Sunday, September 27, 2009

என்ன எழவு கடிகாரமோ?

சமீபத்தில் "AA DHEKEN ZARA" என்ற ஹிந்தி படத்தை தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு ப்ரொஃபஷனல் ஃபோட்டோகிராபருக்கு விஞ்ஞானியான தன்னுடைய தாத்தாவிடமிருந்து ஒரு கேமரா கிடைக்கிறது. அந்த கேமராவில் இன்றைய தேதியை செட் பண்ணவே முடிவதில்லை. இனிமேல் வரப்போகும் தேதியும் நேரமும் மட்டுமே செட் பண்ண முடிகிறது.

முதலில் வீட்டு ஜன்னல் வழியே தெரியும் ஒரு புறாவை போட்டோ எடுக்கிறான். மறுநாள் அந்த புறா ஒரு ஜோடி சேர்த்துக் கொண்டு இரண்டு புறாக்களாக வந்து உட்காருகின்றன. டார்க் ரூமில் நெகட்டிவை டெவலப் செய்யும்போது போட்டோவிலும் இரண்டு புறாக்கள் தெரிகின்றன.

சந்தேகம் வந்து உடனே அடுத்த நாளுக்கான தேதியை செட் செய்து எதிர் வீட்டு ஜன்னல் வழியே தெரியும் பெண், பக்கத்து வீட்டு பால்கனியில் நிற்கும் குழந்தை உட்பட பலரையும் போட்டோ எடுக்கிறான். அந்த குழந்தை குடை ராட்டினத்தில் இருந்து விழுவது போலவும், எதிர் வீட்டு பெண்ணை யாரோ துப்பாக்கியில் சுட குறி வைப்பது போலவும் ப்ரிண்டில் வரவும் மறுநாள் அவர்களை காப்பாற்ற முயற்சிக்கிறான்.

நம் நாயகனுக்கு பணக் கஷ்டமும் கூட. பணத்துக்கு என்ன செய்வது என்று ஒரு பெட்டி கடை வாசலில் நின்று கொண்டு யோசிக்கும் போது, பக்கத்து லாட்டரி கடையில் பரிசுப் பணம் வாங்கிச் செல்லும் ஒருவனைப் பார்த்து ஐடியா கிடைக்கிறது. லாட்டரி கடை வாசலில் ரிசல்ட் எழுதிப் போடும் தகவல் பலகையை போட்டோ எடுத்து ப்ரிண்ட் போட்டு அதில் வரும் எண்களுக்கு பணம் கட்டுகிறான். அந்த எண்களுக்கு பரிசு கிடைக்கவும் தொடர்ந்து இதேபோல் லாட்டரி, குதிரை ரேஸ் என்று எல்லாவற்றிலும் சம்பாதிக்கிறான். பணம் கொழிக்கிறது. கூடவே அதே எதிர் வீட்டுப் பெண்ணுடன் (பிபாஷா பாசு :-(.... ) காதல் மற்றும் கேமராவை கைப்பற்ற முயற்சிக்கும் வில்லன்கள் கூட்டம் என்றும் மசாலாக்கள்.



சிறிது நாட்களுக்கு பிறகு தன்னைத்தானே எடுத்துக்கொள்ளும் ஃபோட்டோ முற்றிலும் கருப்பாக வருகிறது. வெறும் தேதி நேரத்தை தவிர மீதியெல்லாம் இருட்டு(கருப்பு).அதே போல் கருப்பாக போட்டோ வந்த அன்றுதான் தாத்தா இறந்திருப்பதாக அறிகிறான். போட்டோவில் வந்திருக்கும் தேதியில் தானும் இறக்கப் போவதாக நம்புகிறான். அவனும் அவன் காதலியும் சேர்ந்து சாவை தடுக்கும் முயற்சிகளில் இறங்குகிறார்கள். குறிப்பிட்ட தேதி நேரத்தில் ஒரு இருண்ட குழிக்குள் (கிணறு போன்ற) விழுகிறான். ஆனால் சிறிது நேரத்தில் உயிர் பிழைத்து வெளியில் வந்து விடுகிறான். அப்புறம்தான் புரிகிறது (அவர்களுக்கும்) போட்டோ கருப்பாக வந்ததற்கு காரணம் குழியில் இருந்த இருட்டுதான் என்பது.

