Thursday, May 7, 2009
சிங்கக் காய்ச்சல் சிங்கிள் ஆளுக்குகூட வராது. பன்றிக் காய்ச்சல் உலகத்துக்கே வரும்
இந்தியாவில் தேர்தல் ஜுரம் மிக அதிகமாக இருப்பதால் இந்த விஷயமெல்லாம் ஒரு பொருட்டாக தெரிவதில்லை.
ஆனால் சிங்கப்பூரே அல்லோகலப்பட்டு கொண்டிருக்கிறது.
பள்ளிகளில் எல்லா குழந்தைகளும் தினமும் தங்கள் தெர்மொமீட்டர் கொண்டு டெம்ப்பரேச்சர் செக் பண்ணி ஒரு அட்டையில் பதிவு செய்ய வேண்டும்.அதை வேறு ஒரு மாணவர் உறுதி செய்ய வேண்டும். கொஞ்சம் சளி அல்லது லேசான இருமல் இருந்தால் கூட வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.நம்ம பையன் வேணும்னே தொண்டைய கனைச்சு காமிச்சுருக்கான்.ஆனா வாத்தியாரம்மா முதுகுல ரெண்டு போட்டு க்ளாஸ்ல ஒக்கார வெச்சிட்டாங்களாம்.நம்மளாட்டமே சூது வாது தெரியாம வளத்துட்டமா, சரியா நடிக்க தெரியல...
ஆபீஸ்லயும் இதே கூத்துதான். இருக்கற 650 தொழிலாளர்களுக்கும் டிஜிட்டல் தெர்மோமீட்டர் குடுத்துருக்காங்க.தெனமும் நாங்க எல்லாரும் எங்க டெம்பெரேச்சர 3 தடவ ரெக்கார்ட் பண்ணி வெக்கணுமாம். பேக்டரிக்கு வர அத்தன சப்ளையர்ஸையும் செக்யுரிட்டியே செக் பண்ணிட்டுதான் உள்ளார விடுவாங்க.
வெளியில் நடமாடும் பலரும், ட்ரெயின் மற்றும் பஸ்களில் செல்பவர்களும் முகமூடியுடனேயே (Respiratory Mask) அலைகிறார்கள். இதுவரை சிங்கப்பூரில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. ஆனாலும் 6 வருட்ங்கள் முன்பு சார்ஸ் நேரத்தில் வாங்கிய அடியோ என்னமோ, அரசாங்கம் பல தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த ரிசெஷனிலும் நன்றாக காசு பண்ணியவர்கள் மாஸ்க் விற்பவர்கள்தான். இப்பொழுது பயங்கர டிமாண்ட், கிடைப்பதில்லை என்று கூறுகிறார்கள்.கை கழுவும் லிக்விட் சோப்பும் கிடைப்பதில்லையாம்.
மேலே பார்த்தால் படங்கள் மட்டும்தான் வேறு, அறிகுறிகள் எல்லாம் ஓன்றேதான்.
வாந்தி, பேதியாவது பரவாயில்லை, உன்னிப்பாக கவனித்தால் தெரிந்து விடலாம். பன்றிகள் இருமினாலோ அல்லது தொண்டை கட்டினாலோ எப்படி கண்டுபிடிப்பார்கள்? பன்றிகளுக்கு இருக்கும் குரல் வளத்துக்கு, தொண்டையும் கட்டி விட்டால் விசேஷம்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
இந்த மாதிரி சூதானமா இருங்க :))))))))
:)
கடைசி படம் கலக்கல்.. எங்கிருந்து சார் இந்த மாதிரி படத்தை எல்லாம் தேடி பிடிக்குறீங்க?
ayyaayo..... bayama irukke !!
//SUBBU said...
இந்த மாதிரி சூதானமா இருங்க :))))))))//
சிரிப்புக்கு நன்றி
//ஜுர்கேன் க்ருகேர்..... said...
:)//
வாங்க ஜூர்கேன் க்ருகேர், நன்றி
//கவிதை காதலன் said...
கடைசி படம் கலக்கல்.. எங்கிருந்து சார் இந்த மாதிரி படத்தை எல்லாம் தேடி பிடிக்குறீங்க?//
வாங்க கவிதை காதலன் ம்- கூகிளிருக்க பயமேன்.
//Mahesh said...
ayyaayo..... bayama irukke !!//
அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்லைங்க. கொஞ்சம் கேர் ஃபுல்லா இருந்தா போதும்.
