தொடர்புடைய முந்தைய இடுகை "இந்தியா ஒளிர்கிறது (அ)"
சிங்கை --> சென்னை
பாதிக்கு பாதி விலைக்கு டிக்கட் தருகிறார்கள் புலி மார்க் விமானத்தில் என்று 3 மாதம் முன்பே வாங்கியாகிவிட்டது. ஆனால் தவிச்ச வாய்க்கு தண்ணி தர மாட்டார்கள், லக்கேஜும் ஒருவருக்கு பதினைந்து கிலோதான்.
எத்தனையோ முறை வீட்டிலேயே எடை போட்டு பார்த்து சென்றாலும் செக் இன் சமயத்தில் சப்பை மூக்கு காரிகள் பார்க்கும்போது அரை கிலோ ஒரு கிலோ அதிமாகவே காட்டுகிறது.
பெண்களுக்கு ஒரு கைப்பை இலவசமாக எடுத்து செல்லலாம்.அதிகப்படி லக்கேஜையெல்லாம் ஒரு மத்தள சைஸ் பையில் போட்டு தன் தோளில் மாட்டிக் கொண்டு "ம்ம்... இப்ப எடை போடுங்க.. பார்க்கலாம்" என்றாள் என் மனைவி. சப்பை மூக்கி மேலும் கீழுமாக "பட்ஜெட் ஏர்லைன்ஸுக்கு ஏத்த ஆளுதான்" என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு போர்டிங் பாஸை போட்டு கொடுத்து விட்டாள்.
இரவு 8 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் 8:15 ஆகியும் கிளம்பும் அறிகுறியே காணவில்லை. புதிதாக யாரும் ஏறுகிற மாதிரியும் தெரியவில்லை. 08:30 க்கு பைலட்டிடமிருந்து ஒரு அறிவிப்பு. "செக் இன் செய்த பயணிகள் சிலர் இன்னமும் விமானத்திற்கு வந்து சேரவில்லை,எனவே தாமதத்திற்கு மன்னிக்கவும்" என்று.
9 மணி சுமாருக்கு 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் கை நிறைய மெக்-டொனால்ட்ஸ் பைகளுடன் வந்து சேர்ந்தனர். "ஒம்பது மணிக்கி ப்ளைட்டின்னு நெனச்சி சாப்பாட்டு கடையில ஒக்காந்திட்டம்" என்று பல் குத்திக்கொண்டே விளக்கம் வேறு.
09.30 மணிக்கு போய் சேர்ந்துவிட்டால், ஓண்ணரை மணி நேர இடை வெளியில் மலைக்கோட்டை எக்ஸ்ப்ரெஸ்ஸை தாம்பரத்தில் பிடித்துவிடலாம் என்று முன்பதிவு செய்து வைத்திருந்த என் திட்டம் பனால்!!! என்று சிம்பாலிக்காக சிக்கன் ஏப்பம் விட்டு காண்பித்தார் மெக்-டொனால்ட் குடும்ப பெரிசு ஒருத்தர்.
சென்னையில் இறங்கி வெளியே வந்தால் முகமூடி அணிந்து கொண்டு ஏகப்பட்ட பேர் நிற்கவும், "போச்சுறா, இப்பல்லாம் விமான நிலையத்தையே ஹைஜாக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க போல" எனறு பயத்துடன் சொன்னேன். பையன்தான் " இல்லப்பா, ஸ்வைன் ஃப்ளூவுக்காக செக் பண்றாங்க" என்று தைரியமூட்டினான். இந்த பார்மாலிட்டியெல்லாம் முடித்து வெளியில் வர பதினோரு மணியே ஆகிவிட்டது.
ஏற்கெனவே சொல்லி வைத்திருந்த டாக்ஸி ட்ரைவர் காத்து கொண்டிருந்ததார்.
"தாம்பரத்துல ஆம்னி பஸ்லாம் நி்க்கற எடத்துக்கு போங்க, ஏதாவது பஸ்ஸ புடிச்சு போயிர்றோம்" என்றேன்.
போகிற வழியில் RR travels - A/C Volvo வை ஒவர் டேக்கி நிறுத்தி, ட்ரைவர் போய் இடம் இருக்கிறதா என்று கேட்டு ஓடி வந்து "சீட்டு இருக்கு சார், வாங்க" என்றார்.
