Tuesday, September 22, 2009

AAA வுக்கு LLL விரித்த வலை - ஈயமில்லாத கதை

அனானிமாபுரம்னு ஒரு ஊர்ல ஏ.பி.சி அப்படின்னு ஒரு கம்பெனி இருந்துச்சாம். அந்த கம்பெனில மிஸ்டர்.AAA தான் மேனேஜர்.மேனேஜரா இல்லாத பல பதிவர்கள் சொல்றா மாதிரி அவுர டேமேஜர்னு கூட சொல்லலாம்.

வேலைல பெரிய கில்லியா இருந்தாலும் அவுரு ஒரே ஒரு மேட்டர்ல பயங்கர வீக். ஆபீஸ்ல வேல பாக்கற பொண்ணுங்க கிட்ட எல்லாம் பயங்கரமா ஜொள்ளு வுடுவாராம்.BBB, DDD, KKK அப்படின்னு 3 பொண்ணுங்க அந்த ஆபீஸ்ல வேல பாத்துக்கிட்டிருந்தாங்க. பாவம் குடும்ப சூழ்நிலை காரணமா இந்த ஆளோட கொடுமையெல்லாம் சகிச்சுகிட்டு எப்படியோ சமாளிச்சு காலத்த ஓட்டிகிட்டு இருந்தாங்களாம்.

அப்போ அதே ஏ.பி.சி கம்பெனிக்கு புதுசா ஒரு ஸ்டெனோ வேகன்ஸி வரவும் இண்டர்வியூ நடத்தி புதுசா அப்பத்தான் காலஜு முடிச்ச மிஸ்.LLL அப்படின்னு ஒரு பொண்ண செலக்ட் பண்ணிணாரு நம்ம AAA. LLL ஒரு தைரியமான பொண்ணு.

வேலைல சேந்த மொத நாளே BBB,DDD,KKK மூணு பேரும் LLL கிட்ட AAA வோட கேரக்டரை பத்தி சொல்லவும்,இந்த டேமேஜர எப்படியும் மாட்டிவுடனும்னு LLL மனசுக்குள்ள முடிவு செஞ்சா.

நம்ம ஹீரோ AAA(வில்லன்???) வழக்கம்போல LLL கிட்டயும் தன்னோட வேலைய காமிச்சாரு.அப்போதான் LLL ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டா. தனக்கும் AAA கிட்ட விருப்பம் இருக்கறா மாதிரி நடிச்சா. ரெண்டு பேரும் பக்கத்துல இருக்கற பேரில்லாவூருக்கு வீக் எண்ட்ல பிக்னிக் போலாம்னு முடிவு செஞ்சாங்க. ஆனா LLL ஒரு கண்டிஷன் போட்டா. தன் கூடவே TTT ங்கற இன்னொரு பெண்ணும் வரதுக்கு சம்மதிக்கணும்னு சொன்னா. எதையோ திங்க அதையே கூலியா குடுத்தா மாதிரி இருக்கேன்னு AAA வும் சந்தோஷமா ஒத்துகிட்டான்.

அந்த TTT யாரு? LLL எப்படி AAA வை சிக்க வெச்சா அப்படின்ன்னு ----- இனிமேதான் யோசிக்கணும்




மேலும் தொடரக்கூடும்....

டிஸ்கி: ககக, திதிதி போன்ற நடிகர்களும், டுடுடு, பிபிபி போன்ற டைரக்டர்களும் என்னை சினிமாவுக்கு கதை எழுத கூப்பிடுவதால் ஈயமில்லாத கதை எழுத பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.இதிலும் ஈயங்களும் இசங்களும் இருப்பதாக கண்டுபிடித்து கூறினால் வருங்காலத்தில் திருத்திக் கொள்கிறேன்.

12 comments:

வெற்றி-[க்]-கதிரவன் said...

// TTT யாரு?//

AAA voda manaivi

:)

Mahesh said...

'மகளிர் மட்டும்' படிக்க/பார்க்க வேண்டிய படம் மாதிரி இருக்கே.....

