Saturday, April 18, 2009

சிங்கை பதிவர் மாநாடு 18-04-2009

டொன் லீ யின் இந்த அறிவிப்பு வந்த நாளிலிருந்தே அதைப் பற்றிய எண்ணங்கள் என் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.

இதுவரை படைப்பாளர்கள் என்ற வகையில் யாரையும் நேரில் சந்தித்தில்லாத காரணத்தால் பலவித எதிர்பார்ப்புகளுடன் இருந்தேன்.

முதல் சந்திப்பு மற்றும் இதுவரை சிங்கப்பூரில் போகாத இடம் என்ற காரணங்களால் சீக்கிரமே கிளம்பி, அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு சரியாக (மதியம் மூணரை) டொன் லீ யின் வரைபடங்கள் மற்றும் குறிப்புகளின் உதவியுடன் போய் சேர்ந்துவிட்டேன்.

என்றைக்கும் இல்லாத திருநாளாக மண்டையை பிளக்கும் வெய்யில்.இந்திய உணவகமான கோமளாஸுக்கு வெளியே யாரையும் காணவில்லை.உள்ளே சென்று ஒரு காபியை வாங்கி கொண்டு வெளியில் வந்து நின்றேன்.பாராசூட் மூலம் நடுவானில் இருந்து குதிக்க வாய்ப்பிருப்பதாக அறிவிப்பில் கூறியிருந்ததால் 3 பக்கமும் சுற்றி பார்த்து கொண்டே இருந்தேன்.


(இவர் சிங்கை பதிவர் அல்ல)

3:45 அளவில் தலைவர் ஸ்ரீலஸ்ரீ அவர்களுக்கு காத்திருக்கும் இடத்தை குறுஞ்செய்தியில் தெரிவித்துவிட்டு திரும்பவும் 3 பக்கமும்...

நடுவில் ஒரிரு இந்தியர்கள் எதையாவது தேடிக் கொண்டே போனால் "பதிவரா இருப்பாரோ, நம்மளதான் தேடுறாரோ" என்று தோன்றினாலும் எழுத்தாளருக்கான அடையாளங்கள் (???) முகத்தில் தெரியாததால் கேட்கவில்லை.

நான்கு மணிக்கு சற்றே பின்னர் ஸ்ரீலஸ்ரீ வந்துவிட்டார்.வேறொரு இடத்திற்கு முன்னரே வந்திருந்த கோவியாரையும் அவரின் மலேசிய நண்பர் ஜவஹர் அவர்களையும் அறிமுகம் செய்தார்.

என்னையும் ஜவஹரையும் தனியே விட்டு பால்ராஜ் அவர்களும் கோவியாரும் ரெஸ்ட்ரூமுக்கு சென்ற பதினைந்து நிமிடங்களில் (இவங்க ரெண்டு பேருக்கும் அவ்ளோ பெரிய bladder ஆ - ஜவஹர்) மேலும் பல பதிவர்கள் (டொன் லீ, கிஷோர், அப்பாவி முரு...) வந்து சேர்ந்தனர்.

உட்கார தோதான இடம் தேடி கடையை விரித்தோம். மேலும் சிலர் வந்து சேர கூட்டம் களை கட்டியது.


விவாதிக்கப்பட்ட விஷயங்கள்

1. வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் நம் நிலைப்பாடு என்ன?

திமுக, அதிமுக கூட்டணிகளின் மீது நம்பிக்கையின்மையை பெரும்பாலோனோர் எடுத்து கூறினர்.அப்பாவி முரு "ஏன் விஜயகாந்த் அவர்கள் பக்கம் நாம் சாயக்கூடாது?" என்று எழுப்பிய வினாவுக்கு போதுமான வரவேற்பில்லை.

இதை ஒட்டியே பின்னர் நடந்த "வாய்ப்பிருந்தால் யாருக்கு உங்கள் ஒட்டு?" என்ற விவாதத்திலும் பெரும்பாலானோர் "49 O" க்குத்தான் தங்கள் ஒட்டு என்று கூறிவிட்டனர்.
(இச்சமயம் கிட்டத்தட்ட 20 பதிவர்கள் கூடிவிட்டனர்.)

2. யார் அந்த ஜே.கே.ரித்தீசு? என்று சிங்கை ப்ளாகர்ஸ் க்ரூப்பிலும், மாநாட்டிலும் கேள்வி கேட்ட டொன் லீ க்கு எதிராக மீனாட்சி சுந்தரமும், ஜோஸப் பால்ராஜும் கண்டன தீர்மானம் கொண்டுவந்தனர்.