"சின்ன லக்கேஜையெல்லாமும் பின்னாடியே போட்ருங்க சார், பஸ்ல ஒக்காற மட்டும்தான் எடம் இருக்கு" என்று பஸ் ட்ரைவர் சொல்லவும் சந்தேகம் வந்து விசாரித்தபோதுதான் தெரிந்தது ட்ரைவர் கேபினில்தான் உட்கார்ந்து வர வேண்டும் என்பது. (அதுக்கும் ஆளுக்கு 400 ரூபாயாம் - எப்படியெல்லாம் ஏமாத்துறாய்ங்கப்பா..)
திரும்பவும் அத்தனை லக்கேஜையும் கீழிறக்கி,வேறு பஸ்ஸை பிடித்து வந்தது ஒரு பெரிய கதை.
சென்ற முறை திண்டிவனம் வரை மட்டுமே இருந்த 4 வழி சாலை இப்போது திருச்சி வரையிலும் போட்டாகிவிட்டது. நல்ல தரத்துடன் அற்புதமாகவே இருக்கிறது. இடை இடையே பாலங்களுக்கான வேலை நடைபெறுவதால் தடங்கல்கள் இருந்தாலும், பயணம் சுகமாகவே இருக்கிறது. பாலங்களும் முடிந்து விட்டால் உலகத்தரமான சாலைகளாக இருக்கும் என்பது திண்ணம்.
அந்த ஐந்து பேரால் எனக்கு 2000 ரூபாய், 5 மணி நேரம் மற்றும் ஒரு நாள் தூக்கமும் வீண். மற்ற 150 பயணிகளும் என்னவெல்லாம் கஷ்டப்பட்டார்களோ பாவம்.
பி.கு:- பயணத்தின்போதே எழுத வண்டும் என்று நினத்தேன். மடிக்கணிணி மக்கர் செய்துவிட முடியாமல் போய்விட்டது. சிங்கப்பூர் திரும்பி 4 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் அலுவலகத்தில் சுவர் முழுக்க ஆணி அடித்து வைத்திருந்தார்கள். பிடுங்கி போட்டுவிட்டு மூச்சு விட இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது. தில்லி, ஆக்ரா, சிம்லா, மனாலி பயண அனுபவங்களும், புகைப்படங்களும் வரும் இடுகைகளில் தொடரக்கூடும்.
Thursday, July 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
once i got some experience from Chennai airport to Madurai that day i am also from Singapore to Chennai night flight. my father pass away so i have to reach next day morning so i compromise my self and traveling that same driver cabin here i have to mention one thing that driver ask me a scent bottle? still i cant forget that crucial situation.
//ஆனால் அலுவலகத்தில் சுவர் முழுக்க ஆணி அடித்து வைத்திருந்தார்கள். பிடுங்கி போட்டுவிட்டு மூச்சு விட இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது//
ஏய்... சூப்பரப்பு...
//ஆனால் அலுவலகத்தில் சுவர் முழுக்க ஆணி அடித்து வைத்திருந்தார்கள். பிடுங்கி போட்டுவிட்டு மூச்சு விட இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது//
ஹய்யோ... ஹய்யோ.... நாங்களா இருந்தா செவுத்தை இடிச்சுத் தள்ளியிருப்போம் :)))
:)
@ Jegatheesh - Must have been a very bad experience. Should have given him insect sprays like HIT or Baygon as scent.
///அப்பாவி முரு said...
//ஆனால் அலுவலகத்தில் சுவர் முழுக்க ஆணி அடித்து வைத்திருந்தார்கள். பிடுங்கி போட்டுவிட்டு மூச்சு விட இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது//
ஏய்... சூப்பரப்பு...///
நான் நெறய ஆணி புடுங்கறது உங்களுக்கு சூப்பரா?
///Mahesh said...
//ஆனால் அலுவலகத்தில் சுவர் முழுக்க ஆணி அடித்து வைத்திருந்தார்கள். பிடுங்கி போட்டுவிட்டு மூச்சு விட இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது//
ஹய்யோ... ஹய்யோ.... நாங்களா இருந்தா செவுத்தை இடிச்சுத் தள்ளியிருப்போம் :)))///
அட ஏங்க, உலகம் இருக்கற இருப்புல, எல்லா ஆணியையும் சத்தம் போடாம புடுங்கி போட்டுட்டு அடுத்து எப்போன்னு போய் அப்பாவியா கேட்டுக்கறதுதான் நல்லது.