வித்தியாசமான கதையாகவும், இறுதி வரை சுவாரஸ்யம் குறையாமலும் இருந்தது. ஒரு மனிதனுக்கு தான் இறக்கப் போகும் தேதி முன்பே தெரிந்தால் எவ்வளவு அவஸ்தை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

சமீபத்தில் வலையில் மேய்ந்து கொண்டிருக்கும்போது WWW.DEATHCLOCK.COM என்ற இணயதளத்தில் தடுக்கி விழுந்தேன். அதில் நீங்கள் இறக்கப்போகும் தேதியை முன்னரே கணித்துச் சொல்வதாக கூறுகிறார்கள். மேலே சொன்ன சினிமாவை பார்த்த பாதிப்போ என்னவோ நம்மளுக்கும் என்ன தேதி சொல்லுதுன்னு பார்க்கலாம்னு அதில் கேட்கும் விவரத்தையெல்லாம் கொடுத்தேன். நம் பிறந்த தேதி, புகை பிடிப்பவரா இல்லையா, உடல் எடை குறியீட்டு எண் (BODY MASS INDEX - BMI) ஆகிய விவரங்கள் கேட்கிறது.BMI கணக்கிடுவதற்கும் அதே பக்கத்தில் கீழே ஒரு TOOL இருக்கிறது. எனக்கு இன்னமும் 45 வருடங்கள் இருக்கிறதாம்.

என் மனைவிக்கு போட்டு பார்த்ததில் "திங்கட்கிழமை, மார்ச் 31, 2070" என்று வந்தது. "அடக் கடவுளே, எத்தனை மணிண்ணு போடலியே, கோலங்கள் பாக்க முடியுமான்னு தெரியலியே" என்றாள் என் மனைவி.

அந்த தேதில நீங்க என்ன பண்ணுவீங்கன்னு என் மனைவி கேட்டதற்கு நான் சொன்ன பதில்

"இன்றே கடைசி" அப்படின்னு ஒரு போஸ்ட் போட்டுட்டு எத்தனை ஹிட் வருது, பின்னூட்டம் வருதுன்னு REFRESH பண்ணி பாத்துகிட்டே இருப்பேன்னு சொன்னேன்.

"அடப்பாவி, அன்னிக்கும் அதேதானா???"

25 comments:

சென்ஷி said...

:-)

அப்பாவி முரு said...

அண்ணே.,

அண்ணி போன் நம்பர் என்ன?

அந்த தெய்வத்தை கும்பிடணும்!!!!

Prabhu said...

"இன்றே கடைசி" அப்படின்னு ஒரு போஸ்ட் போட்டுட்டு எத்தனை ஹிட் வருது, பின்னூட்டம் வருதுன்னு REFRESH பண்ணி பாத்துகிட்டே இருப்பேன்னு சொன்னேன்.
/////
ப்ளாக்கருக்கு இந்த வியாதி கடைசி வரைக்கும் விடாது போல!

Anonymous said...

கிகிக்கிகிகி

Mahesh said...

//இன்றே கடைசி" அப்படின்னு ஒரு போஸ்ட் போட்டுட்டு எத்தனை ஹிட் வருது, பின்னூட்டம் வருதுன்னு REFRESH பண்ணி பாத்துகிட்டே இருப்பேன்னு சொன்னேன்.//

:-)

அறிவிலி said...

//சென்ஷி said...
:-)//

நன்றி சென்ஷி. ஸ்மைலிக்கு

அறிவிலி said...

//அப்பாவி முரு said...
அண்ணே.,

அண்ணி போன் நம்பர் என்ன?

அந்த தெய்வத்தை கும்பிடணும்!!!!//

அந்த தெய்வத்த நான் தினமும் கும்பிட்டுகிட்டுதான் இருக்கேன்.

அறிவிலி said...

//pappu said...
"இன்றே கடைசி" அப்படின்னு ஒரு போஸ்ட் போட்டுட்டு எத்தனை ஹிட் வருது, பின்னூட்டம் வருதுன்னு REFRESH பண்ணி பாத்துகிட்டே இருப்பேன்னு சொன்னேன்.
/////
ப்ளாக்கருக்கு இந்த வியாதி கடைசி வரைக்கும் விடாது போல!//

ஆமாங்க பாப்பு... நீங்களும் அப்படித்தானே...