ககக...திதிதி... டுடுடு... போன்ற கந்த சஷ்டி கவசம் வரிகள் வருவதால் இதில் ஏதோ ஒரு ஈயம் இருக்கு...
படம் காட்டுவதால் எதோ ஒரு இசம் (ப்ரிஸமா?) இருக்கு... வன்மையாக கண்டிக்கிறேன்...

அறிவிலி said...

///[ஞான]-[பி]-[த்]-[த]-[ன்] said...
// TTT யாரு?//

AAA voda manaivi

:)///

இதெல்லாம் ஒரு கதை, அதுல உங்களுக்கு ஒரு சந்தேகம் வேற !!!!!

ஈயம் இருக்கா???? :))))))

அறிவிலி said...

///Mahesh said...
'மகளிர் மட்டும்' படிக்க/பார்க்க வேண்டிய படம் மாதிரி இருக்கே.....

ககக...திதிதி... டுடுடு... போன்ற கந்த சஷ்டி கவசம் வரிகள் வருவதால் இதில் ஏதோ ஒரு ஈயம் இருக்கு...
படம் காட்டுவதால் எதோ ஒரு இசம் (ப்ரிஸமா?) இருக்கு... வன்மையாக கண்டிக்கிறேன்...///

அடடா மிஷன் ஃபெயிலியர் போல இருக்கே. அடுத்தடுத்த முயற்சியில சுத்தமா ஈயத்த அழிச்சிடுறேன்.

அறிவிலி said...

ஹ்ம்ம்.. நம்மளே நாப்பது நாளைக்கு ஒரு போஸ்டிங் போடறோம், அந்த நேரம் பாத்து தமிழ்மணம் வேற மக்கர் பண்ணுது. 3 மணி நேரமா ரெஃப்ரெஷே ஆக மாட்டேங்குது.

Prabhu said...

கடவுளே, இந்த மாதிரியான பேரழிவு ஆயுதங்களிடம் இருந்து இந்தியாவை நீதான் காப்பாற்ற வேண்டும்!

இராகவன் நைஜிரியா said...

படிக்க ஆரம்பிச்ச உடனேயே மகளிர் மட்டும் கதை ஞாபகத்து வந்துடுச்சு..

ஒரு கதையை ஒழுங்கா காப்பி அடிக்கத் தெரியலை... நீங்க எப்படி சினிமாவுல கதை எழுதி பொழைக்கப் போறீங்கன்னு தெரியலை.. :-)

அறிவிலி said...

//pappu said...//

நானும் அதையேதான் சொல்லிருக்கேன், ஆனா யார்கிட்ட இருந்துங்கறது வேண்ணா மாறுபடும்.

அறிவிலி said...

//இராகவன் நைஜிரியா said...
படிக்க ஆரம்பிச்ச உடனேயே மகளிர் மட்டும் கதை ஞாபகத்து வந்துடுச்சு..

ஒரு கதையை ஒழுங்கா காப்பி அடிக்கத் தெரியலை... நீங்க எப்படி சினிமாவுல கதை எழுதி பொழைக்கப் போறீங்கன்னு தெரியலை.. :-)//

காப்பியடிச்ச (remake) கதையிலயே இத்தனை விஷயம் கண்டுபுடிச்சு எழுதறாங்களேன்னுதான் நானும் ஈயத்தை நீக்கிட்டு காப்பியடிச்சேன்.

மணிகண்டன் said...

****
காப்பியடிச்ச (remake) கதையிலயே இத்தனை விஷயம் கண்டுபுடிச்சு எழுதறாங்களேன்னுதான் நானும் ஈயத்தை நீக்கிட்டு காப்பியடிச்சே
*****

:)- ஈயத்தை நீக்கினா இப்படி தான் பெயிலியர் ஆகிடும்.

அறிவிலி said...

வாங்க மணிகண்டன் நன்றி. ஹ்ம்ம்.. கரெக்டுதான். அதான் உ.பொ.ஒ வெற்றின்னு சொல்றாங்க போல

வலசு - வேலணை said...

உங்களுக்கு என்னாச்சுங்க?

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.