சுமார் 04:40 மணி அளவில் நான் அங்கு போய் சேர்ந்தபோது அந்தி வெயிலில் சுகமான தென்றல் வீசிக்கொண்டிருந்தது. தேடுவதற்கு அவசியமின்றி தென்றலில் மிதந்து வந்த தமிழ் மணத்தை (திரட்டி இல்லீங்க) தொடர்ந்து சென்றதால் பதிவர்கள் இருந்த இடத்தை கண்டுபிடிப்பது எளிதாகவே இருந்தது.
பூங்கா வாயிலில் அலைகடலென திரண்டு வந்த கூட்டத்தை வரவேற்க அல்ல
ஏற்கெனவே அங்கு 13 பதிவர்கள் கூடியிருந்தனர்.சிங்கைப் பதிவர்கள் - தமிழ்வெளி இணைந்து நடத்தும் கருத்தாய்வு போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை தொடங்கியிருந்தது.சிங்கப்பூர் கோவில்களின் தல புராணம் குறித்த கோவியாரின் ஆன்மிக சொற்பொழிவு அல்ல
போட்டி பற்றிய செய்திகளை இணையத்தை தாண்டி கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் மற்றும் வழிமுறைகள் பற்றி குழலி அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்று கொண்டிருந்தது. அதன் பிறகு வெவ்வேறு கட்ட தேர்வுகளுக்கான நடுவர்கள் நியமனம் மற்றும் நிதி ஆதாரம் குறித்து வெவ்வேறு பதிவர்களின் ஆலோசனைகள் குழலி, கோவியார், ஜோசஃப் பால்ராஜ் போன்ற் மூத்த பதிவர்களால் பரிசீலிக்கப்பட்டன.சிங்கை பதிவர்களின் சிறந்த இடுகைகளை தேர்ந்தெடுத்து அதை ஒரு நூலாக அச்சிடலாம், மற்றும் போட்டியில் வெற்றி பெற்று சிங்கை வரும் எழுத்தாளர்களுக்கு இந்த நூலை அளிக்கலாம் என்று முகவை மைந்தன் யோசனை தெரிவித்தார். (தன் போன்றவர்கள் எழுதும் இடுகைகள் புத்தகத்தில் இருப்பது தெரிந்தால் பலரும் போட்டியில் கலந்து கொள்வதை இதற்காகவே தவிர்த்துவிடக்கூடும் என்று அறிவிலி போன்ற சிலர் அச்சம் தெரிவித்தனர்). இதனூடே நாமாகவே ஏன் ஒரு காலாண்டிதழ் நடத்த கூடாது என்ற யோசனையை ஜெகதீசன் முன் வைத்தார்.இவ்விரு யோசனைகளும் நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு முடிவு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் கிரி மற்றும் ராம் ஆகியோரும் வந்து கூட்டத்தில் சேர்ந்துவிட்டிருந்தனர்.
பதிவுன்னா நம்ம இஷ்டம் போல எழுதலாம், காலாண்டிதழ்னா நேரத்துக்கு சரியா செய்யணுமே
பின்னர் பாஸ்கர் அவர்கள் வீட்டில் செய்து கொண்டு வந்திருந்த கடலை, பக்கோடா மற்றும் என் வீட்டிலிருந்து கொண்டு வந்த கேசரி மற்றும் மசால் வடை ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட்டன.இதற்குள் பாஸ்கர் அவர்கள் அருகிலிருக்கும் கோப்பி கடைக்கு சென்று பாலீத்தீன் பைகளில் கோப்பியும், தேத்தண்ணியும் வாங்கி வந்து அனைவருக்கும் வினியோகம் செய்தார்.கூட்டத்தின் முக்கியமான கட்டத்தில் பதிவர்கள்
தற்போதைய தமிழ் பதிவுலக நிகழ்வுகள் பற்றிய சிறிது நேர உரையாடலுக்கு பிறகு கூட்டம் இனிதே முடிவடைநது பலர் அவரவர் வீடுகளை நோக்கியும், சிலர் குடைக்கடைகளை நோக்கியும் நடையை கட்டினர்.மேலும் சில புகைப்படங்கள்
புகைப்படம் எடுப்பதில் மட்டுமல்ல, போஸ் கொடுப்பதிலும் நான் எக்ஸ்பர்ட்தான் - ராம் (அகரம் அமுதாவுடன்)
வெற்றியாளர்கள் வரும்போது இப்படித்தான் வரவேற்கணும்
பித்தன்,"ப்ளாஸ்டிக் பை கோப்பிய இப்படித்தான் குடிக்கணும்" - அப்பாவி முரு
கிரி, வந்ததே லேட்டு, சீக்கிரமா போகணும்னா விடமாட்டேன்"- ஜோஸஃப் பால்ராஜ்
மாநாட்டுப் பந்தலில், கூட்டத்தின் ஒரு பகுதி
