சுமார் 04:40 மணி அளவில் நான் அங்கு போய் சேர்ந்தபோது அந்தி வெயிலில் சுகமான தென்றல் வீசிக்கொண்டிருந்தது. தேடுவதற்கு அவசியமின்றி தென்றலில் மிதந்து வந்த தமிழ் மணத்தை (திரட்டி இல்லீங்க) தொடர்ந்து சென்றதால் பதிவர்கள் இருந்த இடத்தை கண்டுபிடிப்பது எளிதாகவே இருந்தது.
பூங்கா வாயிலில் அலைகடலென திரண்டு வந்த கூட்டத்தை வரவேற்க அல்ல
ஏற்கெனவே அங்கு 13 பதிவர்கள் கூடியிருந்தனர்.சிங்கைப் பதிவர்கள் - தமிழ்வெளி இணைந்து நடத்தும் கருத்தாய்வு போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை தொடங்கியிருந்தது.சிங்கப்பூர் கோவில்களின் தல புராணம் குறித்த கோவியாரின் ஆன்மிக சொற்பொழிவு அல்ல
போட்டி பற்றிய செய்திகளை இணையத்தை தாண்டி கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் மற்றும் வழிமுறைகள் பற்றி குழலி அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்று கொண்டிருந்தது. அதன் பிறகு வெவ்வேறு கட்ட தேர்வுகளுக்கான நடுவர்கள் நியமனம் மற்றும் நிதி ஆதாரம் குறித்து வெவ்வேறு பதிவர்களின் ஆலோசனைகள் குழலி, கோவியார், ஜோசஃப் பால்ராஜ் போன்ற் மூத்த பதிவர்களால் பரிசீலிக்கப்பட்டன.சிங்கை பதிவர்களின் சிறந்த இடுகைகளை தேர்ந்தெடுத்து அதை ஒரு நூலாக அச்சிடலாம், மற்றும் போட்டியில் வெற்றி பெற்று சிங்கை வரும் எழுத்தாளர்களுக்கு இந்த நூலை அளிக்கலாம் என்று முகவை மைந்தன் யோசனை தெரிவித்தார். (தன் போன்றவர்கள் எழுதும் இடுகைகள் புத்தகத்தில் இருப்பது தெரிந்தால் பலரும் போட்டியில் கலந்து கொள்வதை இதற்காகவே தவிர்த்துவிடக்கூடும் என்று அறிவிலி போன்ற சிலர் அச்சம் தெரிவித்தனர்). இதனூடே நாமாகவே ஏன் ஒரு காலாண்டிதழ் நடத்த கூடாது என்ற யோசனையை ஜெகதீசன் முன் வைத்தார்.இவ்விரு யோசனைகளும் நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு முடிவு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் கிரி மற்றும் ராம் ஆகியோரும் வந்து கூட்டத்தில் சேர்ந்துவிட்டிருந்தனர்.
பதிவுன்னா நம்ம இஷ்டம் போல எழுதலாம், காலாண்டிதழ்னா நேரத்துக்கு சரியா செய்யணுமே
பின்னர் பாஸ்கர் அவர்கள் வீட்டில் செய்து கொண்டு வந்திருந்த கடலை, பக்கோடா மற்றும் என் வீட்டிலிருந்து கொண்டு வந்த கேசரி மற்றும் மசால் வடை ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட்டன.இதற்குள் பாஸ்கர் அவர்கள் அருகிலிருக்கும் கோப்பி கடைக்கு சென்று பாலீத்தீன் பைகளில் கோப்பியும், தேத்தண்ணியும் வாங்கி வந்து அனைவருக்கும் வினியோகம் செய்தார்.கூட்டத்தின் முக்கியமான கட்டத்தில் பதிவர்கள்
தற்போதைய தமிழ் பதிவுலக நிகழ்வுகள் பற்றிய சிறிது நேர உரையாடலுக்கு பிறகு கூட்டம் இனிதே முடிவடைநது பலர் அவரவர் வீடுகளை நோக்கியும், சிலர் குடைக்கடைகளை நோக்கியும் நடையை கட்டினர்.மேலும் சில புகைப்படங்கள்
புகைப்படம் எடுப்பதில் மட்டுமல்ல, போஸ் கொடுப்பதிலும் நான் எக்ஸ்பர்ட்தான் - ராம் (அகரம் அமுதாவுடன்)
வெற்றியாளர்கள் வரும்போது இப்படித்தான் வரவேற்கணும்
பித்தன்,"ப்ளாஸ்டிக் பை கோப்பிய இப்படித்தான் குடிக்கணும்" - அப்பாவி முரு
கிரி, வந்ததே லேட்டு, சீக்கிரமா போகணும்னா விடமாட்டேன்"- ஜோஸஃப் பால்ராஜ்
மாநாட்டுப் பந்தலில், கூட்டத்தின் ஒரு பகுதி
44 comments:
//மாநாட்டுப் பந்தலில், கூட்டத்தின் ஒரு பகுதி //
ஒரு பகுதியா?
