Thursday, July 23, 2009

"அப்பா, இதுவும் டெல்லி தானா?" -இந்தியா ஒளிர்கிறது (உ)

தொடர்புடைய முந்தைய இடுகைகளுக்கு "இந்தியா ஒளிர்கிறது"
இடுகையில்தான் இத்தனை இடைவெளியே தவிர, தில்லியில் இறங்கியதிலிருந்தே பரபரப்புதான்.

விமான நிலையத்திலிருந்து கரோல்பாகில் இருந்த ஹோட்டலுக்கு ப்ரீ பெய்ட் டாக்ஸியில் செல்லலாம் என்று கவுண்டரில் பணத்தை கட்டிவிட்டு வெளியில் வந்தால் ஆதவன் (பதிவர் இல்லீங்க) ஃபுல் பார்மில் அடித்து ஆடிக்கொண்டிருந்தார். ஆர்.வி. உதயகுமார் போன்ற இயக்குனர்கள் வந்தால் வெட்டவெளியில் நடிகைகளின் தொப்பையில் முட்டையை உடைத்து ஊற்றி, அது அப்படியே ஆஃப் பாயிலாக மாறுவதை காட்டியிருப்பார்கள், அத்தனை சூடு.

டாக்ஸி ட்ரைவர் முகம் முழுவதையும் மறைத்து பெரிய பெட்ஷீட் சைஸுக்கு துணியை சுற்றிக்கொண்டு இருந்தார்.வெளிநாட்டு பயணிகளிடமிருந்து தொற்றக்கூடிய பன்றி காய்ச்சலிடமிருந்து தப்பிக்கத்தான் இப்படி இருக்கிறாரோ என்று பார்த்தால் தெருவில் ஸ்கூட்டர், மோடடார் சைக்கிள் ஒட்டுபவர்களெல்லாம் கூட இதேபோல்தான் இருந்தார்கள்.



தெருக்களில் முகமூடிகளுடன்

எங்கள் கம்பெனியில் ஆயிரம் டிகிரிக்கு இரும்புக் குழம்பை காய்ச்சும் ஃபர்னஸுக்கு பக்கத்தில் நிற்கும் போது எப்படி இருக்குமோ அப்படி ஒரு உஷ்ணக் காற்று, ஓடிக் கொண்டிருக்கும் டாக்ஸியின் ஜன்னல் வழியாக அடிக்கவும்தான் இந்த முகமூடிகளுக்கான விளக்கம் கிடைத்தது.

ஹோட்டலுக்கு போய்ச் சேர்ந்து சிறிது இளைப்பாறலுக்குப் பின் "தில்லி பை நைட்" டூருக்கு கிளம்பி விட்டோம்.முதலில் சென்றது ஒரு வெட்டவெளி சிவன் கோயிலுக்கு. பிரமிக்கவைக்கும் பெரிய பெரிய சிலைகள். பெரிய்ய்ய சிவன் சிலையை தவிர பிள்ளையார் மற்றும் ராதா கிருஷ்ணண் சிலைகளும் உண்டு. அழகான பூங்காவும் சிலைகளுமாக ரம்மியமாக இருந்தது.



அங்கிருந்து எல்லா நாட்டு தூதரகங்களும் இருக்கும் சாணக்யபுரி வழியாக ராஷ்டிரபதிபவனுக்கு வெளியே கொண்டு போய் இறக்கி விட்டார்கள்.என் மனைவியும் மகனும் தொலைக்காட்சியிலும் சினிமாவிலும் (மௌன ராகம்) மட்டுமே பார்த்திருந்த ராஷ்டிரபதிபவன், சௌத் ப்ளாக், நார்த் பிளாக் மற்றும் ராஜ் பத் சாலை, தூரத்தில் இந்தியா கேட் போன்றவற்றை நேரில் கண்டதும் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியும் பெருமிதமும் மின்னியதை நான் ரசித்துக் கொண்டிருந்தேன்.






குடியரசுதின அணிவகுப்பு நடககும் ராஜ் பத் சாலையில் பீடு நடைபோட்டு நடந்து கொண்டே இந்தியா கேட்டை அடைநது விடடோம்.

இதன் பிறகு நாங்கள் சென்றது, செங்கோட்டையில் நடக்கும் ஒலி ஓளி காட்சிக்கு. ஒலி ஒளி காட்சியில் முகலாய சாமராஜ்ய வரலாற்றையும் செங்கோட்டையில் ராணிகள் எங்கே குளித்தார்கள், எங்கே தூங்கினார்கள், எத்தனை பிள்ளை பெற்றார்கள் என்பதையெல்லாம் கர.. கர.. குரலில் தட.. தட.. சத்தங்களுக்கு நடுவில் சொன்னார்கள். செங்கோட்டை போய் வரும் வழியில் பழைய தில்லி பகுதியை பார்த்துவிட்டு என் பையன் கேட்ட கேள்விதான் இந்த இடுகையின் தலைப்பு.

மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் மனாலியை நோக்கி பேருந்தில் கிளம்பி விட்டோம்.


உள்ளே ஒளிந்திருக்கும் "பிரபலம்" இல்லாத பதிவரை கண்டுபிடியுங்கள்

வரும் இடுககைகளில் சிம்லா, மனாலி,சண்டிகர், ஆக்ரா, மதுரா மற்றும் திரும்பவும் தில்லி.- தொடரும்.

5 comments:

Mahesh said...

//உள்ளே ஒளிந்திருக்கும் "பிரபலம்" இல்லாத பதிவரை கண்டுபிடியுங்கள்//

ஆஹா... அப்ப நீங்கதான் "தி வெட்ஜா"?

Mahesh said...

இந்த பதிவைப் படிச்சதும் தில்லியில் "கல்லி கல்லியா" சுத்தினதும் "சப்பா சப்பா சர்கா சலேன்..." பாட்டும் ஞாபகம் வந்துது.....

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள்

அறிவிலி said...

@Mahesh

ஹா..ஹா..நானும் 2 வருஷம் சுத்திருக்கேன்.(86-88). நிறைய மாற்றங்கள். கரோல் பாக் உருத்தெரியாமல் போய் விட்டது. தென்னிந்திய இளைஞர்களின் சொர்க்கமாக இருந்த இடத்தில் இப்போது அவர்களை காண்பதே அரிதாக இருக்கிறது.

வலசு - வேலணை said...

//
செங்கோட்டையில் நடக்கும் ஒலி ஓளி காட்சிக்கு. ஒலி ஒளி காட்சியில் முகலாய சாமராஜ்ய வரலாற்றையும் செங்கோட்டையில் ராணிகள் எங்கே குளித்தார்கள், எங்கே தூங்கினார்கள், எத்தனை பிள்ளை பெற்றார்கள் என்பதையெல்லாம் கர.. கர.. குரலில் தட.. தட.. சத்தங்களுக்கு நடுவில் சொன்னார்கள்.
//
நன்றாய் ரசித்ததை எங்களையும் ரசிக்க வைக்கிறீர்கள்.

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.