Thursday, November 18, 2010

கங்கிராட்ஸ்... மை டியர்...

18-நவ-2005,காலை 0600 மணி

என் மனைவி (எ.ம.) : ஹரீஷ்.. எந்திரி.. மணியாச்சு..

ஹரீஷ்: 2 மினிட்ஸ்.. ப்ளீஸ்

18-நவ-2006,காலை 0610 மணி

எ.ம: டேய்.. இன்னுமா எந்திரிக்கலை?

ஹரீஷ்: ஒன்லி 2 மினிட்ஸ்மா.. ப்ளீஸ்.....

18-நவ-2007,காலை 0620 மணி

எ.ம:  ஏண்டா? ஒன் பக்கத்துலயே நின்னு எழுப்பிண்டே இருந்தா, யூனிஃபார்ம் அயர்ன் பண்றது, காஃபி.. போர்ன்விடா கலக்கறதுன்னு வேலையெல்லாம் யார் செய்யறது? ஏந்திரிச்சு போடா???

நேத்து கூட லேட்டா.. போனதுக்கு பேரு நோட் பண்ணதா சொன்னியே?

18-நவ-2008,காலை 0630 மணி

எ.ம: ஒழுங்கா குளிச்சியா?  ஒடனே வந்துட்டியே.... ஹால்ல போர்ன்விட்டா வெச்சிருக்கேன். யூனிஃபார்ம் சேர் மேல இருக்கு... கட.. கடன்னு போடு..

ஹரீஷ்:  அம்மா.. பனியன காணுமே???

எ.ம: ரூம்ல ஒன் கப்போர்ட்லதான் இருக்கு, எடுத்து போட்டுக்கோ..

ஹரீஷ்:  நீயே எடுத்து குடுத்துறேன்.. ப்ளீஸ்... நான் போர்ன்விட்டா குடிச்சிண்டிருக்கேன்....

எ.ம: இந்தா... பனியன்.. எங்க உன் பென்சில் பாக்ஸ்ல பேனாவையே காணுமே?

ஹரீஷ்:  நேத்து பெட்ரூம்ல எழுதிண்டுருந்தேன்.. பெட் பக்கத்துல பாரேன் ப்ளீஸ்...

 அய்யோ.. மறந்தே போயிட்டேன்... போன வாரம் ரிசர்வாயருக்கு கூட்டிண்டு போனதுக்கு 5 டாலர் தரணுமாம்.. நான் மட்டுந்தான் பாக்கின்னு மிஸ் திட்டினாங்க...

எ.ம: ஏண்டா... நேத்தே சொல்லிருக்கலாமில்ல.. கையில கேஷே இல்ல... நீ ஸ்கூலுக்கு போனப்பறம்தான் ஏடிஎம் போலான்னு இருந்தேன்.

ஏம்பா?(என்னிடம்) உங்ககிட்ட இருக்கா?

நான்: என் பர்ஸ்ல 50 டாலர்தான் இருக்கு.

எ.ம: சரிடா.. ஒம்போதரைக்கு காசு எடுத்துண்டு ஸ்கூல் வாசலுக்கு வரேன்.. நீ ப்ரேக் டைம்ல வெளில வந்து வாங்கிக்கோ...

18-நவ-2009,காலை 0640 மணி

ஹரீஷ்:  அம்மா... சாக்ஸ் பாரேன்.. ஒண்ணு ஆங்கிள் சாக்ஸ்.. இன்னொன்னு ஃபுல் சைஸா இருக்கு...


எ.ம: கண்ண தெறந்து ஒழுங்கா பாரு.. ஒன் பக்கத்துலியேதான் இன்னொரு சாக்ஸும் இருக்கு..

18-நவ-2010,காலை 0645 மணி

ஹரீஷ்: ஓ.. நோ.. அம்மா டாய்லெட் வரா மாதிரி இருக்கு..