3. யார் தமிழன்? என்ற விவாதம் அகரம்.அமுதா அவர்களின் கருத்துகளும் எதிர்கருத்துகளுமாக சிறிது நேரம் சுவாரசியமாக நடந்தது.

இடையிடையே விவாதங்கள் வேறு வேறு இடங்களுக்கு சென்று வந்தன.

நடுவே கோவியாரின் தயவில் அவித்த கடலை மற்றும் கேசரி அனைவருக்கும் வழங்கப்பட்டது.


இப்படியாக இனிதே நடந்த கூட்டம் 07:15 மணியளவில் நிறைவு பெற்றது.

மேலும் சில புகைப்படங்கள்


மேல் விவரங்களுக்கு மற்ற சிங்கை பதிவர்களின் பதிவுகளுக்கு செல்லவும்.

38 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

ம்ம்ம்ம் அருமை... தீர்த்த யாத்திரை ஏதும் இல்லையா ந்த முறை... :) திரு.ஜவஹர் அவர்களில் படத்தைக் காணோமே.... சாப்பிட்டுட்டு கிளம்பிட்டாரா?

இராகவன் நைஜிரியா said...

என்னா வேகம்... என்னா வேகம்

சூப்பர்ங்க

கிரி said...

//இவர் சிங்கை பதிவர் அல்ல//

நான் கூட கோவி கண்ணன் என்று நினைத்து விட்டேன் :-))))

படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது..இன்னும் கொஞ்சம் விரிவாக கூறி இருந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்

கோவி.கண்ணன் said...

:) கலக்கலாக எழுதி இருக்கிறீர்கள். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.

சி தயாளன் said...

அருமை...அறிவிலி அவர்களே...முதன் முதலாக சந்திப்பில் கலந்துகொண்டதுடன் கலக்கலாக பதிவும் போட்டு விட்டீர்கள்...

கிரி..மேலதிக விபரங்கள் என் பதிவில் வழமை போல் வரும்...:-)))

ஜெகதீசன் said...

:) கலக்கலாக எழுதி இருக்கிறீர்கள். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.

ஜெகதீசன் said...

//
கிரி said...

//இவர் சிங்கை பதிவர் அல்ல//

நான் கூட கோவி கண்ணன் என்று நினைத்து விட்டேன் :-))))

படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது..இன்னும் கொஞ்சம் விரிவாக கூறி இருந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்

//
கிரி அண்ணாச்சி ஏன் நேத்து வரலை?

அறிவிலி said...

//VIKNESHWARAN said...
ம்ம்ம்ம் அருமை... தீர்த்த யாத்திரை ஏதும் இல்லையா ந்த முறை... :) திரு.ஜவஹர் அவர்களில் படத்தைக் காணோமே.... சாப்பிட்டுட்டு கிளம்பிட்டாரா?//

பின்னர் தீர்த்த யாத்திரை நடந்ததாக நம்பத்தாகாத வட்டங்கள் தெரிவிக்கின்றன.மேல் விவரங்களுக்கு யாத்ரீகர்களை அணுகவும்.

ஜவஹர் அவர்கள் மேலே முதல் புகைப்படத்தில் இருக்கிறார் (வெள்ளை சட்டை)

அறிவிலி said...

//இராகவன் நைஜிரியா said...
என்னா வேகம்... என்னா வேகம்

சூப்பர்ங்க//

உங்களை இங்க வரவைக்க இவ்வளவு வேகம் வேணும் போல இருக்கே. நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த ராகவன் அவர்களுக்கு நன்றி

அறிவிலி said...

//கிரி said...
//இவர் சிங்கை பதிவர் அல்ல//

நான் கூட கோவி கண்ணன் என்று நினைத்து விட்டேன் :-))))

படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது..இன்னும் கொஞ்சம் விரிவாக கூறி இருந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்//

நன்றி கிரி..

முதல் சந்திப்பாகையால் ஒரு சிலரின் பெயர் மனதில் பதியவில்லை. விவாதங்களை விவரமாக எழுதும்போது பெயர் குழப்பம் வந்தால் சிக்கலாகிவிடும். மூத்த பதிவர்கள் விவரமாக எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.

அறிவிலி said...

//கோவி.கண்ணன் said...
:) கலக்கலாக எழுதி இருக்கிறீர்கள். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.//

நன்றி கோவியாரே...

அறிவிலி said...

//ஜெகதீசன் said...
:) கலக்கலாக எழுதி இருக்கிறீர்கள். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.

April 18, 2009 7:45 PM
ஜெகதீசன் said...
//
கிரி said...