வலசு - வேலணை said...

//
ஒரு மனிதனுக்கு தான் இறக்கப் போகும் தேதி முன்பே தெரிந்தால் எவ்வளவு அவஸ்தை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
//
உண்மை தான்.
உங்களின் கற்பனைகளை இரசித்துச் சிரித்தேன்.

பித்தனின் வாக்கு said...

// " அடப்பாவி, அன்னிக்கும் அதேதானா???" " //
ரொம்ப சரியா சொல்லியிருக்காங்க, நல்லா புரிஞ்சும் வச்சுருக்காங்க போல. எப்பவும் திருந்த மாட்டிங்க போல.

அறிவிலி said...

//தூயா ♥ Thooya ♥ said...
கிகிக்கிகிகி///

வாங்க தூயா, சிரிப்புக்கு நன்றி.

அறிவிலி said...

@Mahesh
@வலசு - வேலணை
@ பித்தன்

நன்றி
நன்றி
நன்றி

வால்பையன் said...

இந்தியில இப்போ தான் வந்துருக்கா!
தமிழில் இதே பாணியில் ஒரு படம் கார்த்திக் நடிச்சு வந்தது!

லக்கிமேன்னு நினைக்கிறேன்!

அறிவிலி said...

வாங்க வாலு... எதிர்காலம் முன்பே தெரியும் என்ற கான்செப்டில் பார்த்தால் இரண்டும் ஒன்றுதான்.

கார்க்கிபவா said...

வெளங்கிடும்

இளைய கவி said...

என் மனைவிக்கு போட்டு பார்த்ததில் "திங்கட்கிழமை, மார்ச் 31, 2070" என்று வந்தது. "அடக் கடவுளே, எத்தனை மணிண்ணு போடலியே, கோலங்கள் பாக்க முடியுமான்னு தெரியலியே" என்றாள் என் மனைவி.


ஹே ஹே ஹீ ஹீ ஹீ உங்க வீட்டுலையுமா ????

அறிவிலி said...

வாங்க கார்க்கி, ஃப்யூச்சர் டென்ஸ்ல சொல்லிருக்கீங்க. இனிமேத்தான் வெளங்கனுமா?

அறிவிலி said...

///இளைய கவி said...
என் மனைவிக்கு போட்டு பார்த்ததில் "திங்கட்கிழமை, மார்ச் 31, 2070" என்று வந்தது. "அடக் கடவுளே, எத்தனை மணிண்ணு போடலியே, கோலங்கள் பாக்க முடியுமான்னு தெரியலியே" என்றாள் என் மனைவி.


ஹே ஹே ஹீ ஹீ ஹீ உங்க வீட்டுலையுமா ????///

சேம் ப்ளட்.

Thamira said...

கடைசி இரண்டு வரிகளும் அட்டகாசம்.! அவர்களையும் திருத்தமுடியாது, நாமும் திருந்தப்போவதில்லை.!

மணிகண்டன் said...

அறிவிலி, கலக்கல். உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன். அதை கண்டினியூ பண்ணாட்டி ஸ்பாம் பின்னூட்டம் போடுவேன் :)-

அறிவிலி said...

//மணிகண்டன் said...
அறிவிலி, கலக்கல். உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன். அதை கண்டினியூ பண்ணாட்டி ஸ்பாம் பின்னூட்டம் போடுவேன் :)-///

நன்றி மணிகண்டன். ஸ்பாம்!!!!! அது நீங்கதானா? :-))))))))))))))))))

www.narsim.in said...

ரசித்தேன். சூப்பர் ஃப்ளோ.

அறிவிலி said...

///www.narsim.in said...
ரசித்தேன். சூப்பர் ஃப்ளோ.///

நன்றி நர்சிம், அடிக்கடி வாங்க....

Meena said...

happened to see your kirukkal.... Started liking it.. particularly this one... made me to smile atleast for 15 mints.

அறிவிலி said...

நன்றி.. மீனா.

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.