முழு பகுதியே அவ்வளவுதானே?
அண்ணே கூட்டத்தை ரொம்ப சிறப்பாக மற்றும் நகைச்சுவையாக தொகுத்திருக்கீங்க.
வாழ்த்துகள்
அமர்க்களமா நடந்துச்சு போல.... வழக்கம் போல நான் கோட்டை விட்டாச்சு (கடலையும் மசால் வடையுந்தான்)...:))
உங்க சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்.... அட்டகாசம் !!
அறிவிலி அண்ணன்,
அருமையாக எழுதி இருக்கிங்க. தின்பண்டங்கள் செய்து தந்த அண்ணிக்கும் நன்றி !
நிழல்படக் குறிப்புகள் கலக்கல் ! நகைச்சுவை ததும்பும் குறிப்புகள். அட்டகாசம்.
முதல் பின்னூட்டத்தில் போட்டுக் கொடுத்த அப்பாவி முருவுக்கு அடுத்த சந்திப்பில் தின்பண்டம் கிடையாது என்கிற தீர்மானத்தை யூசூப் பால்ராஜ் ஐயாங்காரிடம் சொல்லி தீர்மானம் ஆக்கப் போகிறேன்.
***
அண்ணே முக்கியமாக ஒன்றை விட்டுவிட்டிங்க, சக்திவேலுக்கு நடத்திய பாராட்டு தீர்மானம் மிஸ்ஸிங்
//கோவி.கண்ணன் said...
முதல் பின்னூட்டத்தில் போட்டுக் கொடுத்த அப்பாவி முருவுக்கு அடுத்த சந்திப்பில் தின்பண்டம் கிடையாது என்கிற தீர்மானத்தை யூசூப் பால்ராஜ் ஐயாங்காரிடம் சொல்லி தீர்மானம் ஆக்கப் போகிறேன்.//
என்னக் கொடுமை கோவியார், இது?
உண்மைச் சொல்றது தப்புன்னா, அந்த தப்பை நான் ஆயிரம் தடவை செய்வேன்.
(எனக்கு தின்பண்டம் கிடைக்கவில்லையானால் பரவாயில்லை. என்னோட உயிர் நண்பர் சரவணனோட தின்பண்டத்தில் பாதியை வாங்கிக்குவேன்)
//மாநாட்டுப் பந்தலில், கூட்டத்தின் ஒரு பகுதி //
ஒரு பகுதியா?
முழு பகுதியே அவ்வளவுதானே?
:))
//அண்ணே முக்கியமாக ஒன்றை விட்டுவிட்டிங்க, சக்திவேலுக்கு நடத்திய பாராட்டு தீர்மானம் மிஸ்ஸிங்//
இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!
//எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.
ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.//
ஐயோ! நான் அப்பப்ப போட்டுகிட்டுத்தான் இருக்கேன்!
(ஆப்புவே பரவாயில்லை போல இருக்கே, அவ்வ்வ்வ்வ்வ்வ்)
நல்ல தொகுப்பு!
@அப்பாவி - நீங்களே இப்படி சொன்னா எப்படி?
கூட்டத்தின் ஒரு பகுதி தான் அது. மறு பகுதியில் நான் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தேன். நான் சொல்வதுதான் உண்மை.
சைக்கிள் கேப்புல கோவியார் உங்கள அண்ணன்னு சொல்லி அவரு வயச குறைத்துக்கொள்ள பார்க்கிறார்... உங்களுக்கு வயசு இருபத்தி ரெண்டுதான்னு அவருகிட்ட தெளிவா சொல்லிடுங்க (உங்களைவிட ரெண்டு வயசு எனக்கு கம்மின்னு அப்படியே சொல்லிடுங்க )
******
//தன் போன்றவர்கள் எழுதும் இடுகைகள் புத்தகத்தில் இருப்பது தெரிந்தால் பலரும் போட்டியில் கலந்து கொள்வதை இதற்காகவே தவிர்த்துவிடக்கூடும் என்று அறிவிலி போன்ற சிலர் அச்சம் தெரிவித்தனர்//
-:))))))))
//புகைப்படம் எடுப்பதில் மட்டுமல்ல, போஸ் கொடுப்பதிலும் நான் எக்ஸ்பர்ட்தான் - ராம் (அகரம் அமுதாவுடன்)//
-:))))))))
முக்கியமா உங்களுக்கும் பாஸ்கர் அண்ணனுக்கும் நன்றிகள் ( எதுக்குன்னு உங்களுக்கே தெரியும், அடுத்த சந்திப்பையும் நன்றி சொல்லுற வாய்ப்பை கொடுங்க -:)) )
புகைப்படங்கள் அருமை...
