Friday, July 17, 2009

சுவாரஸ்யமான அதிர்ச்சி

ஹேக்கிங், ஆப்பு, ஆப்பரசன், சக்திவேலின் சதி என்று தமிழ் பதிவுலகமே பற்றி எரிந்துகொண்டிருக்கும் போது தனது பெயரிலேயே நெருப்பை வைத்துக்கொண்டிருக்கும் செந்தழல் ரவி, பதிவர்களின் கவனத்தை திருப்பும் முயற்சியில் இந்த "சுவாரஸ்ய வலைப்பதிவு விருதுகளை...!!! " ஆரம்பித்து வைத்தார். தமிழ்மணம் புகழ் (இப்போ கூகிள்?)சக்திவேல் பதிவில் பிஸியாக இருக்கையிலும் இவர் இதைப்பற்றி யோசித்ததற்காக பாராட்டியே ஆக வேண்டும்.

மிகவும் அதிர்ச்சி தரும் வகையில், விருது ஆரம்பிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குள் ஆதிமூலகிருஷ்ணன் வாயிலாக என்னை வந்தடைந்து விட்டது.(இதற்கான உங்கள் கண்டணங்களை நீங்கள் அவருடைய இடுகையிலேயே தெரிவிக்கலாம்.)


ஒரு வாசகனாக நான் ரசிக்கும் மேலும் ஆறு பதிவர்களுக்கு இந்த விருதை நான் பாஸ் செய்யவேண்டும். அந்த பதிவர்களும் அவர்களின் பதிவுகளில் நான் மிகவும் ரசித்த இடுகைகளின் சுட்டிகளும் கீழே...

முதலாவதாக துக்ளக் - மகேஷ்

பயணக்கட்டுரை,கவிதை,கதை,சினிமா விமர்சனம் என்று வெரைட்டியாக கலக்கும் இவரின் பதிவுகளில் மிகவும் பிடித்தது பணியிட பாதுகாப்பு பற்றிய இவரின் இடுகைகளான

பணியிடத்தில் பாதுகாப்பு
உலக பணியிட பாதுகாப்பு நாள் - ஏப்ரல் 28

இரண்டாவதாக ச்சின்னப் பையன் பார்வையில் - சத்யா

பதிவுலகின் க்ரேஸி மோகன்.இயலபான நகைச்சுவை நடையில் அசத்துபவர். உங்களுக்கு ப்ளட் ப்ரெஷர், டென்ஷன், அடிக்கடி கோபம் போன்ற பிரச்சினைகள் இருந்தால் இவர் எழுத்துகளை படித்து சிரித்து நிவாரணம் பெறலாம்.

முக்கியமாக "கடையோட மாப்பிள்ளை" என்ற இந்த நாடகத்தொடர்.

மூன்றாவதாக சும்மா -வலசு வேலணை

சரளமான எழுத்து நடையில் அசத்துகிறார். இவருடைய வேரென நீயிருந்தாய் தொடரின் அனைத்து பகுதிகளும் அவசியம் படிக்க வேண்டியவை.

நான்காவதாக நந்தாவிளக்கு

சமீபத்தில்தான் இவருடைய பதிவுக்கு சென்றேன். இவருடைய ""மூன்றாம் கை"" படிப்பவர்கள் அனைவராலும் நிச்சயம் பாராட்டப்படும்.

ஐந்தாவதாக "அப்பாவி" - அப்பாவி முரு

உலக நடப்புகளை பற்றிய தன் கருத்துகளை மண்டையில் ஆணி அடிப்பது போல் சொல்பவர். பெரும்பாலான பதிவுகளில் பின்னூட்டமிட்டு கருத்துகளை தெரிவிப்பவர்.

இவருடைய "புளி காய்ச்சலை" நீங்களும் ரசிப்பீர்கள்.

ஆறாவதாக "இட்லி வடை" - யாருன்னே தெரியாது

கிட்டத்தட்ட ஒரு நியூஸ் பேப்பரே நடத்திக்கொண்டு இருக்கிறார். பெரும்பாலும் இந்திய நாட்டு நடப்பை இவர் மூலமாகத்தான் தெரிந்து கொள்கிறேன். இவர் (அல்லது இவர்கள்) என் இடுகையை படிக்கவோ அல்லது அவர்கள் பதிவில் விருதை போட்டுக்கொள்ளவோ வாய்ப்பில்லை. என்றாலும் நான் தினமும் படிக்கும் ஒரு பதிவை குறிப்பிட வேண்டும் என்று நினைத்தேன்.

பி.கு. 1 :- மகேஷ்-ஆதியின் பதிவில் உங்கள் பின்னூட்டத்தை நான் படிக்கவில்லை.
பி.கு. 2 :- "இந்த விருது உங்களுக்கு கிடைக்கும்னு நினைச்சீங்களா?", "பதிவுலகத்துக்கு வரலைன்னா என்ன பண்ணிகிட்ருப்பீங்க?" போன்ற கேள்விகளுடன் வரும் நிருபர்கள் தயவு செய்து நாளை வரவும். இன்று சிங்கை பதிவர்கள் மாநாடு இருப்பதால் நான் ரொம்ப பிஸி.

15 comments:

சென்ஷி said...

விருது பெற்றமைக்கும், விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் தங்களுக்கும் பெற்ற மற்றவர்களுக்கும்.

அறிவிலி said...

@ சென்ஷி - நன்றி, வருகைக்கும் ஊக்கத்திற்கும்

அறிவிலி said...

@ ஆப்பு - சொருகுபவர்களுககும் சொறிவேன்.

(என்னைப் போல ஜுஜுபி பதிவர்கள்கிட்ட எல்லாம் உங்க நேரத்த விரயம் பண்ணாதீங்க, ஆப்பு)

அறிவிலி said...

@ நட்புடன் ஜமால் - வாங்க ஜமால், நன்றி.

ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.

முனைவர்.இரா.குணசீலன் said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் .........

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் அனைவருக்கும்

Nundhaa said...

என் பதிவை பட்டியலிட்டு, ஸ்வாரஸ்யமாக இருக்கிறது என்று சொன்னதற்கு மிக்க நன்றி ... மகிழ்ந்தேன்

செந்தழல் ரவி said...

வாழ்த்துக்கள்...விருதை பக்கத்தில் டிஸ்ப்ளே செய்யவும்...

வலசு - வேலணை said...

அட!
எனது எழுத்துக்களையுமா இரசிக்கிறீர்கள்?
மிக்க நன்றி

அப்பாவி முரு said...

ஆ...ரெண்டு!!!

திருப்பிக்குடுக்கணுமில்ல...

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஏற்புக்கு நன்றி. நீங்கள் வழங்கியவர்களுக்கும் வாழ்த்துகள். சிலரை அறிவேன். சிலரை இனி அறிவேன்.

Mahesh said...

ரொம்ப நன்னி சாரே...

you scratch me... I scratch you... ஹி ஹி ஹி

சுபானு said...

வாழ்த்துகள் உங்களுக்கும் பெற்ற மற்றவர்களுக்கும்.

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.