//முத்துலெட்சுமி/muthuletchumi said...
:)//
அழகான புன்னகைக்கு நன்றி.
இது என்ன ஸ்கூல் பஸ் மாதிரி வண்டிய போட்டு எடுக்குறாங்க!
அழகான வர்ணிப்பு.
இதே போல நானும் ஒரு இடுகையிட்டிருந்தேன், இந்தியா திரும்பி வந்த போது.
http://joeanand.blogspot.com/2009/05/blog-post.html
அடுத்த கட்டுரையையும் சீக்கிரம் வெளியிடுங்கள்.
///எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.
ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.///
அம்மாடி..
திருச்சி எப்படி இருக்குங்கோ
@pappu - ஆமாங்க பாப்பு, செக் இன் செய்த பயணிகளை கட்டாயமாக அழைத்து சென்றாக வேண்டும்.
@ ஆ.ஞானசேகரன் - வாங்க ஞானசேகரன். நம்ம ஊரு நல்லாவே இருக்குங்க.
Joe said...
//அழகான வர்ணிப்பு.
இதே போல நானும் ஒரு இடுகையிட்டிருந்தேன், இந்தியா திரும்பி வந்த போது.
http://joeanand.blogspot.com/2009/05/blog-post.html
அடுத்த கட்டுரையையும் சீக்கிரம் வெளியிடுங்கள்.//
உங்கள் இடுகை பிரமாதம்.
எங்கிட்ட அடுத்த இடுகை போட சொல்லி கேட்ட முதல் மனிதர் நீங்கதான். மிக்க நன்றி.
சிங்கை அண்ணாச்சி,
அனுபவம் அசத்தல். தாமதமாக வரும் பயணிகளுக்காக காத்திருக்கிறார்களா ? அவ்வ்வ்வ்வ்
தொடருங்கள்!
அனுபவப் பதிவு நன்று!
//கோவி.கண்ணன் said...
சிங்கை அண்ணாச்சி,
அனுபவம் அசத்தல். தாமதமாக வரும் பயணிகளுக்காக காத்திருக்கிறார்களா ? அவ்வ்வ்வ்வ்//
வாங்க கோவியாரே..
நான் சொன்னது செக் இன் செய்த பிறகு காணாமல் போன பயணிகள்.விமான நிலயத்திற்கே வரவில்லை என்றால் யாருக்கும் பிரச்சினை இல்லை.
நன்றி
//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
தொடருங்கள்!
அனுபவப் பதிவு நன்று!//
நன்றி, ஜோதிபாரதி அவர்களே..
:)
@ஜெகதீசன் - புன்முறுவலுக்கு நன்றி.
ஆமா, எனக்கு ஒரு சந்தேகம். கோவி,ஜோதிபாரதி நீங்க எல்லாரும் ஒரே இடத்துல அஸெம்பிள் ஆயிருக்கீங்களா? 10 நிமிஷத்தில 3 சிங்கை பதிவர்களோட கமெண்ட் வந்திருக்கே..
நல்லாயிருக்கு உங்கள் பயண குறிப்பு
எப்ப வந்துட்டு எப்ப போனீங்க.. சொல்லவேயில்ல..!! அப்புறம் தைரியமா அடுத்த பதிவுகளையும் போடுங்க.. பாத்துடுறோம்.
@ஆதி
வாங்க ஆதி, முந்தைய இடுகையில் குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் வீடு மாற்றும் மும்முரத்தில் கவனிக்க நேரமிருந்திருக்காது.
சந்திப்பு எதுவும் நடந்தால் கலந்து கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால் அதுவும் முடியவில்லை.ந்டேசன் பார்க் சந்திப்புக்கு முந்தைய நாள் திரும்பிவிட்டேன்.ஒரு நாளில் மிஸ் ஆகிவிட்டது.
:-)
(நாங்களும் பிரபலம் தான்)
//♫சோம்பேறி♫ said...
:-)
(நாங்களும் பிரபலம் தான்)//
ம்.
சிம்லா, மணாலி பதிவை சீக்கிரம் எதிர்ப் பார்க்கிறோம்
//எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.
//
அடப்பாவிகளா இப்படிலாமா?
Post a Comment
எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.
ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.