//முக்கியமா உங்களுக்கும் பாஸ்கர் அண்ணனுக்கும் நன்றிகள் ( எதுக்குன்னு உங்களுக்கே தெரியும், அடுத்த சந்திப்பையும் நன்றி சொல்லுற வாய்ப்பை கொடுங்க -:)) )
//
ரிப்பிட்டே !
//பித்தன் said...
சைக்கிள் கேப்புல கோவியார் உங்கள அண்ணன்னு சொல்லி அவரு வயச குறைத்துக்கொள்ள பார்க்கிறார்... உங்களுக்கு வயசு இருபத்தி ரெண்டுதான்னு அவருகிட்ட தெளிவா சொல்லிடுங்க //
இதுக்குத்தான் ரிப்பீட்டு போடணும்
//அப்பாவி முரு said...
//மாநாட்டுப் பந்தலில், கூட்டத்தின் ஒரு பகுதி //
ஒரு பகுதியா?
முழு பகுதியே அவ்வளவுதானே?//
இப்படியா போட்டு உடைப்பது?
//நாமக்கல் சிபி said...
//அண்ணே முக்கியமாக ஒன்றை விட்டுவிட்டிங்க, சக்திவேலுக்கு நடத்திய பாராட்டு தீர்மானம் மிஸ்ஸிங்//
இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!//
எதை? நான் விட்டதையா? இல்லை பாராட்டு தீர்மானத்தையா?
பதிவும் புகைப்படமும் அருமை
வாழ்த்துகள்
//Mahesh said...
உங்க சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்.... அட்டகாசம் !!//
இது உங்களோட சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் இல்லியே?
@Mahesh - நன்றி
//முக்கியமா உங்களுக்கும் பாஸ்கர் அண்ணனுக்கும் நன்றிகள் ( எதுக்குன்னு உங்களுக்கே தெரியும், அடுத்த சந்திப்பையும் நன்றி சொல்லுற வாய்ப்பை கொடுங்க -:)) )
//
ரிப்பிட்டே !
//
மன்னிக்கவும் கோவியார் பெயர் இதில் விடுபட்டுவிட்டது.... அவருக்கும் சேத்து ஒரு ரிப்பீட்டு.....
ஜோசப் பால்ராஜ் என்ற குழந்தைப் பதிவரை மூத்தப் பதிவராக்கியமைக்காக ஆப்பரசன் உங்களுக்கு விரைவில் ஆப்பு வழங்குவார். பிரபலப் பதிவர் உங்களுக்கு அறிவுரை வழங்குவார். சக்திவேல் ஒரு பதிவு எழுதுவார். நோ மற்றும் கணேஷ் ஆகியோர் கண்டணப் பின்னூட்டங்களை இடுவார்கள் என எச்சரிக்கிறேன்.
நகைச்சுவை நிரம்பிய உங்கள் பதிவு குறித்த பதிவை மிகவும் ரசித்தேன் .
சிங்கை பதிவர்கள் எல்லாரும் நிஜமாவே போட்டி பரிசுன்னு கல்க்கறீங்க...வாழ்த்துகள். படங்கள் மிக அருமை.
:))
கலக்கலாத்தான் பதிவு எழுதி இருக்கீங்க.
உங்க பாசையில சொல்லனும்னா சும்மா கிறுக்கி தள்ளிட்டிங்க.
அப்பாவி முரு said...
//கோவி.கண்ணன் said...
முதல் பின்னூட்டத்தில் போட்டுக் கொடுத்த அப்பாவி முருவுக்கு அடுத்த சந்திப்பில் தின்பண்டம் கிடையாது என்கிற தீர்மானத்தை யூசூப் பால்ராஜ் ஐயாங்காரிடம் சொல்லி தீர்மானம் ஆக்கப் போகிறேன்.//
என்னக் கொடுமை கோவியார், இது?
உண்மைச் சொல்றது தப்புன்னா, அந்த தப்பை நான் ஆயிரம் தடவை செய்வேன்.