//இவர் சிங்கை பதிவர் அல்ல//

நான் கூட கோவி கண்ணன் என்று நினைத்து விட்டேன் :-))))

படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது..இன்னும் கொஞ்சம் விரிவாக கூறி இருந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்

//
கிரி அண்ணாச்சி ஏன் நேத்து வரலை?//

நன்றி ஜெகதீசன்.

அதானே.. ஏன் வரலை?

ஜெகதீசன் said...

ஹை.... இதை நான் இப்பத்தான் பார்த்தேன்...
//
இதுவரை படைப்பாளர்கள் என்ற வகையில் யாரையும் நேரில் சந்தித்தில்லாத காரணத்தால் பலவித எதிர்பார்ப்புகளுடன் இருந்தேன்.
//
படைப்பாளர்கள் பக்கத்திலயும்
//
எழுத்தாளருக்கான அடையாளங்கள் (???)
//
அடையாளங்கள் பக்கத்தில இருக்குற மாதிரி மூனு கேள்விக்குறி போட்டிருக்கலாம்..
;)

அறிவிலி said...

///’டொன்’ லீ said...
அருமை...அறிவிலி அவர்களே...முதன் முதலாக சந்திப்பில் கலந்துகொண்டதுடன் கலக்கலாக பதிவும் போட்டு விட்டீர்கள்...

கிரி..மேலதிக விபரங்கள் என் பதிவில் வழமை போல் வரும்...:-)))///

நன்றி திரு.டொன் லீ

கிரி said...

//கிரி அண்ணாச்சி ஏன் நேத்து வரலை?//

நண்பரோட ரிசப்ஷன் ஜெகதீசன்.. நான் சிங்கை வந்து போது இவர் தான் நல்லா சாப்பாடு போட்டாரு கொஞ்ச நாள்...அந்த நன்றி கடனுக்கு போகாமல் இருக்க முடியவில்லை

கிரி said...

//கிரி..மேலதிக விபரங்கள் என் பதிவில் வழமை போல் வரும்...:-)))//

டொன் லீ சீக்கிரம் பதிவ போடுங்க :-)

ஜோசப் பால்ராஜ் said...

மிக வேகமாக பதிவு !!!.
நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

RAHAWAJ said...

நன்றி அறிவிலி அவர்களே,உங்கள் எல்லோரையும் சந்தித்ததில் ரொம்பு மகிழ்ச்சி,கடைசி வரை இல்லாமல் முன்னமே சென்று விட்டதில் வருத்தம் தான் அடுத்த முறை கடைசி வரை இருப்போம்

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் அறிவிலி, கலக்கலாக எழுதியுள்ளீர்கள் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி

அறிவிலி said...

////ஜெகதீசன் said...
ஹை.... இதை நான் இப்பத்தான் பார்த்தேன்...
//
இதுவரை படைப்பாளர்கள் என்ற வகையில் யாரையும் நேரில் சந்தித்தில்லாத காரணத்தால் பலவித எதிர்பார்ப்புகளுடன் இருந்தேன்.
//
படைப்பாளர்கள் பக்கத்திலயும்
//
எழுத்தாளருக்கான அடையாளங்கள் (???)
//
அடையாளங்கள் பக்கத்தில இருக்குற மாதிரி மூனு கேள்விக்குறி போட்டிருக்கலாம்.. ////



ஹா.. ஹா.. ஹா..

(இந்த இடத்துல சிரிக்க கூடாதோ????)

அறிவிலி said...

//ஜோசப் பால்ராஜ் said...
மிக வேகமாக பதிவு !!!.
நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.//

நன்றி திரு. ஜோஸப் பால்ராஜ்

அறிவிலி said...

//RAHAWAJ said...
நன்றி அறிவிலி அவர்களே,உங்கள் எல்லோரையும் சந்தித்ததில் ரொம்பு மகிழ்ச்சி,கடைசி வரை இல்லாமல் முன்னமே சென்று விட்டதில் வருத்தம் தான் அடுத்த முறை கடைசி வரை இருப்போம்//

விரைவில் சந்திப்போம். வருகைக்கு நன்றி

அறிவிலி said...

//ஆ.ஞானசேகரன் said...
வணக்கம் அறிவிலி, கலக்கலாக எழுதியுள்ளீர்கள் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி//

நன்றி திரு.ஞானசேகரன்.

அப்பாவி முரு said...

பதிவுக்கு நான் தான் லேட்டா...

அண்ணே பதிவு சூப்பர்...

Mahesh said...