(பின்னூட்டம் டைட்டில பாத்து போடலியே?)
/*நம்மளாட்டமே சூது வாது தெரியாம வளத்துட்டமா, சரியா நடிக்க தெரியல...*/
இது உங்களுக்க்க்க்க்க்கே கொஞ்சம் ஓஓஓஓஓவரா தெரியல? அவங்க அம்மா மாதிரினு சொன்னா நம்பிருப்போம்.
///'\சோம்பேறி/'\ said...
/*நம்மளாட்டமே சூது வாது தெரியாம வளத்துட்டமா, சரியா நடிக்க தெரியல...*/
இது உங்களுக்க்க்க்க்க்கே கொஞ்சம் ஓஓஓஓஓவரா தெரியல? அவங்க அம்மா மாதிரினு சொன்னா நம்பிருப்போம்.//
நானும் வெகுளிதான்... வெகுளிதான்... வெகுளிதான்... நம்ப மாட்டீங்களே..
நன்றாயும் இருக்கிறது, நகைச்சுவையாகவும் இருக்கிறது
//வலசு - வேலணை said...
நன்றாயும் இருக்கிறது, நகைச்சுவையாகவும் இருக்கிறது//
நன்றி வலசு- வேலணை அவர்களே
இந்த ரணகளத்திலும் அந்த பையனுக்கும் பொண்ணுக்கும் கிளு கிளுப்பு கேக்குதோ?
// நம்ம பையன் வேணும்னே தொண்டைய கனைச்சு காமிச்சுருக்கான்.ஆனா வாத்தியாரம்மா முதுகுல ரெண்டு போட்டு க்ளாஸ்ல ஒக்கார வெச்சிட்டாங்களாம்.நம்மளாட்டமே சூது வாது தெரியாம வளத்துட்டமா, சரியா நடிக்க தெரியல //
தேவைபட்டா டியூசன் எடுக்க நான் ரெடி.
///விஷ்ணு. said...
இந்த ரணகளத்திலும் அந்த பையனுக்கும் பொண்ணுக்கும் கிளு கிளுப்பு கேக்குதோ?
// நம்ம பையன் வேணும்னே தொண்டைய கனைச்சு காமிச்சுருக்கான்.ஆனா வாத்தியாரம்மா முதுகுல ரெண்டு போட்டு க்ளாஸ்ல ஒக்கார வெச்சிட்டாங்களாம்.நம்மளாட்டமே சூது வாது தெரியாம வளத்துட்டமா, சரியா நடிக்க தெரியல //
தேவைபட்டா டியூசன் எடுக்க நான் ரெடி.///
வாங்க விஷ்ணு, பெரிய அனுபவஸ்தரோ....
என்ன கொரும சார் இது! நான் புது போஸ்டிங் போட்டா அப்டேட் ஆகல, பதிவ டைப் பண்ணவே கஷ்டப் பட்டுட்டேன், எடிட்டும் சரியா வேல செய்யாம தப்பும் தவறுமா ஒரு பதிவு வெளியீடு. ஐயகோ! வைகைக்கரைத் தமிழை அணை போட்டு த்டுத்துவிட்டார்களே! இந்த ப்ளாக்கரே இப்படித்தான்! எப்படி சரி செய்யுறது? ஹெல்ப் மி?
ஒய்?...ஒய்?....ஒய்?
ஓஓஓஒய்ய்ய்ய்....மீஈஈஈஈஈஈ?
@பாப்பு
உங்க பதிவுல போய் பார்த்தேன். புது போஸ்டிங் பப்ளிஷ் ஆயிருக்கே. உங்கள் பிரச்னை என்ன? உணர்ச்சிவசப்படாம பொறுமையா சொல்லுங்க.
டைப் பண்றதுலயா?
அழகி மென்பொருள் முயற்சி செய்து பாருங்க.
கூகிள் ட்ரான்ஸ்லிட்ரேஷனை மட்டும் நம்பினால் எடிட் செய்வது கொஞ்சம் கஷ்டம்தான்.
தப்புகள் வருவதா?
பல முறை படித்து திருத்திவிட்டு பப்ளிஷ் செய்யவும்.
எடிட்டிங்குக்கு HTML mode (compose வேண்டாம்) உபயோகிக்கவும்.
மேலும் உதவி தேவை என்றால் மின்னஞ்சல் அனுப்பவும்.
Post a Comment
எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.
ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.