Saturday, June 6, 2009

இந்தியா ஒளிர்கிறது - (அ)

ஜூன் மாதம் இந்தியா வர வேண்டும் என்பது நான்கைந்து மாதங்கள் முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்று.

2 வருடங்கள் முன்பு ஒரு முறை வந்திருந்தாலும் வெளியில் அதிகம் நடமாட முடியாமல் உடல் நலக் குறைவு ஏற்பட்டு வீட்டு சிறையில் அடைபட்டே கிடந்ததால் இந்த விஜயம் 4 வருடங்களுக்கு பிறகு வருவதாகத்தான் கணக்கு.

இந்த 4 வருடங்களில் ஏற்பட்டுள்ள கவனிக்க தக்க மாற்றங்களையும், மாற விரும்பும் விஷயங்களையும் பதிவு செய்ய விருப்பம்.

புறப்படுவதற்கு முன்பே பிரமித்த விஷயம், இ- காமெர்ஸில் (மின் வணிகம்) ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்.

இந்தியாவின் எந்த மூலைக்கும் IRCTC வெப் சைட்டின் மூலமாக டிரெயின்களுக்கு முன்பதிவு செய்ய முடிகிறது. 4 வருடங்கள் முன்பே IRCTC இந்த சேவை அளித்து வந்தாலும், உள்ளூர் முகவரிக்கு டிக்கட்டை கொரியர் செய்து வந்தார்கள். பயணம் செய்யும் போது இந்த டிக்கட் நிச்சயம் கையில் இருக்க வேண்டும். ஆனால் இப்போதோ இ-டிக்கட் வசதி உள்ளது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டிலேயே பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

K.P.N போன்ற ஆம்னி பஸ்களும் இப்போது ஆன்லைன் ரிஸர்வேஷன் வசதி அளிக்கின்றன.

தில்லி, சிம்லா, குல்லு, மனாலி மற்றும் ஆக்ரா செல்லவும் திட்டம்.தில்லியில் ஹோட்டல் அறை,விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் செல்ல டாக்ஸி மற்றும் அங்கிருந்து சுற்றுலா செல்ல பேக்கேஜ் டூர்கள் (பணிக்கர் அல்லது சதர்ன் டிராவல்ஸ்) போன்ற எல்லா விஷயங்களையும் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்ய முடிகிறது.திட்டமிடுதல் மிகவும் எளிதாகி விட்டது.

அடுத்து வியந்த விஷயம், உள்நாட்டு விமான போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். சென்னை-தில்லி பயணத்திற்கு ஸ்பைஸ் ஜெட் போன்ற விமானங்கள், கிட்டத்தட்ட ரெயில் கட்டணத்திற்கே டிக்கட் கொடுக்கிறார்கள். கொஞ்சமே கொஞ்சம் அதிகம் செலவானாலும் கிட்டத்தட்ட 3 நாட்களும் உடல் அயற்சியும் மிச்சமாகிறது. ஆளுக்கு எட்டாயிரம் ரூபாய் செலவில் சென்னை-தில்லிக்கு போய் வர முடிகிறது.

திருப்பதி போய் பெருமாளையும் தரிசித்து வர விருப்பம்.திருப்பதி தேவஸ்தான இணைய தளத்தில் எல்லா வசதிகளும் இருந்தாலும், எல்லா கட்டங்களும் பல மாதங்கள் முன்பே சிவப்புக்கு மாறிவிடுகிறது. அறை வசதி, சேவைகள் போன்ற எல்லாமே 90 நாள் முன்பு வெளியிட்ட அன்றே தீர்ந்து போய்விடுவது அந்த வெங்கடேசனுக்குத்தான் வெளிச்சம். தரிசனம், உணவு மற்றும் பயணம் எல்லாவற்றையும் சேர்த்து பேக்கேஜ் டூராக திருச்சியிலிருந்தே அழைத்து செல்கிறார்கள்.இதற்கு மட்டும் உறவினர் மூலமாக நேரிலேயே பதிவு செய்தாகி விட்டது.

திட்டமெல்லாம் சரிதான். எல்லாம் நல்லபடி முடிந்து, சுவாரசியமான அனுபவங்களை பகிரவும் ஆசை. ம்...ம்... பார்ப்போம்.

டிஸ்கி :இடுகைகளுக்கு இடையேயான இடைவெளியால் கவலை கொண்டிருந்த ஆயிரமாயிரம் (அவ்வ்வ்....) வாசகர்களுக்கும், என் பின்னூட்டங்கள் வராததால் நிம்மதியாக இருந்த பிரபல பதிவர்களுக்கும்...சொல்லிக் கொள்வது...

அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை..இணைய தொடர்பு கிடைக்கும் போதெல்லாம் வருவேன்..வருவேன்..வருவேன்.. என்ற எச்சரிக்கையையும் விடுக்கிறேன்

4 comments:

ஆ.ஞானசேகரன் said...

வாங்க அறிவிலி

Prabhu said...

நான் இதுக்கு முன்னயே பதிவுலகத்தில் இருந்தாலும் சிலகாலத்துக்கு, முன்பு என்னுடைய ப்ளாக் கூகுலால் விழுங்கப் பட்டதால் எனது பதிவுகள் புதிய முகவரியில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. இதை எல்லா நண்பர்களுக்கும், அவர்கள் கூடும் இடங்களிலும் சொல்ல்னும்ல. அதான்
http://pappu-prabhu.blogspot.com/

இதுதான் என் ப்ளாக்கோட முகவரி.

♫சோம்பேறி♫ said...

Welcome back :-)

முனைவர் இரா.குணசீலன் said...

/எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது./

என்னங்க இது கொடுமையா இருக்கு....

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.