ஆஹா... வெகு விமரிசையா நடந்திருக்கு... அது என்னமோ தெரியல, ஒரே ஒரு சந்திப்பைத் தவிர மற்ற ஒவ்வொரு சந்திப்பின்போதும் ஏதாவது ஒரு வேலை வந்துருது.... நேத்து ஒரு கான்ஃப் கால் மாலை 3:30 மணியிலேருந்து போயிட்டே இருந்துது... வேலை முடிய ராத்திரி 9 மணி ஆயிடுச்சு.. முக்கியமா உங்களை சந்திக்கும் வாய்ப்பை தவற விட்டுட்டேன் :)))

அறிவிலி said...

//அப்பாவி முரு said...
பதிவுக்கு நான் தான் லேட்டா...

அண்ணே பதிவு சூப்பர்...//

ஆனா லேட்டஸ்ட். நன்றி அப்பாவி

அறிவிலி said...

//Mahesh said...
ஆஹா... வெகு விமரிசையா நடந்திருக்கு... அது என்னமோ தெரியல, ஒரே ஒரு சந்திப்பைத் தவிர மற்ற ஒவ்வொரு சந்திப்பின்போதும் ஏதாவது ஒரு வேலை வந்துருது.... நேத்து ஒரு கான்ஃப் கால் மாலை 3:30 மணியிலேருந்து போயிட்டே இருந்துது... வேலை முடிய ராத்திரி 9 மணி ஆயிடுச்சு.. முக்கியமா உங்களை சந்திக்கும் வாய்ப்பை தவற விட்டுட்டேன் :)))//

அடுத்த முறை நிச்சயம் சந்திப்போம். நன்றி மகேஷ்.

Thamira said...

கோவிஜியும், ஜோஸப்ஜியும் தெரிகிறது.. மற்றவர்கள் யாரென கொஞ்சம் குளோஸப் போட்டிருக்கலாமே..

(ஹிஹி.. பதிவர் சந்திப்புன்னா இது டெம்பிளேட் பின்னூட்டம்..)

அறிவிலி said...

///ஆதிமூலகிருஷ்ணன் said...
கோவிஜியும், ஜோஸப்ஜியும் தெரிகிறது.. மற்றவர்கள் யாரென கொஞ்சம் குளோஸப் போட்டிருக்கலாமே..

(ஹிஹி.. பதிவர் சந்திப்புன்னா இது டெம்பிளேட் பின்னூட்டம்..)///

வாங்க ஆ.மூ.கி.
டொன் லீ இடுகையில நல்ல க்ளோசப் ஃபோட்டோஸ் இருக்கு. நன்றி

வலசு - வேலணை said...

கடைசியா என்ன முடிவு எடுத்தீங்க?

கிஷோர் said...

அருமையான தொகுப்பு நண்பரே, நன்றி

அறிவிலி said...

//வலசு - வேலணை said...
கடைசியா என்ன முடிவு எடுத்தீங்க?//

அதாங்க பிரச்னையே. அடுத்த கூட்டத்திலேருந்து முடிவெடுக்க கூடிய பிரச்னையா விவாதிக்கலாம்னு முடிவு எடுத்தோம்.

(குழப்பிட்டனோ.. கோச்சுக்காதீங்க.)

வருகைக்கு நன்றி...
உங்கள் பதிவு படித்தேன். மிக அருமை.

அறிவிலி said...

//கிஷோர் said...
அருமையான தொகுப்பு நண்பரே, நன்றி//

நன்றி கிஷோர்.

priyamudanprabu said...

இந்த முறை என்னால் வரமுடியவில்லை
அடுத்த பதிவில் சந்திப்போம்

அறிவிலி said...

//பிரியமுடன் பிரபு said...
இந்த முறை என்னால் வரமுடியவில்லை
அடுத்த பதிவில் சந்திப்போம்//

நிச்சயம் பிரபு, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சந்திக்கலாம். வருகைக்கு ந்ன்றி.

இலால்குடி பினாத்தல்கள் said...

எங்கே உங்க போட்டோவைக் காணோம்? மூணாவது படத்துல உக்காந்திருக்கறவர் போட்டோவைப் பாத்தா கண்டிப்பா தீர்த்த யாத்திரை இருந்திருக்கும் போல தோணுது.

அறிவிலி said...

//இலால்குடி பினாத்தல்கள் said...
எங்கே உங்க போட்டோவைக் காணோம்? மூணாவது படத்துல உக்காந்திருக்கறவர் போட்டோவைப் பாத்தா கண்டிப்பா தீர்த்த யாத்திரை இருந்திருக்கும் போல தோணுது.//

சே..சே. அவர் கண்ணாடிய கழட்டி க்ளீன் பண்ணிக்கிட்றுக்காரு..

அறிவிலி said...

@ இலால்குடி பினாத்தல்கள்

என் படங்களுக்கு இங்கே செல்லவும்

http://donthelee.blogspot.com/2009/04/18042009_19.html

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.