் கூடாது... 'ஷூ'வை?

அறிவிலி said...

//Anonymous said...
செருப்பா சிறப்பா//

எதிர் கேள்வியா?

செருப்பு சிறப்புதாங்க.

அறிவிலி said...

//anu said...
செருப்பு பற்றிய நல்லதொரு ஆய்வு

பகிர்வுக்கு நன்றி//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Anonymous said...

"செருப்பே சிறப்பு" என்கிறது போல் பதிவு நச்..

சின்னப் பாதங்கள் தான் பெண்மைக்கு அழகு என்பதை நம்பி கால்களை இறுக்கிய செருப்புகளால் சிறிதாக்கிய அம்மணிகளின் நிலை பரிதாபம்.. :)

இனிய புன்னகையுடன்,
உதய தாரகை

அறிவிலி said...

//அப்பாவி முரு said...
சிறப்பான பதிவுதான்.

சந்தேகமே இல்லை.//

நன்றி அப்பாவி..

அறிவிலி said...

//Mahesh said...
செருப்பைத்தான் தூக்கி எறியக் கூடாது... 'ஷூ'வை?//

கேள்வி கேக்கறத பாத்தா, எறியறதுன்னு உறுதியா இருப்பீங்க போல..

யார்மேல இத்தன கோவம்?

அறிவிலி said...

//செருப்பே சிறப்பு" என்கிறது போல் பதிவு நச்..

சின்னப் பாதங்கள் தான் பெண்மைக்கு அழகு என்பதை நம்பி கால்களை இறுக்கிய செருப்புகளால் சிறிதாக்கிய அம்மணிகளின் நிலை பரிதாபம்.. :)

இனிய புன்னகையுடன்,
உதய தாரகை//

இனிய புன்னகைக்கு நன்றி, உதய தாரகை.

pappu said...

குறையாத பூ அன்பு
கண்டான பூ குஷ்பு
கடிக்கிற பூ செருப்பு
சொன்னவன் பப்பு
கேட்காதவன் தப்பு!

ஐ! கவித்...கவித...

அறிவிலி said...

//pappu said...
குறையாத பூ அன்பு
கண்டான பூ குஷ்பு
கடிக்கிற பூ செருப்பு
சொன்னவன் பப்பு
கேட்காதவன் தப்பு!

ஐ! கவித்...கவித...//

ஆமா... கவுஜ.. கவுஜ..

ஆ.ஞானசேகரன் said...

செருப்புக்கு ஒரு நல்ல ஆராய்ச்சி ....

ஆதிமூலகிருஷ்ணன் said...

அழகு.! உங்க மேல தூக்கிப்போடலாம்னு நெனைக்கிறேன், அட பாராட்டுறதுக்காகங்க..

அறிவிலி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
அழகு.! உங்க மேல தூக்கிப்போடலாம்னு நெனைக்கிறேன், அட பாராட்டுறதுக்காகங்க..//

அடடா..பூமராங் ஆயிடுச்சே..

அறிவிலி said...

//ஆ.ஞானசேகரன் said...
செருப்புக்கு ஒரு நல்ல ஆராய்ச்சி ....//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு. ஞானசேகரன்

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.