எ.ம: அய்யோ.... கடவுளே.. படுத்தறானே....சரி.. சீக்கிரமா போயிட்டு  டிரஸ்ஸெல்லாம் போட்டுண்டு  வா..

18-நவ-2010,காலை 0655 மணி

ஹரீஷ்:  அம்மா சிக்ஸ் ஃபிஃப்டி ஃபைவ் ஆயிடுத்தும்மா, இனிமே நடந்து போனா லேட்டா ஆயிடும்.. ப்ளீஸ் என்ன சைக்கிள்ள கொண்டு போய் விட்றேன்...

எ.ம: ஒன் சைக்கிளையும் பஞ்சராக்கிண்டு வந்துட்டே... காத்தால சீக்கிரமும் எந்திரிக்காத.. இப்ப என்னை படுத்து...

கொஞ்சம் இரு.. டிரஸ்ஸ மாத்திண்டு வரேன்.. ஏம்பா(என்னிடம்)... நீங்க வீட்ட பூட்டிண்டு போங்க...


18-நவ-2010,மாலை 0630 மணி

நான் அலுவலகத்திலிருந்து திரும்பி வீட்டுக்குள் நுழைந்ததும்..

ஹரீஷ்:  அப்பா... இன்னிக்குத்தான் எனக்கு இந்த ஸ்கூல்ல லாஸ்ட் டே..ஜாலி... இனிமே நெக்ஸ்ட் இயர் செகண்டரிதான் போகணும்....

நான்: (என் மனைவியிடம்..): 
ராஜி.. கங்கிராட்ஸ்... க்ரேட்...

12 comments:

ஹரிஸ் said...

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.//
இந்த ஒரு காரணத்துக்குதான் பின்னூட்டம் போடுறேன்..(பயங்காட்டுறாங்கபா)..

Mahesh said...

கங்ராட்ஸ் !!! என் இடுகைகளுக்கு மாதிரியே உங்களுக்கும் "ஒரே ஒரு" பின்னூட்டம் வந்துடுச்சு !!!!

கண்ணன் said...

மிகவும் அருமை

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நல்லா இருக்கு...

மனம் திறந்து... (மதி) said...

ரன்னிங் கமெண்டரி ரொம்பவே நல்லருக்கு! :)))

நம்ம கடைப் பக்கம் ஒரு விசிட்டு குடுங்கோ! டுபுக்கு தல, கேடியக்கா, பாவை இவங்கல்லாம் வந்து வாழ்த்திட்டு போயிட்டாகளே!

இன்னைக்கே வந்தா எல்லாருக்கும் வடை உண்டு...உண்டு...உண்டு!


கடை விலாசம் (என் முதல் பதிவு) இதோ: http://thirandhamanam.blogspot.com/2011/01/blog-post_27.html

Hari said...

nalla comedy panringa....

http://hari11888.blogspot.com

அப்பாவி தங்கமணி said...

//நான்: (என் மனைவியிடம்..): ராஜி.. கங்கிராட்ஸ்... க்ரேட்... //

Hats off to you....:)

Kalidoss said...

எல்லாமே எ.ம பண்றாங்க.நீங்க ப்ளாக் எழுதிகிட்டு இருந்தீங்களா..

அறிவன்#11802717200764379909 said...

கரெக்ட்தான்...

சிங்கையில் பிள்ளைகள் படித்து வர பெற்றவர்கள் கங்கிராட்ஸ் சொல்லிக் கொள்ள வேண்டும் படிதான் இருக்கிறது அழுத்தம்..

:))

ambalam said...

ப்ளாக் மிக அருமையாக உள்ளது . நேர்மையாக இருக்கிறது .வாழ்த்துகள் . சுப்ரஜா .

சண்முகம் said...

நான் பின்னூட்டம் போட்டுட்டேன்.

NABR said...

ப்ளாக் மிக அருமையாக உள்ளது

Web Design Chennai

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.