(எனக்கு தின்பண்டம் கிடைக்கவில்லையானால் பரவாயில்லை. என்னோட உயிர் நண்பர் சரவணனோட தின்பண்டத்தில் பாதியை வாங்கிக்குவேன்)//
கோவி அண்ணே நீங்க ஆப்பு அப்பாவி முருவிற்கு வைக்கவில்லை, எனக்கு வச்ச மாதிரி தெரியுது.(எதொ உள்குத்து நடக்குது)
//அறிவிலி said...
@அப்பாவி - நீங்களே இப்படி சொன்னா எப்படி?
கூட்டத்தின் ஒரு பகுதி தான் அது. மறு பகுதியில் நான் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தேன். நான் சொல்வதுதான் உண்மை.//
ஹஹஹ ....நீங்க தானா அது (அஜித்: நான் தனி ஆள் இல்லை)
:))
//Dubukku said...
சிங்கை பதிவர்கள் எல்லாரும் நிஜமாவே போட்டி பரிசுன்னு கல்க்கறீங்க...வாழ்த்துகள். படங்கள் மிக அருமை.//
வாங்க டுபுக்கு, வாழ்த்துகளுக்கு நன்றி. அப்படியே போட்டியிலும் கலந்துக்கோங்க.
பின்னூட்டமிட்ட
வேடிக்கை மனிதன்
நாமக்கல் சிபி
ராம்
ஜெகதீசன் - இதுக்கும் :) தானா?
CEO - ஜோஸப் பால்ராஜ்
ஆ.ஞானசேகரன்
பித்தன்
அப்பாவி முரு
கோவி கண்ணண்
ஆகியோருக்கு நன்றி.
வந்துட்டு ஓட்டும் போடாம, பின்னூட்டமும் போடாம போன மற்றவர்களுக்கு, உங்கள் ip address ஐ ஆப்புக்கு அனுப்பி வைக்கிறேன். :))
நல்ல தொகுப்பு
:)
ஆஹா!டுபுக்கு அண்ணன் வந்துட்டாரா?அப்ப நாமல்லாம் போட்டியில கலந்துக்கறதே வேஸ்ட்.அவருக்கு டிக்கட் அனுப்பிடுங்க.
கோவி.கண்ணன் said...
அறிவிலி அண்ணன்,//
அறிவிலி அவர்களை அண்ணன் என்று சொன்னால், கோவியாருக்கு வயது குறைந்துவிடும் என்று எனக்கு முன்பே தெரியும்...
நன்றாக பதிவு செய்திருக்கிறீர்கள் திரு அறிவிலி...
கருத்துகளும் அருமை...
உங்க வீட்டு கேசரியும் வடையும் அருமை...
பாஸ்கர் வீட்டு மெது பக்கடாவும், கடலையும சுவையாக இருந்தன..., கோவியார் வீட்டு தாளிச்ச கடலை சுவையை சொல்லவும் வேண்டுமா?
எனினும் அடுத்தமுறையும் அங்கதான் கூட்டம்... :)
தகவல்களுக்கு நன்றி அறிவிலி.
பலகாரங்களை மிஸ் பண்ணினதை நினைக்க அழுகைஅழுகையா வருது :-(
அறிவிலி நகைச்சுவையா எழுதி இருக்கீங்க.. :-)
நீங்க வளைச்சு வளைச்சு படம் எடுத்தப்பவே நினைத்தேன்...படம் காட்டுவாரு போலன்னு ;-)
எல்லோருக்கும் வாழ்த்துக்கள். :)
எல்லோருக்கும் வாழ்த்துக்கள். அடுத்த சந்திப்பு எப்போ?
ம்....இராம் வடிவா போஸ் கொடுத்திருக்கிறார்...:-)
அறிவிலி அவர்களுக்கு! பதிவைப் படித்தேன். அது ஒருபடித்தேன். வாழ்த்துக்கள். அங்கங்கே ஒற்றுப்பிழைகள் உள்ளன. முடிந்தவரைத் தவிர்க்க முயலவும். குறிப்பாக வலையின் தலைப்பாகிய "கிறுக்கி தள்ளு" -இல் ஒற்றுமிக வேண்டும். ஆக, "கிறுக்கித் தள்ளு" என எழுதுவதே சரி. மாற்றவேண்டுகிறேன். நன்றிகள்.
@அகரம்.அமுதா
இப்ப ஓகேவா... ஆசிரியரே?
நன்றி....
anna for a new post about our bloger meet , am going to use ur pics... thank you
Post a Comment
எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.
ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.