Monday, July 6, 2009

முட்டை தொழிலும், முட்டைக்கு எதிரான தொழிலும் - இந்தியா ஒளிர்கிறது (இ)

தொடர்புடைய முந்தைய இடுகைகள்
மெக் டொனால்ட்ஸும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்ஸும் - இந்தியா ஒளிர்கிறது (ஆ)
இந்தியா ஒளிர்கிறது - (அ)

"சார், ஆட்டோ வேணுமா சார்?"

"ஆமாப்பா, ஆனா ஒரு ஆட்டோ போதாது, லக்கேஜ் நெறய இருக்கே. இன்னோரு ஆட்டோவும் கூப்புடுங்க"

"வேணாம் சார்,அட்ஜஸ்ட் பண்ணி போயிரலாம். லக்கேஜ்லாம் நான் உள்ற வைக்கிறேன்"

திருச்சி கே.கே. நகர் போவதற்கு டி.வி.எஸ் டோல்ககேட்டில் இறங்குவதற்கு பதிலாக, பால்பண்ணையிலேயே தவறாக இறங்கியபின், எங்களை வரவேற்ற ஆட்டோகாரருக்கும் எனக்கும் நடந்த சம்பாஷனைதான் மேலே.

லக்கேஜையெல்லம் நன்றாக வைத்துவிட்டு, எங்களையெல்லாம் நடுவில் திணித்து ஒரு வழியாக கூட்டிக்கொண்டு போய் சேர்த்துவிட்டார்.

மறுநாள், சேலத்தில் உறவினர் திருமணத்திற்கு போக வேண்டியிருந்தது. நாலில் மூணு பெட்டி முழுக்க மனைவியின் துணிமணிகள் இருந்தாலும், கீழ் வரும் வசனத்தால் முதல் நாளே ஷாப்பிங் கிளம்பி விட்டோம்.

"ஏங்க கல்யாணத்துக்கு போட நல்ல ட்ரெஸ்ஸே இல்லீங்க, முதல்ல போய் ரெண்டு செட் வாங்கணும்"

திருச்சியில் துணி வாங்கும் சீசன் இல்லை போலும். சென்னை சில்க்ஸ், ஆனந்தா போன்ற பெரிய கடைகளில் கூட ஈ ஓட்டிக்கொண்டு ஒரு வாடிக்கையாளருக்கு நான்கு விற்பனை பிரதிநிதிகள் வீதம் துரத்தி கொண்டிருந்தார்கள்.

வெரைட்டிகளும் அதிகம் இல்லை. ஆனால் விலை மட்டும் அசுர விலையாக இருந்தது. அஞ்சு லிட்டர் தண்ணீரும், 2 லிட்டர் ஜூஸும் குடித்து பத்து கடைகள் ஏறி இறங்கிய பின் நகோடா மற்றும் சிவத்தில் பர்சேஸை முடித்து வீடு திரும்பினோம்.

அண்ணன் மற்றும் அக்கா குடும்பத்தினருடன் மறுநாள் சேலம் பயணம். நீண்ட நாட்களாக விட்டுப்போன குடும்ப விஷயங்களயெல்லாம் கேட்ச் அப் செய்வதற்கு இந்த 4 மணிநேர பயணம் உதவியது.

சென்னை திருச்சியை போலவே திருச்சி சேலம் சாலைகளும் மிக நன்றாகவே போட்டு விட்டார்கள். இங்கும் பால வேலைகள் மட்டுமே பெண்டிங்.

முன்பெல்லாம் நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் எக்கச்சக்கமாக கோழிப்பண்ணைகள்தான் வரும். இப்போது கோழிப்பண்ணைகளுடன் கூடவே ஏராளமாக பள்ளிகளும் தென்படுகின்றன.இந்த மாவட்டததின் முக்கிய தொழிலாக முட்டைகளுடன் கல்வியும் சேர்ந்துவிட்டது. என்ன ஒரு வித்தியாசம் பண்ணைகளில் முட்டைக்காக உழைக்கிறார்கள்.
பள்ளிகளில் முட்டை வாங்காமல் இருக்க உழைக்கிறார்கள். இந்த பள்ளிகளில் இருந்து பல மாணவர்களும் மாநில அளவில் ரேங்க் வாங்குவதால் அட்மிஷனுக்கு கூட்டம் அலைமோதுகிறது.

திருமணத்தில் பலப்பல வருடங்களாக பார்க்காத சொந்தங்களையெல்லாம் காணும் பாக்கியம் கிடைத்தது. பழுத்த பழங்களாக இருக்கும் முந்தைய தலைமுறையினரையும், தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும் அடுத்த தலைமுறையினரையும் சந்தித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.

திருச்சியில் தென்னூர் மற்றும் பாலக்கரை மேம்பாலங்கள் போக்குவரத்து நெரிசலை பெரிதும் குறைக்க உதவியிருக்கிறது. மத்திய பேருந்து நிலையத்தையும் நன்றாக விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.மாறாமல் இருப்பது பேருந்து நிலையத்தில் நுழைந்ததும் வரவேற்கும் சிறுநீர் மணம் மட்டும்தான்.

அடுத்த 3 நாட்களும் 4 வேளை சாப்பாடும் தூக்கமுமாக சுகமாக கழிந்தது. வரப்போகும் நீண்ட சுற்றுலாவுக்கு இந்த ஒய்வு எவ்வளவு உதவியது என்பது பின்னர்தான் புரிந்தது.

12 comments:

கோவி.கண்ணன் said...

//மறுநாள், சேலத்தில் உறவினர் திருமணத்திற்கு போக வேண்டியிருந்தது. நாலில் மூணு பெட்டி முழுக்க மனைவியின் துணிமணிகள் இருந்தாலும், கீழ் வரும் வசனத்தால் முதல் நாளே ஷாப்பிங் கிளம்பி விட்டோம்.

"ஏங்க கல்யாணத்துக்கு போட நல்ல ட்ரெஸ்ஸே இல்லீங்க, முதல்ல போய் ரெண்டு செட் வாங்கணும்"//

:)

//மாறாமல் இருப்பது பேருந்து நிலையத்தில் நுழைந்ததும் வரவேற்கும் சிறுநீர் மணம் மட்டும்தான்.
//

இல்லாட்டி அது திருச்சி பேருந்து நிலையம் தான் என்று எப்படி தெரிந்து கொள்வது !
:)

அறிவிலி said...

@ கோவியார்
//இல்லாட்டி அது திருச்சி பேருந்து நிலையம் தான் என்று எப்படி தெரிந்து கொள்வது !
:)//
பிரபல பதிவர்கள் சொல்வது போல் ஏதாச்சும் செய்யணும் பாஸ்
:(

ஆ.ஞானசேகரன் said...

//மாறாமல் இருப்பது பேருந்து நிலையத்தில் நுழைந்ததும் வரவேற்கும் சிறுநீர் மணம் மட்டும்தான்.//

இருக்கட்டும் இருக்கட்டும்

அறிவிலி said...

///ஆ.ஞானசேகரன் said...
//மாறாமல் இருப்பது பேருந்து நிலையத்தில் நுழைந்ததும் வரவேற்கும் சிறுநீர் மணம் மட்டும்தான்.//

இருக்கட்டும் இருக்கட்டும்///

அய்யய்யோ... அப்படியே இருக்கட்டுங்கறீங்களா?
ஞான்சேகரன்.

pappu said...

aஅந்தப் பக்கம் ஃபேக்ட்ரி மாதிரி பள்ளிகளில் இன்ஜினியர்களையும், டாக்டர்களையும் உருவாக்குவதாக கேள்வி!

அப்பாவி முரு said...

//திருமணத்தில் பலப்பல வருடங்களாக பார்க்காத சொந்தங்களையெல்லாம் காணும் பாக்கியம் கிடைத்தது. பழுத்த பழங்களாக இருக்கும் முந்தைய தலைமுறையினரையும், தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும் அடுத்த தலைமுறையினரையும் சந்தித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.//

நான்கு, ஐந்து வருசம் பார்க்காமல் இருந்து, திரீரென பார்க்கும் போது சிலரின் மாற்றத்தை ஏற்ற்குக் கொள்ளக்கூட முடியாது.

சு(சோ)கமான அனுபவமாக இருக்கும்!?

அறிவிலி said...

//அப்பாவி முரு said...
//திருமணத்தில் பலப்பல வருடங்களாக பார்க்காத சொந்தங்களையெல்லாம் காணும் பாக்கியம் கிடைத்தது. பழுத்த பழங்களாக இருக்கும் முந்தைய தலைமுறையினரையும், தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும் அடுத்த தலைமுறையினரையும் சந்தித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.//

நான்கு, ஐந்து வருசம் பார்க்காமல் இருந்து, திரீரென பார்க்கும் போது சிலரின் மாற்றத்தை ஏற்ற்குக் கொள்ளக்கூட முடியாது.

சு(சோ)கமான அனுபவமாக இருக்கும்!?//


ஆமாங்க.. அப்பாவி. அதுவும் இந்த பசங்க வளர்ந்து
நிக்கறத பாக்கும்போது நம்ம வயசு ஞாபகம் வந்துருது.

அறிவிலி said...

//pappu said...
aஅந்தப் பக்கம் ஃபேக்ட்ரி மாதிரி பள்ளிகளில் இன்ஜினியர்களையும், டாக்டர்களையும் உருவாக்குவதாக கேள்வி!//

ஆமாங்க.. பாப்பு. ரீசஷன்லயும் நல்லா போற பிசினஸ் இதுதான்.

வலசு - வேலணை said...

மலைக்கோட்டை நேரில் பார்த்ததிலும் பார்க்க படத்தில் மிகவும் அழகாக இருக்கிறது

அது சரி said...

அது என்ன முட்டைக்கு எதிரான தொழில்னு நினைச்சி வந்தேன்...தலைப்பு சூப்பர்...:0))

அது சரி said...

//
அறிவிலி said...
@ கோவியார்
//இல்லாட்டி அது திருச்சி பேருந்து நிலையம் தான் என்று எப்படி தெரிந்து கொள்வது !
:)//
பிரபல பதிவர்கள் சொல்வது போல் ஏதாச்சும் செய்யணும் பாஸ்
//

ஏதாச்சும் செய்ய வேண்டாம்...மக்கள் இப்ப செய்றதை செய்யாம இருந்தாலே போதுமே :0)))

ஆமா, அது என்ன திருச்சி பஸ் ஸ்டாண்ட்?? எனக்கு தெரிஞ்சி எல்லா பஸ் ஸ்டாண்டும் அப்பிடி தான் இருக்கு...சேலம் புது பஸ் ஸ்டாண்ட், கோயம்பத்தூர் மொஃபஸல் பஸ் ஸ்டாண்ட்....எல்லாம் யூரியா ஃபேக்டரி மாதிரி தான இருக்கு??

அறிவிலி said...

@அது சரி

"அது சரி" அது சரி

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.